மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மாற்று அணி: ராமதாஸ்

ramadoss1300மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மாற்று அணி அமைத்துப் போட்டியிடப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்தான் பயன்படுத்தப்படும் என்பதால் தகுதியுடைய புதிய வாக்காளர்களை இப் பட்டியலில் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இனி வரும் தேர்தல்களில் புதிய வாக்காளர்களான இளைஞர்கள்தான் வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பர்.

பாமகவுக்கு இளைஞர் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு அலை உருவாகியுள்ளது.

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இளைஞர், இளம்பெண்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் பாமகவின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

மக்களவைத் தேர்தல் பாமகவுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.

திராவிட கட்சிகளுக்கு எதிராக மாற்று அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பாமகவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய, நமது ஆதரவு  இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்று பாமகவின் நிர்வாகிகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TAGS: