பெட்ரோலை மிச்சப்படுத்த வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் கலெக்டர்

collector_001பீகாரில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார்.

பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது.

சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இவர் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.

எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் முதல் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார்.

மற்ற அதிகாரிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் தனது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.

இவருடைய அறிவுரையை ஏற்று, நிர்மலா குமாரி என்ற அதிகாரியும் நேற்று முதல் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்கிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது.

இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம்.

முடிந்த வரையில் எல்லா அரசு ஊழியர்களும் அரசுப் பேருந்து, ரயில்கள் மூலம் சென்றால் நல்லது. எனது பாதுகாப்புக்கு வாகனங்கள் வருவதையும் நிறுத்தி விட்டேன்.

மாதத்துக்கு ஒரு வாரம் இந்த சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதை அரசு அலுவலர்களுக்கு கட்டாயமாக்கி இருக்கிறேன்.

ஜெனரேட்டர் பயன் கூடாது என்ற நடைமுறை மாதம் முழுவதும் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

TAGS: