இலங்கை படையினர் மீனவர்களை தாக்குவதை இனியும் சகித்து கொள்ள முடியாது!

maithireyanமீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கச்சதீவை திரும்ப பெறுவதுதான் ஒரே வழியாகும். என அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கச்சதீவை திரும்ப பெறுவதுதான் ஒரே வழியாகும். என அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து பேசும் போது அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயலற்ற தன்மையால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

இலங்கை சிறையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனையும் மீறி மீனவர்களின் காவலை இலங்கை நீட்டித்துள்ளது.

2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தமிழக மீனவர்கள் 340 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. மத்திய அரசால் நாங்கள் கைவிடப்பட்டு விட்டோம். தமிழக மீனவர்கள் இந்திய கடற்பகுதியிலேயே தாக்கப்படுகிறார்கள்.

மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கச்சத்தீவை திரும்ப பெறுவதுதான் ஒரே வழியாகும். இலங்கை படை தாக்குவதை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.

தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு கண்டிப்புடன் தெரிவிக்க வேண்டும். சிறையில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

TAGS: