தமிழர்களுக்கு அனுசரணையாக இல்லாமல், இலங்கை அரசுக்கே இந்தியா அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை.
இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன்.
அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான்.
இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் தமிழக மீனவர்கள் சிங்கள அரசினால் துன்புறுத்தப்பட்ட நேரத்தில் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் 2 கப்பல்களை இந்தியா வழங்குகிறது என்ற செய்தியின் மூலம் இலங்கை அரசுக்குத்தான் இந்தியா உதவி செய்கிறதே தவிர, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கோ மற்றும் இந்திய மீனவர்களுக்கோ அனுசரணையாக இல்லை என்று சிலர் தொடர்ந்து எடுத்து வைத்து வரும் குற்றச்சாட்டு உறுதியாகிறது.
கடல் எல்லையைப் பாதுகாக்க இந்தியா இலங்கைக்கு வழங்கும் 2 போர்க் கப்பல்களில் இருந்துகொண்டு, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கைப் படையினர் தாக்குவர்.
2017-ஆம் ஆண்டில் இந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல் கூறப்பட்ட போதிலும், இப்படிப்பட்ட முயற்சியினை தொடக்கத்திலேயே நிறுத்திட வேண்டும்.
இலங்கைக்கு உதவிடும் எண்ணத்தை அறவே தவிர்க்கவும் இந்தியா முன் வரவேண்டும்.
பால் கொள்முதல் விலை: 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பாலின் கொள்முதல் விலை 4 முறை உயர்த்தப் பட்டது. பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6.60 வரையும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.12.70 வரையும் உயர்த்தப் பட்டன.
தமிழகத்தில் 11 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.
அதில் 4.25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இம்தியாவின் இந்தப் போக்கிற்கு நீரும் முன்பு பதவில் இருந்த பொழுது முழு ஆதரவு கொடுத்தவர்தானே….!! உம்மைப் போன்ற சுயநல நயவஞ்சகர்கள் தமிழர் நாட்டில் இருப்பது தமிழர் இன உணவாளர்கள் செய்த பாவம். பதவி போனல்தான் ஞானம் பிறக்கும் போல் இருக்கு. உமது கூற்று அதனை மெய்ப்பிக்கிறது.
நீங்கள் எல்லாக் காலங்களிலும் உங்கள் பிள்ளைகளை வைத்தே அரசியல் நடத்துகிறீர்கள். அப்புறம் மத்திய அரசு எங்கே தமிழனை மதிக்கப் போகிறார்கள்! அனுசரணையாவது அரணையாவது!
தவற்றை உணர்ந்து மனம் திறந்து (உண்மையானால்) பேசுவது எங்களை போன்ற உள்ளங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.ஈழம் அமைவது ஒவ்வொரு உண்மையான தமிழனுக்கு தீராத தாகமாக இருந்து வருகிறது.எந்த கணம் தமிழர்களுக்கு மத்திய அரசு அனுசரணையாக இல்லை என்று நினைத்து விட்டீரோ ,அன்றே தமிழீழம் அமைவது உறுதி நாங்கள் நம்புகிறோம்.நீங்கள் சுமக்கின்ற அவப் பெயரை ஈடுகட்ட ,குடும்ப சுய நலத்தை விட்டு ,ஈழமக்களின் எதிர்காலமும்,உலகத் தமிழர்களின் நம்பிக்கையும் வாழவகை செய்யுங்கள்.தமிழ் உலகம் என்றும் உங்கள் கடன்பெற்றிருக்கும்.ஒரு காலத்தில் என் இதயத்தில் நீங்கா தலைவனாக இருந்த நீங்கள் மீண்டும் அந்த இடத்தை பெறுவீர் என்று மிகவும் நம்புகிறேன்.வாழ்க தமிழ் ஈழம். இல்லையேல் தனி தமிழ் நாடுதான் வழி.
மஹா குருடன் , நீர் கிழிச்சது போதும்….!
டேய் திருட்டு முதேவி! தமிழனுக்கு மட்டும்தான் சூடு சொரணை இருக்கும் உனக்கு அல்ல! உன் முதலை கண்ணீர் போதும்!!!
ஈழம் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க இந்த பேடிக்கு துணிவு கிடையாது…..இவனையெல்லாம் இன்னும் தலைவன் என்று கூறும் தமிழ் நாட்டு…….
ஐயோ ஐயோ ,இவனா ,இவன் இத்து போனவனாசே ,,,இந்த கிழட்டு முண்டம் இன்னுமா உயிரோடு இருக்கு