மேலும் புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டமில்லை

Indian_Governmentதெலங்கானாவைப் போல வேறு எந்தப் புதிய மாநிலத்தையும் உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு அறிவித்தது.

போடோலாந்து, கோர்காலாந்து, விதர்பா போன்ற புதிய மாநிலங்களை உருவாக்குவது பற்றிய கேள்வி ஒன்றுக்கு, உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “”இப்போதைக்கு இதுபோன்ற திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானாவைப் பிரிக்கும் அரசின் முடிவு வெளியானதிலிருந்து, போடோலாந்து, கோர்காலாந்து போன்ற பல புதிய மாநிலங்களுக்கான கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

TAGS: