இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
கனேடிய நா.ம உறுப்பினா் ராதிகா யாழில்: ஈ என மொய்க்கும்…
கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார் என தெரிகிறது. எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில்…
அரசியல் தீர்வு காண்பதற்கு ஆளும் தரப்பும் கூட்டமைப்பும் நெகிழ்வுடன் செயற்பட…
சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள விரைவில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மிகவும் அவசியம். அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆளும்தரப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டியது மிக அவசியமாகும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். உலகில் கடந்த காலங்களில்…
தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!
இன்றைய இலங்கைச் சூழலில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டோர் திட்டமிட்ட வகையில், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடியொற்றி சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேற்கொள்ளும் கருத்தியல் மற்றும் பௌதீகத் தன்மை வாய்ந்த தாக்குதல்களைக் கிஞ்சித்தேனும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீதான…
சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுக்க அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பும்…
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்னர் சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முனைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கம், அமைச்சர்கள் மட்ட குழுக்களை சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி, கற்றுக்கொண்ட பாடங்கள்…
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இளைஞர்கள் விசேட உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 34 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான…
மீண்டும் பேச்சுப் பொறி! நழுவும் தமிழ் கூட்டமைப்பு
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில் பதிலுரை ஆற்றியபோதே அவர் இந்த…
பல ஆபத்துக்களுடன் அடுத்தாண்டுக்குள் நகரும் இலங்கை
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் 2013 ஆம் ஆண்டை கடந்து 2014 ம் ஆண்டில் கால் வைக்கும் போது ஆபத்தான நகர்வை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவிக்கிறது ஏற்கனவே நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அதிக கடன் நாட்டை ஆட்கொண்டுள்ளது. அபிவிருத்தி என்ற பெயரில் அதிகளவான…
இலங்கை தொடர்பான அறிக்கையை மார்ச் 26ல் சமர்ப்பிக்கிறார் நவி.பிள்ளை
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2014 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளார். நாடுகளின் பிரிவு அட்டவணையின்போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை விவாதத்துக்காக திறக்கப்படும் போது இலங்கை அரசாங்கத்தின் விமர்சனங்களும் கருத்துக்களும் கோரப்படும். 25வது மனித…
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி: இன்று மேலும் சில மனித எச்சங்கள்…
திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் இன்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் இத்தேடுதல் பணிகள் நடைபெற்றது. இதன்போது குறித்த பகுதியில் பாதையின் நடைபாதையின் ஒரு பகுதி…
மாத்தளை புதைகுழி எலும்புகளை சீனாவுக்கு அனுப்பக் கூடாது!- காணாமல்போனோரின் உறவினர்கள்…
இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது: அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சர்வதேச அரசியல் லாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தீர்வுக்காக…
தமிழ் கூட்டமைப்பினரும் ஜெனிவா மாநாட்டில் பங்கேற்றால் அது பெரும் சக்தியாக…
தமிழ் மக்களை அடக்கியாள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை ஜெனிவாவில் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதன்பிரகாரம் எதிர்வரும் மார்ச்…
இலங்கையில் போரில் இறந்தவர்களை கணக்கெடுக்க வடக்கு மாகாண அரசு முடிவு
இலங்கையில் உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தனியாகக் கணக்கெடுக்கப் போவதாக வடக்கு மாகாண அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் 37 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 2009இல் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடைசி மாதங்களில் சுமார் 40,000 அப்பாவி மக்கள் இறந்ததாகவும் ஐ.நா.…
ஐநா தீர்மானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி மதிப்பாய்வு செய்ய…
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத…
நாடு ஆபத்தில் விழும்வரை காத்திருக்க வேண்டாம்: பேராயர் கர்தினால் வேண்டுகோள்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நேர்மையான பேச்சுவார்த்தைக்கு கட்சி பேதமின்றி சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதற்கான பங்களிப்புகளை வழங்க தனிப்பட்ட வகையில் தான் தயாராக இருப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல அரசாங்கங்களின் கீழ் சர்வக் கட்சி பேச்சுவார்த்தைகள்…
அரசாங்கத்தின் காணாமல்போனோர் கணக்கெடுப்பில் நம்பிக்கையில்லை: எம்.ஏ.சுமந்திரன்
இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய செய்தி சேவை ஒன்றுக்கு தகவல் வெளியிடும் போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதன்போது கிராம மற்றும் போரால்…
வட மாகாண முதலமைச்சர் – ஆளுநருக்கிடையில் முறுகல் நிலை தீவிரம்
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிகுமிடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது. வடமாகாண பிரதம செயலாளராக உள்ள விஜயலட்சுமி சுரேஸுக்கு இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலின்போது பதவி விலகுமாறு விஜயலட்சுமி…
போர்க்கால சேத கணக்கெடுப்பு: ததேகூ-வின் நிராகரிப்பும் அரசின் பதிலும்
இலங்கையில் போர்க்கால இழப்புகள் பற்றிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பு மீதான விமர்சனங்களையும் சந்தேகங்களையும் இலங்கை புள்ளிவிபர திணைக்களம் நிராகரித்துள்ளது. கணக்கெடுப்பு நடைமுறை பற்றிய அறிவின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரிப்பதாக நேற்று புதன்கிழமை அறிவித்ததாகவும் புள்ளிவிபர திணைக்களத்தின் தலைமை இயக்குநர் டிசிஏ குணவர்தன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கை…
முன் நாள் புலிகளின் தளபதி ஒருவரை வைத்து மீண்டும் ஆரம்பிக்க…
தற்போது இலங்கை அரசின் பிடியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன் நாள் தளபதி ஒருவரை வைத்து, அவ்வியக்கத்தை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமக்கு இது தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சர்வோதையா அமைப்பின் ஆண்டு விழாவில்…
இலங்கை தமிழர்களை சிறுபாண்மை இனத்தவர்கள் என்கிறார் செல்வி ஜெயலலிதா !
இலங்கையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கிவருகிறது, மற்றும் ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பது போன்ற விடையங்களுக்காக குரல்கொடுத்துவரும் செல்வி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் உள்ள தமிழர்களை "சிறுபாண்மை இனத்தவர்கள்" என்று கூறியுள்ளார். பல தமிழர்களும் வேற்றின மக்களும்…
அரசின் போர்க்கால இழப்பு கணக்கெடுப்பை ததேகூ நிராகரிப்பு
இலங்கையில் போர்க்கால இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர்கள் வவுனியா நகரசபையில் கூடி இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய உயர்மட்டக் கூட்டத்தின்போதே, இந்தக் கணக்கெடுப்பை நிராகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதனிடையே, இனப்பிரச்சனை தீர்வு…
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் திடீர் நிறுத்தம்! இதுவரை…
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்றுத் திடீரென நிறுத்தப்பட்டன. வரும் சனிக்கிழமை வரை தோண்டும் பணிகள் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட 11 மண்டையோடுகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை, குடிதண்ணீர் குழாய் இணைப்பு வேலைகளுக்காக…
ஐக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்கும் இலங்கையின் பிரதிநிதியில் மாற்றம்! லலித் வீரதுங்க…
இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று இதனை குறிப்பிட்டுள்ளது. சிவில் சேவையாளர் என்ற அடிப்படையில் லலித் வீரதுங்கவின் விளக்கங்கள் சர்வதேச அழுத்தங்களை குறைக்கக்கூடு;;;ம் என்ற அடிப்படையிலேயே…


