ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார்.
மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது, அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங், “சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சில சர்வதேச விளைவுகளால் அசாதாரண நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதிலிருந்து மீள நமக்கு சில காலம் ஆகும்.
இந்த விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்க விரும்புகிறேன்’ என்றார்.