தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானில் தனது வாழக்கை குறித்து காபூலிவாலாவின் வங்காள மனைவி என்ற பெயரில் இவர் எழுதிய புத்தகத்தில் அவர் தனது ஆப்கன் கணவர் ஜான்பாஸ் கானுடன் வாழ்ந்த வாழ்க்கையை வர்ணித்துள்ளார்.
இந்திப் படம்
கடந்த 1995 ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து தான் தப்பி வந்தது குறித்து சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய அந்தப் புத்தகம் 2003 ஆம் ஆண்டு இந்தியில் திரைப் படமாக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மிகவும் விற்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.
சமீபத்தில்தான் பேனர்ஜி தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆப்கானுக்கு மீண்டும் போயுள்ளார். அங்கே சையத் கமாலா என்ற பெயரில் அறியப்படும் இவர் சுகாதார சேவைப் பணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள பெண்களின் வாழக்கை குறித்த வீடியோ பதிவுகளையும் தனது பணி நிமித்தம் இவர் செய்துள்ளார்.
மாகாண தலைநகரான கரானவில் உள்ள இவரது வீட்டுக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள் இவரின் கணவரையும் வீட்டில் உள்ள மற்றவர்களையும் கட்டுப் போட்டுவிட்டு இவரை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பேனர்ஜியின் உடலை அருகேயிருக்கும் மதப் பள்ளிக் கூடத்தின் அருகே அவர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
அதே நேரம் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று தாலிபான்கள் மறுத்துள்ளனர். -BBC
இதைப் பற்றி நாம் பேசினால் – கமலஹாசன் பேசினால் – முஸ்லிம்களின் மனம் காயமடையும். வேண்டாம்! அவர்கள் புனிதர்களாகவே இருக்கட்டும்!