தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை விட 14 சதவீதம் கூடுதல்

Rainஇந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் மூலம் இந்தாண்டு கூடுதலாக 14 சதவீத மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது நாடு முழுவதும் குறைவான மழையே பெய்தது.

இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்த நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் மூலம் பல்வேறு இடங்களில் அதிக மழை பெய்து வருகிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: இந்தியாவில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நாட்டின் 53 சதவீத பரப்பு கூடுதல் மழையை பெற்றுள்ளது.

மேலும் 34 சதவீத பகுதிகள் சராசரியான மழையை பெற்றுள்ளன. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் குறைவான மழையைப் பெற்றுள்ளன.

நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக இந்தாண்டு சராசரியை காட்டிலும் 14 சதவீத கூடுதல் மழை கிடைத்துள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதிகளில் 28 சதவீத கூடுதல் மழையும், மத்திய இந்தியாவில் 33 சதவீத கூடுதல் மழையும் பெய்துள்ளது. தென்னிந்தியாவில் 23 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளது.

அதேவேளையில், கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் 30 சதவீத குறைவான மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் வரையில் நாட்டில் 26 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளது.

மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: