நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பல்ல என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு, நடப்புக் கணக்கில் பெரும் பற்றாக்குறை எனப் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், தனது மெளனத்தை கலைத்த பிரதமர், பொருளாதார பிரச்னைகள் தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்து பேசினார்.
“”எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்குவதால், பொருளாதாரச் சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. இதுதான் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது. இதுவே அனைத்துப் பொருளாதார பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது” என்றார் மன்மோகன் சிங்.
முன்னதாக, அவையில் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, நாட்டின் மீதான நம்பிக்கையை முதலீட்டாளர்கள் இழந்துவிட்டனர் என்று அரசு மீது குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மன்மோகன் சிங், நாடாளுமன்றம் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் நாடாளுமன்றம் செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுப்பது வாடிக்கையாகிவிட்டது என்றார். அப்போது பாஜக தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புக் குரல் எழுந்தது.
தொடர்ந்து மன்மோகன் சிங் பேசியது: வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக வைத்திருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது நிச்சயமாக அதிர்ச்சி தரும் நிகழ்வுதான். இந்த பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்பு அவ்வளவாக கடுமை இல்லாத பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இனி மானியத்தைக் குறைப்பது, காப்பீடு, ஓய்வூதியத் துறையில் சீர்திருத்தம் போன்ற மிகக் கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது எளிதானது அல்ல. அரசியல் கருத்தொற்றுமை காண வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜேட்லி, பிரச்னை ஏற்பட்டால் மட்டும் ஒத்துழையுங்கள் என்று கேட்டு, எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அணுகுவது அரசின் அராஜகப் போக்கைக் காட்டுகிறது என்றார்.
இதையடுத்து, பாஜகவைத் தாக்கி மன்மோகன் சிங் பேசியது: “”பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களை தொடர்ந்து முடக்கி வருகிறீர்கள்.
கடந்த 9 ஆண்டுகளாக முக்கிய எதிர்க்கட்சி ஆட்சியில் இல்லை. அது தொடர்ந்து இரு முறை மக்களால் புறக்கணிக்கப்பட்டதை மறந்துவிடக் கூடாது.
வேறு எந்த நாட்டிலாவது பிரதமர் தனது அமைச்சர்களை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படாத நிலை ஏற்பட்டதுண்டா? இதுபோன்ற பல நிகழ்வுகள் இங்கு மட்டும்தான் நடக்கின்றன” என்றார் பிரதமர். அப்போது பதிலளித்த அருண் ஜேட்லி, பிரதமரை நேரடியாகக் குற்றம்சாட்டி எதிர்க் கேள்வி எழுப்பினார். அப்போது அவையில் பெரும் கூச்சல் நிலவியது. வழக்கமாக நிதானத்துடன் பேசக்கூடிய மன்மோகன் சிங், பாஜகவுக்கு எதிராக சற்று ஆவேசமாகவே பேசினார்.
பொருளாதாரப் பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அரசின் தோல்விகளை நியாயப்படுத்திப் பேசும் விளக்கத்தை நாங்கள் கேட்கவில்லை என்று அருண் ஜேட்லி கூறினார்.
இதையடுத்து, பிரதமரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
மன்மோகன் சிங் போன்றவர்களை பிரதமர்களாகப் பெற்றது இந்தியா செய்த பாவமே! தமிழினத்துக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமே எதிரி காங்கிரஸ் மற்றும் மன்மோகன் சிங். வேரோடு களையப்படட்டும் இந்த நச்சுமரங்கள்
நீ விரலை வாயில் வைத்து …. தானடா லாயக்கு,நாடாளும்மன்றதில் உன்னை திருடன் என்று கூறியதாக தினசரி பத்திரிக்கை வாயிலாக அறிந்தேன் அது முற்றிலும் உண்மையடா!!!