“போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை”

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என்றும் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இதனை வன்மையாக…

கலஹா பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புபுரெஸ்ஸ வீதியின் வெதஹெக்க காட்டுப்பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) இரவு கம்பளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் கலஹா பொலிஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதல்…

அனைத்து இன மக்களும் இலங்கையர்களே என்பது தமிழ் மொழிப் பாடத்…

தமிழ் மொழியிலான வரலாற்றுப் பாடநூல்களைக் கற்கின்ற மாணவர்களுக்கு, தமிழர் மற்றும் இஸ்லாமியர் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தினைத் தோற்றுவிக்கும் வகையில் பாடநூல்கள் அமைந்திருப்பது, கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்…

மரண தண்டனை நிறைவேற்றும் சிறிசேனவின் முடிவுக்கு எதிராக போராட்டம்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. கொழும்பு - வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை முதலாவது போராட்டம் தொடங்கியது. வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட சமூக செயற்பாட்டாளர்கள், மரண தண்டனை நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை கைவிடுமாறு…

விகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பௌத்த விகாரை, தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இரண்டு கட்ட தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து சி.ஜ.டி.யினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக…

இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்ப்பட்டன; ஆதாரங்கள் இருக்கின்றன!

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி…

லண்டனில் உள்ள இந்த முஸ்லீம் குடும்பத்தினர் சிரியா சென்று கருகி…

லண்டன் லூட்டனில் வசித்து வந்த இந்த முஸ்லீம் குடும்பத்தினர். ஐ.எஸ் தீவிரவாதிகளோடு இணைய ஆசைப்பட்டு. லண்டனில் இருந்து சிரியா சென்றுள்ளார்கள். இக் குடும்பத்தில் 11 பேர் அடங்குவதாக லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதில் 5 வயது மற்றும் 2 வயது சிறுவர்களும் அடங்குகிறார்கள்.குறித்த குடும்பத்தினர், ஐ.எஸ்…

சஹ்ரான் ஹாஷிமின் முகாமிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

இலங்கையில் ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு மூளையாகச் செயற்பட்டதோடு, சங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் என, இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் காத்தான்குடி - ஒல்லிக்குளம் முகாமிலிருந்து வெடிபொருட்கள் உட்பட ஆயுதங்களை, நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். சஹ்ரானின் நெருங்கிய நண்பர் முகம்மத்…

‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’

‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும்  சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம் உக்கிரமடைய நாங்களும் காரணம் அல்ல; புத்த பிக்குகளும்…

ஹிஸ்புல்லாஹ்வை வைத்து சஹ்ரான் சாதித்த காரியங்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன்

அம்பாறை காத்தான்குடியில் சஹ்ரான் இருந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அதிகாரங்களை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவை கட்டி எழுப்பியதாக மட்டு.விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார். அவர்கள் காதல் எனும் பெயரால் தமிழ்ப் பெண்களை கடத்தி சென்று தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுவதாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை…

அரபு நாடுகள் இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் தமது நாட்டுக்கு வந்து…

இலங்கையை விட்டு வெளியேற சுமார் 7,000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் தயாராக உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் சில செய்திகள் வெளியாகி இருந்தது. மக்காவை சூழ உள்ள நாடு ஒன்றிடமே இலங்கையில் உள்ள சில முஸ்லீம் தலைமைகள் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குறித்த அரபு…

பௌத்த – இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?

கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில்…

ரணில் கூட்டமைப்பை நம்பவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

வவுனியா பாலமோட்டையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக செயற்பட்டிருந்தது. ஆனால் இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பினராகிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு…

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்…

கல்முனைக் கோபம்; கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம் தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை நிபந்தனைகள் ஏதுமின்றி கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சிக்’ காலத்தில்…

ஓநாய் அழுத கதை

‘சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.…

முத்தையா சகாதேவன் உயிரிழப்பு – இலங்கை அரசே காரணம் என…

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.…

‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட…

அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், 1990-ம் ஆண்டு, ராமேஸ்வரத்துக்கு வந்தனர். பின்னர், தீவிர விசாரணைக்குப் பின் இங்கே உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். விருதுநகர்…

முஸ்லிம்கள் தமிழர்களின் உரிமையை தட்டிப் பறிக்க எந்த உரிமையும் இல்லை-…

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம் தலைமைகளுக்கு காத்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக அதன் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக…

‘நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை’

கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை. இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்கிறது ஏஎன்ஐ செய்தி முகமை. இந்தாண்டு ஜனவரி மாதம் இவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள், நியூசிலாந்து சென்ற பின் அழைக்கிறோம் என்று…

துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள்

பல்லின நாடொன்றிலான நமது சமூக, அரசியல் சூழலில் விவகாரங்களையும் நெருக்கடிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பிழையான முன்மாதிரிகளை நிகழ்காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதில் ஆகப் பிந்திய விடயமானது  - காவியுடை உடுத்த பௌத்த துறவி ஒருவர், உண்ணாவிரதம் இருந்தால் அவரது கோரிக்கையிலுள்ள சரி, பிழைகளுக்கு அப்பால்…

தமிழீழம் தான் தீர்வு என்று சொல்கிறாரா சம்பந்தன்?

அதியுச்ச அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கினால் மாத்திரமே இலங்கை நாடு இரண்டாக பிளவுபடும் அபாயத்திலிருந்து தப்பிக் கொள்ளலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை…

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அனைத்து…

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஹாஷிமின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டிருந்தார். போலீஸார் மற்றும் புலனாய்வுத்துறை…