அகமதாபாத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்று பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறான்.
அகமதாபாத்தின் மணிநகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆரவ் பங்கஜ் நாயக்.
இவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது தீராத பற்று உள்ளது.
இதனால் மோடி மாதிரியே பேசுவதுடன், குஜராத் முதல்வராக வர வேண்டும் என்பது தான் தீராத ஆசையாக உள்ளது.
குறிப்பாக மோடி மாதிரி கையை உயர்த்தியும், நிறுத்தி நிதானமாகவும் பேசிக் கலக்குகிறான்.
அதுமட்டுமல்லாமல் குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சர்வ சாதாரணமாக பேசும் ஆரவ்வை, சோட்டா நரேந்திர மோடி என்றே அனைவரும் அழைக்கின்றனராம்.
கடைசியாக ஆகஸ்ட் 15ம் திகதி குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு அரங்கில், ஆயிரம் பேர் மத்தியில் சற்றும் பயமில்லாமல் பேசி கலக்கியுள்ளான் ஆரவ்.
இதனால் இவனது பெயர் லிம்கா புக் ஆப் ரெக்காட்ஸ் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.