தேசிய அரசாங்கம் என்ற கவர்ச்சியில் மயங்கி தேடிக் கொள்ள போவது…

ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு தொகை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டும், எஞ்சிய தொகையினர் எதிர்க்கட்சித் தலைமைப்பதவியை அனுபவிப்பதற்குமாக செய்யப்படும் ஏற்பாடுகள் பாராளுமன்ற விழுமியங்களைப் பலிக்கடாவாக்கும் பாரம்பரியத்தை உருவாக்க இடமிருப்பதனால், எதிர்க்கட்சித் தலைமைக்கு இரட்டைத்தலை சுதந்திரக்கட்சிக்கு இடமளிக்காமல், மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு…

உள்ளக விசாரணை பொறி முறையை கோருவதற்கான சமிக்ஞையே நிஷா பிஸ்வாலுடனான…

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்புக்கு உள்ளக விசாரணை பொறிமுறையை கோருவதற்கான சமிக்ஞையே அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பின் போது எமக்கு காட்டப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 34 வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில் இன…

சர்வதேச விசாரணையை வலியுறுத்த போராட்டம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பொதுச் செயலாளரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை வருமாறு, தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் , மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில்…

இலங்கையில் காணாமல்போன தமிழர்களைக் கண்டுபிடிக்கக் கோரி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிக்க கோரி, சென்னை ஐ.நா. அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் அவையால் ஆகஸ்ட் 30ம் திகதியன்று சர்வதேச காணாமல் போனோர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இலங்கையில் போரின் போதும், அதற்கு பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை மீட்கக்…

தமிழ்த் தலைமைகளே உஷார்…! ஆபத்துக்கள் பல முனையில் இருந்து..?

தமிழர்களின் வாழ்வியலோடும் இலக்கியங்களிலும், தூது என்னும் சொற்களை நாம் கண்டிருக்கின்றோம். நமக்கு வேண்டியவர்களிடம் நம்மால் பேச முடியாமல் போனால் நம் சார்பில் இன்னொருவரை அனுப்புவதை தூது என்கின்றோம். இத்தூதை தமிழர்களின் இலக்கியப்பரப்பில் அதிகம் காணலாம். சங்க காலத்தில் இருந்து இன்று வரை தூதுவிடும் வழமை நமது பண்பாட்டில் பட்டுத்தெறித்திருக்கின்றது. சங்ககாலத்தில்…

போரில் உடல் உறுப்பை இழந்த நிலையில் நாடாளுமன்றம் செல்லும் முதல்…

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார். 8ஆவது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்துக்கு 63 புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராக…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை – நோர்வேயின்…

கடந்த வியாழக்கிழமை (27.08.2015) நோர்வேயின் சிறீலங்காவுக்கான இராஜதந்திரிகளின் ஏற்பாட்டில் நோர்வே தமிழ் அமைப்புகளுக்கான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பானது சிறீலங்காவை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றபோகின்றோம் என்று சொல்லாமல் சொல்லும் சந்திப்பாக இருந்தது என்பதுதான் உண்மை அதாவது தமிழ்மக்கள் பலமாக இருந்த காலத்தில் உலகக்கதாநாயகனான அமெரிக்கா தன்னுடைய புன்சிரிப்பு…

ஐ.நா போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னரே எமது நிலைப்பாடு வெளியிடப்படும்!…

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டதன் பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடமுடியும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்…

இனவாத அரசியலில் சிங்கள மக்களிடம் ஏற்படும் மாற்றமே தமிழருக்கான விமோசனம்!

இலங்கையின் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்று பத்து நாட்கள் கழிந்துவிட்ட நிலையிலும், அரசமைக்கப்போகும் கட்சியின் அல்லது தேசிய அரசின் மந்திரிசபை இன்னமும் பதவியேற்காத குழப்ப நிலை தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. “மழை விட்டும் தூவாணம் விடாததுபோல்” கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் இருந்த நிலைபோன்ற ஒரு அரசியல் நிலையே இப்போதும்…

போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை! தயான் ஜயதிலக வலியுறுத்தல்

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை என்று தயான் ஜயதிலக வலியுறுத்தியுள்ளார். முதலாவது வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தில் அமைச்சுப் பதவி வகித்தவரும், சிரேஷ்ட ராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க இது குறித்து விசேட நேர்காணல் ஒன்றை ரிவிர பத்திரிகைக்கு வழங்கியுள்ளார். அதில் தொடர்ந்தும்…

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க இலங்கையின் புதிய தந்திரம்!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 30வது அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், குறைந்து மூன்று முக்கிய சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் தயாரித்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு தகவலின்படி, சண்டேலீடர் ஸ்தாபகர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத்…

உள்ளக விசாரணை! தர்மசங்கடத்தில் கூட்டமைப்பு ஆதவாளர்கள்!!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞை காட்டியுள்ள நிலையினில் அதன் ஆதவாளர்கள் பலரும் மக்களிடத்தே கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆதரவாளர்களிற்கு பதிலளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் தயாராக இல்லையெனவும் கூறப்படுகின்றது.இதனால் பல ஆதவாளர்களும் முடக்க நிலையினை அடையத்தொடங்கியுள்ளனர். நிஸா பிஸ்வாலுடனான…

சர்வதேச விசாரணை வலியுறுத்தும் போராட்டத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்! சிவாஜிலிங்கம்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையை நிராகரித்து, சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் போராட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே வடமாகாண சபை உறுப்பினர்…

அமெரிக்கா கூறினால், அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை! ‘சர்வதேச விசாரணையே…

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கும், எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்புக்கும் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாக மாத்திரமே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் .. .. என்பதோடு சர்வதேச விசாரணையே கடந்த 60வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கான வழியாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…

அதிகாரத்தைப் பகிருமாறு அல்ல, ஒப்படைக்குமாறு கேட்கின்றோம்! சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறுதான் வலியுறுத்துவதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக இன்றைய திவயின சிங்கள பத்திரிகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அவர் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,…

காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்!?

இலங்கையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும் குறித்த நாடுகள் அது தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க மறுக்கின்றன. கடந்த…

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு கல்லறைகளில் மறைக்கப்பட்டனர்! திடுக்கிடும்…

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை…

குறும்பட நடிகை என்ற போர்வையில் யாழில் நடக்கும் விபச்சாரங்கள்

யாழில் குறும்படம் நடிப்பதாக கூறிவந்த நடிகை ஒருவர் , தனது மோபைல் போன் பழுதடைந்ததால் அதனை திருத்தக் கொடுத்துள்ளார். மோலைப் போனை திருத்த முற்பட்ட கடைக்காரர் அதில் குறித்த பெண் நிர்வாணமாக இருப்பதும் , பலருடன் அரட்டை அடித்து கிளர்சியான போஸ் கொடுத்து படத்தை எடுத்திருப்பதையும் அவதானித்துள்ளார். இதனை…

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம்!- இந்திய ஊடகம்

இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றம் காணப்படுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மிகவும் சிறப்பாகவும், நல்லவிதமாக இலங்கை நோக்கி பார்ப்பதற்கு அமெரிக்கா ஆரம்பித்து விட்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. யுத்ததின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வெளியாகும் காரணங்கள் தொடர்பில் உள்ளூர் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை…

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சந்திப்பில் திருப்தி…! செப்டெம்பர் அறிக்கையில்…

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சந்திப்பில் தமிழ் மக்களுக்குரிய முக்கியமான விடயங்கள் அனைத்தும் பேசப்பட்டது. விசேடமாக, 65 வருடகாலமாக ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு எட்டாத விடயமாக இருந்து வந்துள்ளது. https://youtu.be/NSKki-ZFxBk அந்த வகையில், நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட்டு, ஒற்றுமையாக ஒரே நாட்டுக்குள் வாழ்வது…

நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நிறைவேற்றுமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துவார் நிஷா…

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியை  நிறைவேற்றுமாறு வலியுறுத்தவே அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று கொழும்பு வரவுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி…

சர்வதேச மத்தியஸ்தமா? தூக்கத்தில் கூட்டமைப்பு!!

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்பு காட்டிவரும் போலிமுகம் மீண்டுமொரு முறை அம்பலமாகியுள்ளது. சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழான பேச்சு தொடர்பில் கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் இன்று கொண்டு வந்த பிரேரணை ஆமோதிக்க எவருமின்றி கைவிடப்பட்டுள்ளது. பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அங்கு கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்கள் 19பேரும் எதிர்கட்சி…

மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படும்: ஆனால் பொலிஸ் அதிகாரம்…

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்படுமென்றவாறான கருத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். எனினும், பொலிஸ் அதிகாரம் குறித்து நீண்ட சிந்தனை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென…