ஒரே ஆந்திரம் இயக்கத்தை ஆதரிக்கும் திருப்பதி கூட்டு போராட்டக் குழு புதன், வியாழன் ஆகிய 2 தினங்கள் திருப்பதிக்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாதபடி நகரின் எல்லைகளை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளது.
ஆந்திரத்தை 2 மாநிலங்களாகப் பிரிக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக திருப்பதியில் அனைத்து போராட்டக் குழுக்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களை இயக்கவும் திருப்பதியில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களைத் திறக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில வாகனங்கள் திருப்பதிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படாது. ரயில்கள் மட்டும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அட நாசமா போரவனுங்க்களா…!!! பெருமாள் தரிசனத்துக்கு இப்படியெல்லாம் தடையா….!!! நாடு எங்கடா போகுது? “சிப்பாய் எடுத்து ஒளிச்சி வச்சிடா கல்யாணம் என்ன நின்னாப் போயிடும்.” மலையப்பா சுவாமிக்கு மவுசு அதிகம்…..!!! பார்ப்போமே என்ன நடக்குதுன்னு…….??? நந்தா சார் நீங்க கோவிக்கக் கூடாது…
ஆண்டவனுக்கு பக்தர்கள் வாரி வாரி கொடுக்கிறார்கள் தரிசிக்கிறார்கள் .
இவங்கள் சொந்த சொத்து மாதிரி பாதேயே முடரனுக
எப்படி நாடு உருப்படும் .
ராயலசீமா மக்கள் எங்கே அடித்தால் எவனுக்கு வலிக்கும் என்று நன்றாகவே அறிந்து வைத்திருகின்றார்கள் போலும்! பக்தி தளத்தை அரசியல் களமாக்கும் இந்த அறிவிலிகளை ஆண்டவன் தான் காப்பாத்தனும். கோவிந்தாவுக்கே, கோயிந்தா, கோயிந்தா!
ஐயா ரிஷி அவர்களே ! ‘திருப்பதி மலைவாழும் வெங்கடேசா ‘ என்ற பாடலை முழுமையாக பாடக்கூடியவன் நான் ! ஸ்ரீ வெங்கடேசனுக்கு நான் எதிரியா என்ன ? புகழ் அனைத்தும் ஸ்ரீ வெங்கடேசனுக்கே !