கோவிட் அரசியலில் சிக்கிய மக்கள் – பூனைக்கு யார் மணி…

கி. சீலதாஸ் - நாட்டில் தொடர்கின்ற முழு அடைப்பு பல பிரச்சினைகள் உருவெடுக்க உதவுகிறது எனின் அது மிகைப்படுத்துவதாகக் கருத இயலாது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டதற்கான காரணங்களை ஆய்ந்துப் பார்க்கும்போது அது வணிக முடக்கம், வணிகக் கட்டுப்பாடு, நடமாட்டத் தடை, உற்பத்தி சாலைகள் இயங்க முடியவில்லை, முழுமையாகச் செயல்பட முடியவில்லை.…

மக்களவை எப்போது கூடும், இன்னல்கள் எப்போது தீரும்?

இராகவன் கருப்பையா - கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்து வருகிற போதிலும் கடந்த சில வாரங்களாக அந்த நெருக்குதல் அதிகம் தீவிரமடைந்துள்ளது. மக்களவையை விரைவில் கூட்டுங்கள் என பேரரசர்…

பணப் புழக்கத்தினால் நோய் தொற்றுமா?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் 4 கட்ட மீட்புத் திட்டத்தை பிரதமர் மஹியாடின் அறிவித்துள்ள போதிலும் 'ஹெர்ட் இம்யூணிட்டி' எனப்படும் கூட்டெதிர்ப்பு சக்தியை அடையும் காலம் எப்போது வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் கடந்த சில வாரங்களாக…

பெரிக்காத்தான் தோல்விக்கு பொறுப்பேற்குமா?

மு குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் , ஈப்போ பாராட் .கோவிட் தடுப்பூசியை கையாளும்  விதத்தில் மிக மோசமான அடைவு நிலையை  கொண்டிருக்கும் பெரிக்காத்தான் அரசாங்கம்  அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக  கையாண்ட விதம் குறித்த  குற்றச்சாட்டுகளுக்கு  பதில் சொல்லியாக வேண்டும்.இதுவே அதன்  படு தோல்விக்கு முக்கிய காரணமாக  விளங்குகிறது…

சீனாவின் கோவிட்-19 தொடர்பு – விடை காண துடிக்கிறது மனித…

கி. சீலதாஸ் - வரும் ஜூலை மாத முதல் நாள் சீன மக்கள் குடியரசு தமது கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும். பலவிதமான சிக்கல்கள், துயர்கள், உயிர் இழப்புகள் எனத் தொடர்ந்து பரவும் கோவிட்-19 தொற்றுநோய் உலகை வருத்திக் கொண்டிருக்கும் இவ்வேளை சீனாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதைக் காண…

தந்தையர் தினக்கட்டுரை:  தன்னலம் மறந்து என் நலம் போற்றிய என்…

இராகவன் கருப்பையா தனது தந்தையை நினைவு கூறுகிறார் -ஆர் 'அப்பா, கடவுள் தந்த வரமல்ல - வரமாகவே வந்த கடவுள்' எனும் வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதை பல காலக்கட்டங்களில் நாம் அனைவருமே உணர்ந்துள்ளோம். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து கடந்த 1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அம்மா…

பேரரசரின் ஆலோசனையும் அதன் வியாக்கியானங்களும்

இராகவன் கருப்பையா-  கூடிய விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனப் பேரரசர் விடுத்த ஆலோசனையைத் தங்களுடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாதிரி திரித்துக் கொண்டு பலவிதமான வியாக்கியானங்களைப் பறைசாற்றும் அரசியல்வாதிகளின் போக்கினால் பொது மக்கள் சினமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நம் நாட்டில் ஜனநாயகம் படும் அவஸ்தைக்கு இவ்வாரம்…

மீண்டும், ஆட்சி பீடத்தில் அமர  துடிக்கும் மகாதீர்

இராகவன் கருப்பையா- விடாக்கண்டன் கொடாக்கண்டன் எனும் வாசகம் அநேகமாக முன்னாள் பிரதமர்  மகாதீருக்கு மிகப் பொருத்தமாக அமையும். கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 வருடங்களுக்கும் 2018ஆம் ஆண்டிலிருந்து 22 மாதங்களுக்கும் நாட்டை ஆண்ட அவர் எப்படியாவது இன்னொரு முறை தலைமை பொறுப்பை ஏற்கத் துடித்துக் கொண்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த…

கணினிவழியான பொய் செய்திகள், ஒரு ‘பயங்கரவாத’ கலாச்சாரம்!    

கி.சீலதாஸ்- பொய் தகவல் கலாச்சாரம் வளர்வதற்கு, அது தீங்கு விளைவிக்க காரணியாக மாறுவதற்கு இன்றைய விஞ்ஞானம் உதவுகிறது. முகநூல் (ஃபேஸ்புக்), புலனம் (வாட்ஸ்எப்), கீச்சகம் (டுவிட்டர்) போன்ற சமூக ஊடகங்கள் செய்திகளை – அவை உண்மையோ, பொய்யோ என்பதைப் பொருட்படுத்தாது உடனுக்குடன் பரவ உதவுகின்றன. அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் தங்களின்…

ஐ.பி.சி.எம்.சி. என்பது இலவு காத்த கிளிதானா?

இராகவன் கருப்பையா -காவல்துறையினர் புரியும் அராஜகங்களை விசாரணை செய்வதற்கு ஐ.பி.சி.எம்.சி. எனப்படும் விசாரணை ஆணையம் அமைக்கப் பரிந்துரைகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் இவ்விவகாரம் இன்னமும் 'இலவு காத்த கிளியைப் போல' உள்ளது நம் அனைவருக்குமே ஏமாற்றமளிக்கும் விசயமாகும். இந்த அக்கரையின்மைக்கு யார் காரணம் என்று தெளிவாகக் குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்குப் பல தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் நாம்…

டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல்  – குலா கண்டணம்!

வெளி நாட்டினர் உடல் மீது படும்படியாக டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் என சாடுகிறார், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன். அவரின் முழுமையான பத்திரிக்கை செய்தி : அண்மையில் நான் பார்க்க நேர்ந்த காணொலி ஒன்றில் , தடுத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத  வெளிநாட்டினர் மீது , குடிநுழைவுத் துறை அதிகாரிகள்…

கோவிட்-19 மரணம் சொர்க்கத்துக்கு வழியா?

கி.சீலதாஸ் -     கோவிட்-19 தொற்றுநோய் தாக்க ஆரம்பித்தபோது அது தன் உறவினன் சார்ஸ் போல கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதால் ஒதுங்கிவிடும் என்று நம்பப்பட்டது. அது தவறான நம்பிக்கையென இப்பொழுது தெளிவாகிறது. அந்தத் தொற்றுநோய் 2019ஆம் ஆண்டில் ஆரம்பித்தது போல் அல்லாமல் சார்ஸைவிட மாறுபட்ட வடிவம்கொள்ளும் தரத்தைக் கொண்டிருக்கிறது. இதனால்…

இந்தியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற சமூக இயக்கங்கள் உதவ வேண்டும்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் கோறனி நச்சிலுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி நடவடிக்கைகள் அண்டை நாடுகளுடன்  ஒப்பிட்டு பார்க்கையில் இன்னமும் மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது சராசரி விகிதம் நமது பின்தங்கிய நிலையையே காட்டுகிறது. இருந்த போதிலும்…

அரசாங்கத்தின் அசட்டுத்தனமும் மக்களின் மெத்தனப் போக்கும்

இராகவன் கருப்பையா- இன்னும் 4 மாதங்களில் நம் நாட்டில் கோறனி நச்சிலின் கோரத் தாண்டவத்திற்குப் பலியாவோரின் எண்ணிக்கை 26,000தை தாண்டக்கூடும். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் வழி இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது என உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவியல் சபை உறுப்பினர் முனைவர் அடிபா…

காராக் வட்டாரத்தில் தடுப்பூசி – காமாட்சி பாராட்டினார்

ஜூன் 2 முதல் கராக் செத்யா இடைநிலைப் பள்ளியில்,  செயல்படத் தொடங்கிய கோவிட் 19 தடுப்பூசி மையத்தைப் பார்வையிட சென்ற சபாய் சட்ட மன்ற  உறுப்பினர் காமாட்சி துரைராஜு, முதன்மையாக அங்குத்  தடுப்பூசி மையம் அமைத்த சுகாதார அமைச்சுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். தான் கொண்டு வந்திருந்த முககவசம்,…

தடுப்புக் காவலில் இன்னொரு மரணமா?  எப்பொழுது ஓயும் இந்த மரண ஓலங்கள்…

  "கிள்ளான் போலீஸ் தடுப்பு காவலில்    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உமார் பாருக் அப்துல்லா  ஹெமநாதன் என்ற  இன்னுமொருவரின் அதிர்ச்சி மரணம் என்ற செய்தி நம்மை அதிரவைக்கிறது." "இன்னும் எத்தனைக் காலங்களுக்கு இந்த காவல்துறையினரின் அடாவடி செயல்களை   நாம் பொறுத்துக் கொள்ளவேண்டும்." "நாம் ஏமாளிகள், பலவீனமானவர்கள், கொட்டக் கொட்ட…

தடுப்புக்காவல் மரணங்கள்: பிரதமர் என்ன சொன்னார்?

இராகவன் கருப்பையா - கடந்த மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த தடுப்புக்காவல் கைதி கணபதி தொடர்பான சலசலப்புகளும் கண்டனங்களும் கோபமும் சோகமும் இன்னும் தணிந்திராத நிலையில் ஒரு மாதம் கழித்து அதே காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு மரணமும் ஜொகூரில் நிகழ்ந்த ஒரு மரணமும் நம்மை மேலும் உலுக்கியுள்ளது. கணபதி…

தடுப்புக்காவலில் பலியாகும் உயிரும், அரசின் கடமையும் – கி.சீலதாஸ்

ஒரு மனிதனின் உயிரை யாராலும் பறிக்க இயலாது. சில குறிப்பிட்ட சட்டங்களின் வழி மட்டும்தான் அது இயலும். நமது வாழ்க்கை பயணம் எவ்வித தடையுமின்றி, தொல்லையுமின்றி, இடைஞ்சலுமின்றி சுமூகமாக அமைந்திருக்க வேண்டுமென நாம் விரும்புவதில், அக்கறை கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கான அடித்தளம் அரசமைப்புச் சட்டத்தில்…

இனவாத பரிணாம அரசியலில் சிக்கிய மக்கள்!   

இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியில் இருக்கும் அம்னோவுக்கு நிகராக எதிரணியான பக்காத்தான் ஹராப்பானிலும்ஒரு மலாய்க்கார கட்சி இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் கண்ட கனவின் விளைவுதான் பெர்சத்துவின் உதயம் என்பது நமக்குத் தெரியும். இனவாதம் வழி ஒரு பெரும்பான்மையைப் பெற்று அதில் அதிகாரத்தைச் சுவைக்கும் அரசியலாகும். 1969-க்கு பிறகு உண்டான அரசியல் பரிமாணம் ஒரு புதிய…

தோட்டமக்களின் நாயகன் பால் சின்னப்பன் இயற்கை எய்தினார்.

மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம், மக்கள் சேவை இயக்கம் போன்றவற்றின் முன்னோடி அமைப்பாளரும் சமூகச் சேவையாளருமான டாக்டர் பால் சின்னப்பன் அவர்கள், நேற்று, 24 மே 2021 இயற்கை எய்தினார். 24.5.1950-இல் பிறந்த அன்னாரின் வயது 71 ஆகும். ச கடந்த சில மாதங்களாக உடல் நலம் குறைவால்…

தமிழ்ப்பள்ளி நமது உரிமை: அரசாங்கம் திட்டவட்டம்!

இராகவன் கருப்பையா -  இந்நாட்டில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் அரசியலமைப்புக்கு உள்பட்ட ஒன்று என அரசாங்கம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது இவ்வாண்டில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஒரு இனிப்பு செய்தியென்றால் அது மிகையில்லை. தமிழ், சீனப்பள்ளிகள் நம் நாட்டில் சட்டவிரோதமாக இயங்குகின்றன என தீபகற்ப மலேசிய மாணவர்கள் சங்கம்,…

பி40-இல் உள்ளவர்களும் முன்கள பணியாளர்களே!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து மருத்துவத்துறை மற்றும் காவல்துறை போன்ற முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த 2 தரப்பினருக்கு அடுத்தபடியாக எந்தத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை.  உதாரணமாக, பி40 பிரிவில் உள்ள மக்கள், உடல் உழைப்பைக் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் தான் கீழ்மட்ட வேலைகளிலும், நெருக்கமான…

காவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம்,  திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்

கணபதி என்பவர் காவல் துறையினரால்  துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் என்கின்ற குற்றச்சாட்டு நம் மனதைவிட்டு மறையும்  முன்னரே இன்னொரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயது நிரம்பிய சிவபாலன் சுப்ரமணியம் என்னும் ஒரு பாதுகாவலர் கோம்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் இறந்துவிட்டர் என்கின்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.…