இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்து-முஸ்லீம் மோதல்களுக்குக் காரணமான வன்செயல்களைக் கண்டித்திருக்கிறார்.
இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்திருக்கிறது.
கலவரத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த சுமார் 1,000 துருப்புக்கள் அந்தப்பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
உள்ளூர் பெண்மணி ஒருவர் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை ஆட்சேபித்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த மத மோதல்கள் வெடித்தன.
பின்னதாக, இரண்டு பேர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதாகக் காட்டும் ஒரு போலி வீடியோ விநியோகிக்கப்பட்டதை அடுத்து மேலும் வன்செயல்கள் வெடித்தன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், பல உள்ளூர் அரசியல்வாதிகள் இந்த ரத்தக்களறியைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநில அரசு விசாரணை செய்து வருவதாகக் கூறுகிறது. -BBC