மின்வெட்டில் மக்கள்; மின்னுற்பத்தியை தடுக்கிறதா தமிழக அரசு?

powercutதமிழக மக்களும் தொழிற்சாலைகளும் மீண்டும் மின்வெட்டில் சிக்கித்தவிக்கும் பின்னணியில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் மறுப்பதாக கூறுகிறார் இந்திய காற்றாலை உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக நீடித்த பலமணி நேர மின்வெட்டுப்பிரச்சனை கடந்த சில மாதங்களில் பெருமளவு குறைந்திருந்தது. காரணம் காற்றாலை மின்சாரம் அதிக அளவு உற்பத்தியானதால் மின்வெட்டு குறைந்ததாக கூறப்பட்டது.

ஆனால் கடந்தவாரம் காற்றாலை மின் உற்பத்தி திடீரென குறைந்ததால் மீண்டும் மின்வெட்டுப்பிரச்சனை தலை தூக்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை தமிழக அரசு முழுமையாக வாங்குவதில்லை என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, குறைந்த விலையிலான தமிழ்நாட்டின் காற்றாலை மின்சாரத்தை வாங்காமல், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கிற நிலக்கரியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழக மின்வாரிய அதிகாரிகள் அதிகமான விலைக்கு வாங்குவதாக குற்றம் சாட்டுகிறார் இந்திய காற்றாலை உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் கஸ்தூரி ரங்கையன்.

இதனால் தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த ஆண்டு மட்டும் இதுவரை சுமார் 750 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். -BBC

TAGS: