கள்ளச் சூதாட்டமும் – ‘நல்ல’ சூதாட்டமும் – கி.சீலதாஸ்

சூதாட்டம் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும். சூதாடுவது ஆபாத்தானது; ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சூதாட்டத்தில் நாட்டுத் தலைவன் பங்குபெற்றால் நாடு அழியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது மகாபாரதம். பாண்டவர்களின் செல்வத்தை, புகழைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், இயற்கையாகவே குருடனான தன் தந்தை திருதராஷ்டிரன்…

தேசிய இலக்கியங்களாக தமிழ் மற்றும் சீன படைப்புகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்…

கடந்த 25.11.2021 முதல், நான்கு நாட்களாக பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின்  எழுத்தாளர் ம.நவீனின் சிறப்பு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகில் நான்கு நாடுகளில் தமிழ் இலக்கியம் வேர்க்கொண்டுள்ளதாகவும், அப்படி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்  தமிழ் இலக்கியத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் மலேசியாவில்…

மலேசியா பிரியுமா? – கி.சீலதாஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் நண்பரும் சரவாக் பயணம் மேற்கொண்டோம். அம்மாநில தலைநகர் கூச்சிங் விமான நிலையத்தில் குடிநுழைவு துறையினர் எங்களுக்குச் சரவாக்கில் தங்கியிருக்க மூன்று மாத கால அனுமதி வழங்கினர். மலேசிய குடிமகன், தீபகற்ப மலேசியாவிலிருந்து வருகிறேன். எனவே, கடவுச்சீட்டு தேவையில்லை, மலேசிய அடையாளச் சீட்டு…

தமிழ், சீன பள்ளிகளின் தலைவிதியை நாடாளுமன்றம்தான் நிர்ணைக்க வேண்டும், நீதிமன்றம்…

இந்நாட்டில்  உள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர நீதிமன்றம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசயமென்பதால் நாடாளுமன்றத்தால் மட்டுமே இதனை தீர்மானிக்க முடியும் என தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம்…

மலாக்கா வெற்றியின் எதிரொலி – மஇகா. தேர்தலில் அனல் பறக்கும்

இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காடெக் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா.வின் சண்முகம் அடைந்த வெற்றி அக்கட்சிக்கு ஒரு திடீர் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சென்ற 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடளாவிய நிலையில் படுதோல்வியைத் தழுவிய அந்தக்கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில்…

மலாக்காவில் தோல்வி: பக்காத்தானுக்கு பாடம்!

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் தேவையில்லாத மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிய அறிவிலித்தனமான ஒரு அநாவசிய செயல் என்றால் அது மிகையில்லை. இந்த திடீர் தேர்தல்  நடத்தப்படவேண்டுமென மாநில வாக்காளர்கள் ஒற்றைக்காலில் நின்றார்களா? ஒரு போதும் இல்லை. குறிப்பிட்ட சில சுயநல அரசியல்வாதிகளின் அக்கப்போரினால் ஏற்பட்ட விளைவுதான் அது. ஆனால்…

மதவாதப் பாஸ் கட்சியின் சுயரூபம்!

இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டின் முற்பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை லாவகமாகக் கவ்விக் கொண்ட பாஸ் கட்சி, மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகச் சன்னம் சன்மாக தற்போது புரியும் சகாசங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. கடந்த 1974ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு…

நாட்டை அவமானப்படுத்தும் அரைகுறை அரசியல்வாதிகள்!

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய சில அரசியல்வாதிகளின் தரக்குறைவான அறிக்கைகளும் செயல்பாடுகளும் நமக்கு ஏற்படுத்தும் கோபத்தைவிடக் கோமாளித்தனமே அதிகமாக உள்ளது. வெந்நீர் அருந்தினால் கோவிட் குணமடையும் என்னும் அறிவிப்பு தொடங்கி 'தீமா' மதுபானச் சர்ச்சை வரையில் ஹாஸ்யத்திற்கு அளவில்லை என்றே சொல்ல வேண்டும்.…

கட்சி தாவும் அரசியல் தவளைகளும், சட்டமும் – கி.சீலதாஸ்

கட்சி தாவல் அல்லது சட்ட அவைத் தரையைக் கடப்பது என்பது மலேசியாவுக்கே உரிய அரசியல் கலாச்சாரமல்ல. பல நாடுகளில் கட்சி தாவல் நிகழ்வது சர்வசாதாரணம். நம் நாட்டில் கட்சி தாவலில் ஈடுபடுவோரை "தவளைகள்" என்று இழிவாக வர்ணிக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும். தவளை எனும்போது அது இயல்பாகவே ஒரே கிணற்றில்…

தீவாளியா? தீபாவளியா?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் பெருந்தொற்று தணிந்து வரும் இவ்வேளையில் மலேசியா மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் கூட மீண்டும் பழைய ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் முதல் பெருநாள் தீபத் திருநாளாகத்தான் இருக்கும். குறிப்பாக நம் நாட்டில் கடந்த 5 நாள்களாகப் புதிய உத்வேகத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இந்துக்களோடு சேர்ந்து இதர…

தமிழ் பள்ளிகளை ஏமாற்றும் உள்நாட்டு மோசடிக் கும்பல்

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் புரிந்துவரும் சாதனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களைச் செம்மைப்படுத்தி அவர்களுடைய வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் இரவு பகலாகப் பாடுபடும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் இத்தருணத்தில் நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும். ஆனால்  ஊண் உறக்கமின்றிக் கடுமையான…

அரசியல் முதிர்வை இழந்தோம், உணர்வை இழக்கலாமா? – கி.சீலதாஸ்

ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் நல்லிணக்கத்துடன் ஒரு கிராமத்தில் வாழ்கின்றனர் என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்டது. சரவாக்கில் உள்ள டாருள் இஸ்லாம், பிடாயு இஸ்லாமியர்களைக் கொண்ட பிளிம்பிங் கிராமத்தின் சுற்றுப்புறத்தில் கிறிஸ்தவர் சமுகத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கிராமத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் கிறிஸ்துவ உறவினர்களோடு…

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

மலேசியக்கிணியின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள்  அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! கோவிட்-19 தாக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியாக குடும்பத்தோடும் நண்பர்களோடும் கொண்டாடுவோம். அதோடு கவனமாகவும் இருப்போம்,   இந்த தீபாவளி நிகழ்வு, நாம் அனைவரும் இன்பமாகவும், இணக்கமாகவும் குடும்பத்துடனும் உறவினர்களுடனும் கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பை வழங்கும் என்பது திண்ணம். நமது மனங்களிலும், குடும்பத்திலும்…

இராஜம்மா கருப்பையா காலமானார்

மலேசியா இன்று-வின் படைப்பாளர் இராகவன் கருப்பையா அவர்களின் அன்பு தயார் இன்று காலமானார். வயது மூப்பின் காரணமாகக் காலமடைந்த இராஜம்மா கருப்பையாவின் வயது 91 ஆகும். அம்மையாரின் இறுதிச் சடங்குகள் நாளை (23.10.2021) காலை மணி 11.00க்கு எண் 37 ஜாலான் சுங்கை மானவ் 27/76, தாமாம் அலாம்…

பினேங் மாநில முதல்வராக இந்தியர் ஒருவர் வேண்டும்!

இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் இவ்வேளையில் பினேங் மாநில அரசியலில், குறிப்பாக அம்மாநில ஜ.செ.க.வில் உள்ள இந்தியர்களிடையே நிலைமை சற்றுச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பினேங்கின் துணை முதல்வராக இருந்து வரும் பேராசிரியர் இராமசாமி அடுத்த பொதுத்…

இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் ஏன் தண்டிக்கப்படுவதில்லை?  

இராகவன் கருப்பையா- எப்படிப்பட்ட குற்றமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டிக்கப்படவில்லை என்றால் குற்றச் செயல்களுக்கு முடிவே இருக்காது. இழைக்கப்படும் குற்றத்திற்கு ஏற்ப அந்தக் குற்றவாளி ஏதாவது ஒரு வகையில் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் அத்தகைய குற்றங்கள் தொடர்வதற்கு அது உந்துதலாகத்தான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.…

கோலாலம்பூரை யார் கண்டுபிடித்தார்? சீனரா? மலாய்காரரா?

இராகவன் கருப்பையா-  ஆ லோய் எனும் ஒரு சீன வணிகர்தான் கோலாலம்பூரைக் கண்டுபிடித்தவர் எனக் காலங்காலமாக நாம் சரித்திரப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் வெவ்வேறு ஆய்வுகளில் மேலும் இருவரின் பெயர்களும் அந்தப்பட்டியலில் இருப்பதைச் சற்று அலசி ஆராய்கிறார் வரலாற்றாசிரியர் ரஞ்சிட் சிங். இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் உள்ள மண்டய்லிங்ஙைச்…

மித்ராவை சீரமைக்க தனி அறவாரியம் தேவை – குணராஜ்

இந்தியர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி நல்ல பலனை அளிக்க வேண்டுமானால், அதன் பயன்பாட்டு வழிமுறைகள் முழுமையாக மாற்றப்பட் வேண்டும். அரசாங்கத்தின் கடமையாக இருக்கும் கல்வி, திறன் பயிற்சி,  இளைஞர் பயிற்சி போன்றவை அவை சார்ந்த அமைச்சுகளின் வழி மேற்கொள்ளப்படவேண்டும். மித்ரா நிதியின் நோக்கம், வறுமையில் சிக்கியுள்ள  இந்திய குடும்பங்களின்…

இலக்கியம் சாடும் பாசியின் மறுபக்கம், அல்கா அபரிதமானது – கவிதா கருணாநிதி

இலக்கியங்கள் பாசி என்ற சொல்லை ஒரு குறைபாடாகவே காட்டியுள்ளன. உதாரணமாக, “...நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்..” என்கிறார் பாரதியார். “ ….கலங்கும் பாசி நீர் அலை கலாவ, ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து..” என்கிறது நற்றிணை. இந்தப் பாசியின் மறுபக்கம்தான் என்ன, அறிவியல் பார்வையில்…

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கி.சீலதாஸ்

மரண தண்டனை முழுமையாக அகற்றுவதா வேண்டாமா என்பதே இன்றைய நாகரிக உலகின் வருத்தும் கேள்வியாக உள்ளது. அக்டோபர் பத்தாம் தேதியை உலக மரண தண்டனை எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 192 உறுப்பு நாடுகளில் 140 நாடுகள் மரண தண்டனையைத் தடைசெய்துவிட்டன. மூன்று முறை, ஐக்கிய நாடுகளின்…

மித்ராவின் செயல்பாடு அவசியமானது – ஊழல் வேண்டாம்!  

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் ரிங்கிட், தேவைப்படுவோரைச் சென்றடையும் முன்னரே முடிந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மித்ரா' எனப்படும் இந்தியச் சமூக உருமாற்று பிரிவின் வழி அரசாங்கம் ஆண்டுதோறும் அத்தொகையை இந்தியர்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது. இது குறித்துக் கடந்த வாரம்…

மனித குலத்தை காப்பாற்றும் மர்மமான நுண்ணுயிர்கள் – கவிதா கருணாநிதி

நுண்ணுயிர்களை பெக்டிரியா, வைரஸ், புரொடொசொவ, அல்கெ என்று பலவகையாகப் பிரிக்கலாம்.  நம் கண்களுக்குத் தென்படாமல் காற்றிலும் நீரிலும் உடம்பிலும் நுண்ணுயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. டிசென்ட்ரி (Dysentery), கொலெரா(Cholera),  டைபோய்ட்(Typhoid) போன்ற நோயினால் பாதிப்படைவதால் நாம் நுண்ணுயிர்கள் ஆபத்தானவை என்று கருதுகிறோம். ஆனால், தீய நுண்ணுயிர்களைக் காட்டிலும் நன்மை அளிக்கக்கூடும் நுண்ணுயிர்கள்தான், இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கக் காரணமாக அமைகின்றது. நம் உடம்பில் உணவு செரிமானம் ஆவதற்கும், மருந்துகளும் உணவுகளும் தயாரிப்பதற்கும்,…

அரசாங்கப் பணம் விரயம்: சப்ரியும் சளைத்தவரல்ல!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஊழல்வாதிகள்தான் மக்கள் பணத்தைச் சூறையாடுகிறார்கள் என்றால் அரசாங்கம் கண்மூடித்தனமாகச் செய்யும் பல செலவுகளும் கூடப் பொது மக்களின் விரக்தியைச் சம்பாதிக்கிறது. மேம்பாடு கண்டுள்ள பல நாடுகளோடு ஒப்பிடுகையில் மலேசியாவின் போக்கு முற்றிலும் வியக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. குறிப்பாகக் கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி…