குற்றம் சாட்டப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: மத்திய அரசின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

indian parliementபுதுடெல்லி, செப். 4- அரசியலில் ஈடுபடும் குற்றவாளிகளை கட்டுப்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.

அதன்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தாலும் கூட அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

நீதிபதிகள் பட்நாயக், முகோபாத்யாயா ஆகியோர் அளித்த இந்த தீர்ப்பில், இனி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அந்த உத்தரவு வெளியான நாளிலேயே அவர்களது பதவி பறிக்கப்பட்டு விடும் என்று அதிரடியாக கூறியுள்ளனர். இது குற்ற பின்னணி உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 543 எம்.பி.க்களில் 162 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். அதுபோல நாடு முழுவதும் உள்ள 4032 எம்.எல்.ஏ.க்களில் 1258 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். ஆக மொத்தம் 1420 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல், மிரட்டல், கற்பழிப்பு, நிலம் அபகரிப்பு, லஞ்சம் வாங்கியது என ஏராளமான வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது.

இதில் எம்.பி.க்களில் 14 சதவீதம் பேர் மீதும், எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம் பேர் மீதும் மிக கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. அதாவது இந்த வழக்குகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனையைப் பெற்றுத் தரும் வகையிலான வழக்குகளாக உள்ளன. இதுதான் பெரும்பாலான கட்சிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

குற்ற பின்னணி உள்ள 1,420 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் மீது தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. இதனால் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா கட்சிகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஆனால், அரசியலில் உள்ள ரவுடிகள், சுயநலவாதிகளை விரட்ட, இந்த தீர்ப்பு உதவும் என்பதால் தேர்தல் கமிஷன் இதை வரவேற்றுள்ளது. அது போல பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் மகிழ்ச்சியுடன் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்த மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது.

இதனையடுத்து, தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம். ஆனால், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது என திருத்தப்பட்ட மசோதா உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை சீராய்வு செய்யக்கோரும் மத்திய அரசின் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

மத்திய அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் உருவாக்கிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (திருத்த) மசோதாவை சுட்டிக் காட்டிய நீதிபதி, ‘எங்கள் உத்தரவில் பெரும் பகுதியை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான தீர்ப்பை இந்த கோர்ட் சீராய்வு செய்யும். சிறையில் உள்ள ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியும். அதே சமயத்தில், சிறையில் உள்ள ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பது எந்த வகை சட்டத்தை சேர்ந்தது என்பது புரியவில்லை.

TAGS: