ஐதராபாத் : நாட்டின் பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துமாறு விஞ்ஞானிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐதராபாத்தில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரிசர்ச் சென்டர் இமாரத்(ஆர்.சி.ஐ) எனப்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் நாட்டின் பாதுகாப்பிற்காக உலகத்தரத்திலான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டு அதனை மேம்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் எனவும் கலாம் தனது பேச்சில் தெரிவித்தார்.
இவ்விழாவில் ஆந்திர கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
எலேய்! பிறகு எதற்கடா ரஷ்யா,பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற நாடுகளிடம் ஆயுதட்காக மண்டியிட்டு கிடக்கிறீங்க!!! விளக்கெண்ண?