ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவு கிடைக்கும் என நம்;புவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் மீது…

வடமாகாண சபையின் தீர்மானம்! ஐ.நா சபை மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு…

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இன அழிப்பு தொடர்பான முக்கியமான இரு தீர்மானங்கள், முதலமைச்சரின் கடித தலைப்பு மற்றும் கையெழுத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கும், 47 அங்கத்துவ நாடுகளுக்கும் கையளிக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஒப்புதல் வழங்கிருந்தார். இந்நிலையில், குறித்த இரு தீர்மானங்களையும், தனது கையொப்பத்துடன் இன்றையதினம் மாகாணசபை…

தமிழர் பிரச்சினையை வெறுமனே பொருளாதார பிரச்சினையாக கருத முடியாது: மனோ…

பொருளாதார பிரச்சினை என்று கூறி தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வைத்தியசாலைகளை அமைத்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற அடிப்படைகளை மேற்கொண்டால், இனப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று வாதிடுகின்றனர். எனினும் அதிகாரப்…

மண்டையில் சுடும் சிங்கள ராணுவத்தை அடையாளம் காண முற்படுகிறதாம் இலங்கை…

இலங்கை அரச படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் சனல்4 ஆவணப்படங்களில் இடம்பெறும் இராணுவ உறுப்பினர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இலங்கை இராணுவ நீதிமன்று இந்த…

யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள அரசியல் மோதல் – இந்திய நாளிதழ்

2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது. இந்த மோதல் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்,  தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா! – ஆழமான கருத்துக்…

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதவான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரலாம் என்று கூறப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி சர்வதே தொழில்நுட்பங்களின் உதவியுடன் உள்நாட்டு அரசு விசாரிக்க கோருவதுதான் அந்த தீர்மானத்தில் நோக்கம். அதாவது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்…

மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி…

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி த.தே.கூ உறுப்பினர்கள் ஜெனீவா…

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில்… …சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று ஜெனீவாவுக்கு செல்லவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய…

உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என மக்கள் கூறுவதில் தவறில்லை!- ஆர்.சம்பந்தன்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று மக்கள் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை மற்றும்…

இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி நிற்பது தமிழின அழிப்பிற்கான சர்வதேச…

உலக நாடுகளின் துணையுடன் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழர்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உறுதியுடன் ஒற்றைப்புள்ளியில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இனப்படுகொலைக் குற்றத்தின் நேரடிப்பங்காளர்களின் எண்ணங்களிற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சர்வதேச சுயாதீன விசாரணையை மறுத்து உள்ளூர் விசாரனைப் பொறிமுறையை சில சக்திகள்…

பிரபாகரனின் மரணம்! பொன்சேகா ஒப்புக்கொண்ட உண்மை

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் பகிரங்கமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், இறுதிக்கட்டப் போர் பற்றிய பல தகவல்கள் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.   இறுதிக்கட்டப் போர் - வெளியுலகத்…

சம்பந்தர், சுமந்திரன்,மாவை கூட்டு தமிழ் மக்களை வாழவைக்குமா? அதளபாதாளத்தில் தள்ளுமா?

இலங்கையில் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலானது நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒட்டுமொத்த இலங்கை அரசியலிலும் வடக்கு-கிழக்கு அரசியலிலும்கூட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பகுதியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கான தேசிய அரசாங்கமாக…

இலங்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கு த.தே.கூ முயலக் கூடாது: எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகள் இலங்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கு பயன்படக் கூடாது என்று அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான…

தொடர்கின்றது மக்கள் போராட்டம்! வடகிழக்கெங்கும் விஸ்தரிப்பு!!

இலங்கையில் இறுதிக்கால யுத்ததின்போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்தோர்க்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைப் பொறிமுறையொன்றினை ஏற்படுத்தக் கோரி மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு வடக்கு கிழக்கு எங்கும் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர்…

இலங்கை போர்க்குற்றம்… பின்வாங்கிய அமெரிக்கா..!

ஈழத்தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையும் கைவிட்டுச் சென்று கொண்டு இருக்கிறது. பலரிடம் ஏமாந்து பழக்கப்பட்ட ஈழத்தமிழர்களை, மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது அமெரிக்கா. இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்த அதே அமெரிக்கா, இன்று உள்நாட்டு விசாரணையே போதும் என்று…

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் – நரேந்திர…

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் நடக்கும், உலக இந்து- பௌத்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள, சந்திரிகா…

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதால் தாம் வாழ்வாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்.குடாநாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் யாழ்.மாவட்டக் கடற்றொழில் நீரீயல் வளத்துறை திணைக்களத்தில் நடைபெற்ற மீனவர்கள் கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள்,…

கருணாவும் கருணாநிதியும் வரலாற்றுத் துரோகிகள்..! சீறும் அனந்தி சசிதரன்

கருணாவும் கருணாநிதியும் வரலாற்றுத் துரோகிகள் என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவரின் நேர்காணல் வருமாறு, சர்வதேச காணாமல் போனோர் தினம் ஆகஸ்ட் 31ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டது. அன்று, சென்னை…

அவர்கள்தான் இவர்கள் இவர்கள்தான் அவர்கள் – புகழேந்தி தங்கராஜ்

2009க்குப் பிறகு, தொடர்ந்து ஒரு நயவஞ்சக நகர்வை வேதனையுடன் கவனித்து வருகிறேன்.... 'பிரபாகரன் மாதிரி ஒரு வலுவான தலைமை தமிழினத்துக்கு இனிமேல் கிடைக்கப் போவதில்லை... பிரபாகரன் மனிதனில்லை.... கடவுள்....... ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிரபாகரன்கள் பிறக்கிறார்கள்....' என்றெல்லாம் சொல்லித் திரிகிறவர்கள் தான் மிகமிக  ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆட்டின் கழுத்தில்…

கையாலாகாத பதவியும் கவுண்டு போன தமிழ் தேசிய கூட்டமைப்பும்

இலங்கையில் உள்ள இரண்டு பெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை , நிறுவியுள்ள நிலையில். எதிர்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பையும். எதிர்கட்சி தலைவராக சம்பந்தரையும் ஏற்றுக்கொண்டுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய. இதனை முன் மொழிந்தவர் ரணில். இன் நிலையில் உனடியாக சர்வதேச ஊடகங்களை தொடர்புகொண்ட இலங்கை ஊடக…

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர். அப் பகுதிக்கு இன்று மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக்…

சர்வதேசத்தின் நலனுக்காக எமது மக்களை அடகு வைக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

சர்வதேச நாடுகளின் நலனுக்கான எமது மக்களை நாம் ஒருபோதும் அடகு வைக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 34வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற இன அழிப்புக்கு சர்வதேச விசாரணையே தேவை என…

மீண்டும் போராட தயாராகின்றது தமிழர் தாயகம்!

இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி வட-கிழக்கு தமிழர் தாயகமெங்கும் போராட தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர்.அமெரிக்கா உள்ளக விசாரணை பற்றி பிரஸ்தாபித்துள்ள நிலையினில் சர்வதேச விசாரணை அதனூடாக நீதி வேண்டி இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,மாணவர் ஒன்றியம்,சிவில் சமூகம்,பொது அமைப்புக்கள்,அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம்,வெகுஜன அமைப்புக்கள்,காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கம்,உள்ளுர்…