கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகையில் எச்சரித்திருந்தார்.…

இலங்கை கடற்படையினர் சித்ரவதை செய்தனர்.. மீனவர்கள் கண்ணீர் பேட்டி..

தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துசென்று யாழ்பாணம் சிறைகளில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை சிறையில்…

இலங்கை: பேருந்தில் வெடிப்பு -19 பேர் காயம்

இலங்கையாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ என்ற இடம் நோக்கி சென்ற ஒரு பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் 12 அரசாங்க படையினர் உட்பட 19 பேர் காயமடைந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 7 ராணுவத்தினரும் 5 விமானப்படையினரும் அடங்குவர். இரு படையினரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. பண்டாரவளை என்ற இடத்துக்கு…

நாம் கேட்காத தமிழீழத்தை பொய்ப் பிரசாரங்கள் மூலம் மஹிந்த அணி…

“நாம் கேட்காத தமிழீழத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தேர்தல் காலத்துப் பொய்ப் பிரசாரங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் தற்போது (இன்று திங்கட்கிழமை) நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்து…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் தீர்வுகளின்றி ஆண்டொன்று தாண்டியும் நீள்கிறது!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் (பெப்ரவரி 20, செவ்வாய்க்கிழமை) ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கின்றது. இதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய போராட்டத்தின்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின்…

எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்:…

“எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள மற்றும் தோற்றம் பெற்று முடிந்த பல பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பில் சிலர் மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கின்றனர். எமது…

கச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும்…

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார். “இந்திய- சிறிலங்கா யாத்திரிகள் ஒன்று கூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்தமுறை திருவிழாவில் இந்தியாவில்…

பலாலியில் சிறிலங்கா படையினரின் புதிய பண்ணை – கூலிகளாக அமர்த்தப்படும்…

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களின் காணிகளில் புதிய பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர். வலி.வடக்கில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்…

புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெப்ரவரி 10 தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற…

‘தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும்’ – சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறும், சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், “உள்ளூராட்சி த் தேர்தலில்  சிறிலங்கா பொதுஜன…

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா,…

மகிந்த மீள்வருகை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, மேற்குலக இராஜதந்திரிகள், சிறிலங்கா அரசாங்கத்திடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கூட்டு எதிரணியினருடன்,…

திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4.சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது.…

நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்ல முடிவினை எடுக்க முடியும்; சி.வி.விக்னேஸ்வரன்…

“தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குப் பெற்றார். தனது கருத்துக்கள் இனங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடாதென நினைத்தோ என்னவோ, மஹிந்த ராஜபக்ஷ மகனான நாமல் ராஜபக்ஷவிடம் கூறி இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர் போல் தோன்றுகின்றது. எதுவாக…

மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல்

2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து,  நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.…

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அன்பான வேண்டுகோள்

பிரத்தியேக மருத்துவமனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடத்துகின்ற அனைத்து. முகாமையாளர்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்….,…

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த் தேசிய…

சூடுபிடிக்கிறது சிறிலங்கா விவகாரம் – கடும் அழுத்தம் கொடுக்குமாறு ஜெனிவா…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் பணியகத்தில் நேற்றுக்காலை நடந்த இந்தக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும், மனித உரிமை…

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன. இந்நிலையில்…

‘மஹிந்தவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவரை நாம் எதிர்க்கவும் வேண்டியதில்லை’;…

“இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளை நான் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று நாம் அவரை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “அரசியலானது செய்யக்கூடியதைச் செய்யும் கலை என்றார் ஜேர்மன் அறிஞர்…

இந்திய, அமெரிக்க தூதுவர்கள் மைத்திரி, ரணிலுடன் அவசர சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும், நேற்று அவசரமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசின் பங்காளிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதையடுத்து, கொழும்பு அரசியலில் குழப்பங்கள் தோன்றியுள்ளன. கூட்டு அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையை அடைந்துள்ள…

தற்போது பிச்சை கேட்க்கும் சம்பந்தர்: இதனை விட தூக்கு போட்டு…

மகிந்தரை நாம் வரவேற்கிறோம். ஒரு நல்ல கருமத்தை ஆற்ற அவர் எங்களோடு இணைந்து செயல்பட அவரை நாங்கள் அழைக்கிறோம். மகிந்த பெற்ற வெற்றியானது பெரும் வெற்றி. அவர் நாட்டின் ஒரு சிறந்த தலைவர் என்பதனை இது எடுத்துக் காட்டுகிறது என்று சம்பந்தர் கூறியுள்ளார். வெற்றிபெற்ற வேட்பாளர்கள் சிலரை தனது…

காணாமல் போன தமிழர்களை ராஜபக்ஷதான் திருப்பித்தர முடியும்: உறவினர்கள்

இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள். இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப்…