ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதே…

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை, ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள தவறி விட்டனர் என்கிறார்  பொருளியல் நிபுணர் டரண்ட்ஸ் கோமஸ். இவர் இதற்கு முன்பு அந்த இலாகாவின் ஆலோசகர் மன்றத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தவராவார். அந்த ஆலோசகர் மன்றம் இதற்கு முன்பு  அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.…

அச்சத்தை அதிகரிக்கும் தடுப்பூசி குளறுபடிகள்! – இராகவன் கருப்பையா

நாட்டின் மக்கள் தொகையில் 98 விழுக்காட்டினருக்கும் மேல் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அரசாங்கப் புள்ளி விவரங்கள் காட்டுகின்ற போதிலும் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் மரண விகிதத்திலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. கடந்த சில வாரங்களாக நாடு முழுமைக்கும் தினந்தோறும் சராசரி 3000 பேர் கோறனி நச்சிலினால்  பாதிக்கப்படுகின்றனர். அதே…

அசாம் பாக்கியின் விசாரணையை பொது மக்கள் காண வாய்பளியுங்கள்- கோமஸ்…

வரும் திங்கட்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழுவின்  விசாரணையை நேரடியாக மக்கள் கண்காணிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு இலாகாவின் தலைமை இயக்குனராக இருக்கும் அசாம் பாக்கி அவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். “அவரின் விசாரணையில் முறையான கேள்விகள் கேட்கப்படுகின்றனவா,…

‘பல்லில்லா புலி’யானது புரிந்துணர்வு ஒப்பந்தம்

இராகவன் கருப்பையா -கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற இஸ்மாய்ல் சப்ரி அவசர அவசரமாகச் செய்த முதல் காரியம் எதிர் கட்சிக் கூட்டணியை அரவணைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுதான். இதன் வழி தனது சிறுபான்மை அரசாங்கத்தை தற்காத்துக்கொண்ட சப்ரி, அம்னோவின் ஊழல்வாதிகளின் நெருக்குதலில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். அவர் பதவியில் அமர்ந்து சில வாரங்களிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மக்களுக்கு ஓரளவு…

MACC தலைமை அதிகாரி அசாம் மீது விசாரணை – ஹம்சா

பல நிறுவனங்களில் பங்குகளை வாங்க தனது சகோதரர் தனது கணக்கைப் பயன்படுத்தியதாக எம்ஏசிசி தலைவர் அசாம் பாக்கி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான போலீஸ் புகாரைப் பெற்றதால் காவல்துறை விசாரணையைத் தொடங்கும். ஹரியான் மெட்ரோவின் அறிக்கையின்படி, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின், அசாம் (மேலே) தற்போது செக்யூரிட்டீஸ் கமிஷன்…

வெள்ளை கொடியும், சிகப்பு வறுமையும்!  

இராகவன் கருப்பையா & கா. ஆறுமுகம் - நம் நாட்டில் கோறனி நச்சிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது இலட்சக் கணக்கானோர் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றித் தங்களுடைய வீடுகளின் முன் வெள்ளைக் கொடிகளை ஏந்தி உதவிக்குக் கையேந்தி நின்ற அவலம் நம் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அவர்களில்…

ஜானகிராமன் வல்லினம் விருது பெறுகிறார்!

‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் (RM 5,000) மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.…

தாய்மொழிப்பள்ளியை எதிர்ப்பவர்கள், தங்களின் புற முதுகைப் பார்க்க வேண்டும்!

இராகவன் கருப்பையா - வெள்ளப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சீன-தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பு நமக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளும், 1,298 சீனப்பள்ளிகளும்  மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இது சற்று நிம்மதியைக் கொடுக்கிறது. தமிழ், சீனப் பள்ளிகள் இந்நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின்…

படகு இருமுறை கவிழ.. தாயை காப்பற்றிய அனுபவம்!  

இராகவன் கருப்பையா- வெள்ளப்பேரிடரில் நாம் கண்ட அனுபவங்கள், மனித நேயம் உள்ள மக்கள் நம்மிடையே பலர் உள்ளனர் என்பதையும், பொது நலம் காப்பதும், துணிந்து உதவுவதும் – ஒரு புதிய இலக்கணத்தை வாழ்வியலில் இணத்துள்ளதையும் உணர முடிகிறது. அந்தப்பிணைப்பு இந்தியர்களிடம் அதிகம் இருந்தாக கருதப்படுவதற்கான காரணம், அரசின் இனவாத…

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?

கி.சீலதாஸ் -முன்னொரு காலத்தில் கிராம வைத்தியர் ஒருவர் மிகுந்த புகழுடனும், சிறப்புடனும் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதைக் குணப்படுத்துவதில் வல்லவர். இந்த மருத்துவரிடம் மருத்துவம் பயில வந்த மாணவன், குரு வைத்தியர் போகும் இடமெல்லாம் உடன் செல்வது வழக்கம். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போனால் குரு…

இயற்கை பேரிடரின் ஒற்றுமையும் – கட்சி அரசியலின் பிரிவினையும்!  

இராகவன் கருப்பையா - நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து 10 நாள்களைக் கடந்தும் இன்று வரையில் முதன்மையாகப் பேசப்படுவது ஒரே விசயம்தான் - ஒற்றுமை! அரசாங்க இலாகாக்களும் அமைச்சர்களும் கண்டும் காணாததைப் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்த முதல் இரண்டு மூன்று நாள்கள் மட்டுமின்றி இன்று…

கொல்லைப்புற அரசாங்கம் இரு தடவையும் படும் தோல்வி!

இராகவன் கருப்பையா- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடமிருந்து ஆட்சியை அபகரித்த இந்த 22 மாத காலத்தில் தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கம் இரு பெரும் சோதனைகளில் படும் தோல்விகள் நடப்பு அரசியலின்  திக்கற்ற நிலையை காட்டுகிறது. முன்னாள் பிரதமர் மஹியாடின் தலைமையிலான நிர்வாகம் கோறனி நச்சில் பெருந்தொற்றைக் கையாள்வதிலும் சப்ரி தலைமையிலான நிர்வாகம்…

வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவுவதில் கட்சி அரசியலின் சுய விளம்பரம்…

இராகவன் கருப்பையா - இவ்வாரத்தில் நாட்டைச் சூழ்ந்த பெரும் வெள்ளத்தினால் பொது மக்கள் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தத் துயரைக் கூடச் சில அரசியல்வாதிகள் தங்களுடைய விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அரசாங்க இலாக்காக்களின் உதவிகள் காலத் தாமதமாக வந்ததனால் மிகவும் சினமடைந்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், அரசியல்வாதிகளின் இத்தகைய போக்கை எந்த…

பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளுக்கு ஓர் இலக்கணம்! –…

ம.நவீன்-  சுபதி அவர்களை இரண்டாவது முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு டாக்டர் சண்முகசிவா மூலம் அமைந்தது. 2009இல் நான் லண்டன் போக வேண்டியிருந்தது. மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து லண்டனில் பேச அழைத்திருந்தனர். டத்தோ சகாதேவன் எனக்கான விமான செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்குப் பணப்பற்றாகுறை…

வெள்ளப் பேரிடரைச் சமாளிக்கும் விழிப்பு நிலையில் சுணக்கம்!

இராகவன் கருப்பையா - கடந்த வெள்ளிக்கிழமை(18/12) பிற்பகல் தொடங்கிக் குறைந்தது 24 மணி நேரமாக இடைவிடாது பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட பேரிடர் ஒருசில அரசாங்க இலாக்காக்களின் விழிப்பு நிலையை உலுக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதப் பிற்பகுதியில் கிழக்குக் கரை மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.…

நஜிப்பிற்கான தீர்ப்பும் – நீதிபதிகளின் பொறுப்பும்! – கி.சீலதாஸ்

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பெற்ற குற்றங்கள் யாவும் மெய்ப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நஜீப். இருதரப்பினரின் வாதுரையைச் செவிமடுத்த மூவரைக் கொண்ட மேல்முறையீடு நீதிமன்றம் கடந்த   டிசம்பர் 8, 2021இல் தனது…

அரசியல் கட்சி தொடங்குவது, அடிப்படை உரிமை!

இராகவன் கருப்பையா - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தொடங்கியுள்ள 'மூடா' எனும் அரசியல் கட்சியின் பதிவு தொடர்பான இழுபறி ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மக்களின் ஜனநாயக உரிமை படும் அவஸ்தையும் அம்பலமாகியுள்ளது. மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி எனும் பொருள் கொண்ட அந்தக் கட்சியை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சைட் சாடிக் தோற்றுவித்தார். உள்துறையமைச்சு அக்கட்சியைப் பதிவு செய்யாமல் நீண்ட நாள்களாக இழுக்கவைத்ததால் வேறு வழியின்றி…

பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளில் இன்னொரு நட்சத்திரம் பகுதி-1

ம.நவீன் - மாஆளுமைகள் எவ்வாறு உருபெற்று வருகிறார்கள், இயற்கை எவ்வாறு அவர்களை வடிவமைக்கிறது, காலம் உருவாக்கும் தடைகளும் சவால்களும் நேர்மறையான குணம் கொண்ட ஒருவருக்கு எப்படி வரமாக மாறுகின்றன, ஒருவர் தன் எண்ணத்தில் கொண்டுள்ள தீவிரம் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களையும் எவ்வகையில் மாற்றி அமைக்கிறது, குடும்பம் ஒருவரின் மன…

மஇகா-வின் எதிர்காலம், உரிமை போராட்டத்தில்தான் உள்ளது!

இராகவன் கருப்பையா - ம.இ.கா.விற்கு தற்போது இருக்கும் ஒரு முழு அமைச்சர் பதவியோடு துணையமைச்சர் நியமனம் ஒன்றும் கிடைக்கப்போகிறது என்று எண்ணி ஆவலோடு காத்திருந்த அதன் உறுப்பினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பிரதமர் சப்ரி அந்த நியமனத்தை அறிவிப்பார் எனப்…

தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு? –…

தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு என்று புரியவில்லை. அதிலும் குறிப்பாக மலாயாவின் சுதந்திரப் பேச்சுவார்த்தையின் போது அன்றைய கூட்டணி அமைப்பில் பங்குபெற்ற அம்னோ, மசீச, ஆகிய கட்சிகள் ஏகமனதாகச் சீன, தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்குவதற்கு யாதொரு தடையும் கிடையாது என்று ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த…

வேலியே பயிரை மேயும் அரசியல் நியமனங்கள்!       

இராகவன் கருப்பையா - நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து  வருகிறது எனச் சில அரசியல்வாதிகள் வெறுமனே மார்தட்டிக் கொண்டிருக்கும் போதிலும் இன்னமும் நிறைய பேர், குறிப்பாகப் பி40 தரப்பினர் அன்றாட உணவுக்குக் கூட அவதிப்படுவதை நம்மால் காண முடிகிறது. அண்மைய வாரங்களாகக் கிடு கிடுவென வரம்பு மீறி ஏற்றம்…

இராஜேந்திரனின் ‘மந்திரக் கணங்கள்’ நூல் வெளியீடு காண்கிறது

இராகவன் கருப்பையா- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் உலகளாவிய நிலையில் எண்ணற்ற பயணங்களைத் தொடர்ந்தார்போல் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பெரும்பாலானவை இலக்கியம் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. பிற நாட்டு இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களுடன் இலக்கியம் தொடர்பான விசயங்கள் மட்டுமின்றித் தமிழ் மொழி தொடர்பான பொதுவான கருத்துப்…

“நஜிப் குற்றவாளிதான்” மேல் முறையீடு தொடரும்!

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளிதான் என மேல்முறையீட்டு நீதிமன்றம், இதற்கு முன்பு உயர் நீதிமன்றத்தின் அளித்த தீர்ப்பை முறையானது என்று உறுதி செய்தது. டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல்-க்கு சொந்தமான 42 மில்லியனை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான தண்டனையை மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு இன்று…