இந்தியாவில் ‌மொத்தம் 65 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன: அக்குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருகின்றது!

Tamil_News_large_790567புதுடில்லி: ஜனநாயக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் இந்தியாவில் ‌மொத்தம் 65 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன எனவும் அக்குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருகின்றன என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜனநாயக ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாக தீவிரவாத செயல்களி்ல் ஈடுபடும் பயங்கரவாத கும்பல்களில் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்ஹத் உல் ஜிகாதி இஸ்லாமி உட்பட பல்வேறு இயக்கங்கள் முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளது.

இக்குழுக்கள் அனைத்தும் குறிப்பாக புதுடில்லி, உ.பி., மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா , கேரளா, ராஜஸ்தான்,மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் அசாம் , தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனிக்குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லாது மணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் 34 பயங்கரவாத இயக்கங்களும் இந்த பட்டியிலில் இடம் பெற்றுள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டு லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கங்கள் முதல் இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.

அசாம் மாநிலத்தில், 10 குழுக்கள், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் தலா நான்கு குழுக்கள், பஞ்சாபில் செயல்பட்டு வரும் பாபர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத், காலிஸ்தான் கமாண்‌டோ ஆகிய மூன்று குழுக்கள் திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் இரண்டு குழுக்கள் என பல பிரிவுகளாக செயல்பட்டு வருதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் பயங்கரவாதிகள் சுதந்திரமான செயல்பாட்டிற்கு பாகிஸ்தான் மறைமுகமாக நிதியுதவி செய்துவருகிறது. குறி்ப்‌பாக நமது நாட்டின் ரூபாயை போன்றே போலியான கரன்சி நோட்டுகளை அச்சடித்து அதனை பயங்கரவாதிகள் துணையுடன் இந்த‌ியாவில் புழக்கத்தில் விட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஆயுதங்களை கடத்துவது ‌‌போன்ற செயல்களிலும் பாகிஸ்தான் உதவி செய்துவருகிறது. இருப்பினும் மத்திய அரசு ஒன்பதிற்கும் மேற்பட்ட குழுக்களின் செயல்பாட்டிற்கு ‌‌தடை விதித்துள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, இதன் ஒரு பகுதி‌யாக மாநிலங்களின் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை‌களை சேர்ந்த வீரர்களுக்கு அதி நவீன துப்பாக்கிகள் வழங்‌கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு கிடைத்து வரும் நிதியு‌த‌வியை கட்டு்ப்படுத்துவதற்காக வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆ‌கியவற்றின் துணையுடன் சந்‌தேகத்திற்கிடமான பணபரிவர்த்தனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றன என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கம்யூனிஸ்ட் பார்ட்டிஆப் இந்தியா( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் போர் படை, உட்பட பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் இயக்கங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில் சில மாநிலங்கள் நக்சல்களை கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவு், சில மாநிலங்களில் நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவது கவலை அளிக்கும் விதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

TAGS: