‘ஹுடுட்’ எங்கள் துறையில் இல்லை, கிளாந்தானின் முன்மொழிவுக்கு முஸ்லீம் மருத்துவர்கள்…

ஹுடுட் சட்டத்தின் கீழ், திருடர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் கையை  அறுவைசிகிச்சையின் வழி துண்டிக்க, மருத்துவர்களைப் பயன்படுத்தலாம் எனும் கிளாந்தான் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு மூன்று முஸ்லீம் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை எனும் தங்கள் தொழில்முறை உறுதிமொழிகளை அது மீறுவதாக, அந்த டாக்டர்கள்  எஃப்.எம்.தி.-யிடம்…

மலாய்க்கார்-அல்லாதாரும் நாட்டுக்காகவும் மன்னருக்காவும் போராடியிருக்கிறார்கள்

“ஆக்கிரமிப்பாளர்களையும்    கம்முனிஸ்டுகளையும்  எதிர்த்துப்    போராடியவர்கள்  மலாய்க்காரர்கள்  மட்டுமே”  என்று  முஸ்லிம்  சங்கங்களை   ஒருங்கிணைக்கும்  உம்மா  அமைப்பின்  தலைவர்   இஸ்மாயில்  மினா  அஹமட்    கூறியதாக     வெளிவந்துள்ள   செய்திக்குக்   கண்டனம்    தெரிவிக்கப்பட்டது. மலாய்  மெயில் ஆன்லைனில்   வெளிவந்த   செய்தி  குறித்து  கருத்துரைத்தபோது   பெர்சத்துவான்    பேட்ரியோட்   கெபாங்சாஆன்(நாட்டுப்பற்றாளர்  சங்கம்)  தலைவர்  பிரிகேடியர்- ஜெனரல்(பணி…

‘புரோட்டன் சகா’ பெயரை உருவாக்கியவர் காலமானார்

புரோட்டன் நிறுவனத்தின் முதல் காரின் பெயரை உருவாக்கியவரான, ஓய்வு பெற்ற இராணுவ வீரர், இஸ்மாயில் ஜாஃபார், முதுமை காரணமாக நேற்று மாலை, தன் வீட்டில் காலமானார். 71 வயதான இஸ்மாயில், நாட்டின் முதல் காரின் பெயரை உருவாக்கும் போட்டியில் கலந்துகொண்ட 102,823 பங்கேற்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1985, செப்டம்பர் 1-ம்…

அஸ்மின் கோம்பாக் தொகுதியை மகாதிருக்கு விட்டுகொடுக்கத் தயார்

பிகேஆர்  துணைத்  தலைவர்   அஸ்மின்  அலி  அடுத்த   பொதுத்   தேர்தலில்   கோம்பாக்   தொகுதியை   பக்கத்தான்  ஹரபான்  பிரதமர்   வேட்பாளரான  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு   விட்டுக்கொடுக்க   முன்வந்தார். “பிகேஆர்   ஒத்துக்கொண்டால்  கோம்பாக்கை   மகாதிருக்கு   விட்டுக்கொடுக்கத்    தயராக   இருக்கிறேன்”,  என்றவர்  நேற்றிரவு  டிவிட்டரில்  கூறினார். 2013   பொதுத்  தேர்தலில்   அஸ்மின்  4,734 …

இருமொழித் திட்டத்தை அமல்படுத்தும் தமிழ்ப்பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,…

  இருமொழித் திட்டம் சட்டவிரோதமானது, அரசமைப்புக்கு முரணானது. அத்திட்டத்தை அமல்படுத்தும் தமிழ்ப்பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள "தமிழ் எங்கள் உயிர்" என்ற பணிப்படை சூளுரைக்கிறது. தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பட்டுள்ள உரிமையை இந்த இருமொழித்…

ஜொகூரில் ‘பெர்சத்து’ சின்னத்தைப் பயன்படுத்த டிஏபி-க்குப் பரிந்துரை

ஜொகூர் கிராமப்புறங்களில் வசிக்கும் மலாய்க்காரர்கள், டிஏபி மீது அச்சம் கொண்டிருப்பது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கு, குறிப்பாக பெர்சத்துவுக்குத் தடையாக இருக்குமென அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. முன்னதாக, மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இடங்களில், பெர்சத்து மூலம் வாக்குகளைத் திரட்ட ஹராப்பான் திட்டமிட்டிருந்தது. ஆனால், பாரிசானுக்கு வாக்களிக்கவில்லை என்றால்,…

தேர்தல் எல்லை மீள்வரையறை, வாக்காளர்கள் இடமாற்றம் – லங்காவிக்கு சவாலாக…

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர், தேர்தல் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு, வாக்காளர்கள் பிரிக்கப்பட்டதால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் லங்காவியைக் கைப்பற்றுவது சற்று சிரமமான வேலை என்று கூறியுள்ளார். இதுநாள்வரை, அம்னோவின் கோட்டை என்று கூறப்பட்ட அங்கிருந்து, சுமார் 1000 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.…

ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடும்

பக்காத்தான் ஹராப்பான், தனது சரியான கொள்கைகளைத் தொடரும், குறிப்பாக சீர்திருத்தத்திற்கான போராட்டம், நீதி, அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பு, முற்போக்கு மற்றும் எளிமை போன்றவற்றின் வெளிப்பாடாக தங்கள் தேர்தல் அறிக்கை திகழும் என்று பெர்சத்து கட்சியின், திட்டம் மற்றும் கொள்கைபிரிவுத் தலைவர் டாக்டர் ராய்ஸ் ஹுசின் முஹமட் ஆரிப்  கூறியுள்ளார்.…

மாஹ்பூஸ் : பெரும்பாலான மக்கள் மகாதீரை ஏற்றுக்கொண்டனர்

பொதுத் தேர்தல் (ஜி.இ.) நெருங்கி வரும் வேளையில், தாங்கள் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது போலான கூற்றை வெளிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதைப் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் உடனடியாக நிறுத்த வேண்டும். பாஸ் துணைத் தலைவர் மாஹ்பூஸ் ஓமார், அனைத்து முரண்பாடான கருத்துக்களும் வாக்காளர்களுக்குத் தவறான செய்தியைக் கொடுக்கும்…

ஜொகூர் அமானா இளைஞர் அணி : உறுப்பினர்கள் புறக்கணிக்கும்படி நடந்துகொள்ள…

ஜொகூர் நாடாளுமன்ற நாற்காலி பகிர்வில் அதிருப்தியடைந்த, ஜொகூர் அமானா இளைஞர் அணி இன்று, தங்கள் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜொகூரில் இருக்கும் 56 சட்டமன்றத் தொகுதிகளில், தங்கள் கட்சிக்கு 18 இடங்களைக் கட்டாயம் வழங்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்களிடம் போதுமான தேர்தல் இயந்திரங்கள்…

உண்மையில் அவை சிறையில் இருக்கும் அன்வாரின் அறிக்கைகளா, நூர் ஜஸ்லான்…

சிறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் விடும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் நடவடிக்கைகள் குறித்து, உள்துறை துணையமைச்சர் நூர் ஜஸ்லான் கேள்வி எழுப்பியுள்ளார். சிறைக் கைதிகள் வெளியிடும், எந்த வகையிலான தகவலும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று, சிறைச்சாலை தலைமை இயக்குநரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். “அண்மைகாலமாக, அன்வார்…

கோயில் உடைக்கப்பட்ட சம்பவம், மக்களை அமைதி காக்கும்படி ஜொகூர் எம்பி…

ஜொகூர் மாசாய்யில், கோயில் உடைக்கப்பட்ட சம்பவத்தில் அமைதி காக்கும்படி ஜொகூர் மந்திரி பெசார் முகமட் காலிட் நோர்டின், ஜொகூர் மக்களைக் கேட்டுக்கொண்டார். நீண்ட காலமாக நடந்துவந்த நிலப் பிரச்சனையால் இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது, மாநில அரசு மிகவும் நியாயமான தீர்வை வழங்கும் என்று காலிட் சொன்னார். "இந்த விவகாரத்தின் தீவிரத்தைத்…

சிலாங்கூரில் திடீர் தேர்தல்?

அமனா   கட்சி   அடுத்த  பக்கத்தான்  ஹரபான்   கூட்டத்தில்   சிலாங்கூரில்  திடீர்   நடத்தும்  ஆலோசனையை  முன்வைக்கும். தேர்தல்  ஆணையத்தின்   தேர்தல்  தொகுதிகளைத்   திருத்தி   அமைக்கும்   நடவடிக்கைகளை  எதிர்கொள்ள  இது  நல்ல   உத்தியாக   அமையலாம்   என  சிலாங்கூர்  அமனா   தலைவர்   இஷாம்  ஹஷிம்  கூறினார். “இந்த   ஆலோசனையைப்    பரிசீலனைக்குக்  கொண்டு   செல்வேன்......அதன் …

பெல்டா விசாரணை அறிக்கை அடுத்த வாரம் ஏஜிசி-இடம் வழங்கப்படும்

போலீசார்,   பெல்டா  நில  உரிமை  மாற்றப்பட்டது   தொடர்பிலான   விசாரண   அறிக்கையை   அடுத்த   வாரம்   சட்டத்துறைத்   தலைவர்   அலுவலகத்தில்  ஒப்படைப்பார்கள்   என   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   முகம்மட்  புஸி  ஹருன்   இன்று   கூறினார். ஆனால்,   விசாரணை   எந்த   அளவில்  உள்ளது   என்பதை  அவர்  கூறவில்லை.  அது  தொடர்கிறது   என்று …

நஜிப் சிறையிடப்படுவார் என்பது பொய்யான செய்தி: சினார் ஹரபான்

பொதுத்  தேர்தலில்   பிஎன்  தோல்வியுற்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சிறை  செல்வார்   என்று  சினார்  ஹரியானில்  வெளிவந்ததுபோன்ற  ஒரு  செய்தி  பொய்யானது   என   அந்நாளேடு  கூறியது. சமூக  வலைத்தளங்களில்   வைரலாகியுள்ள   அச்செய்தியில்  பிரதமரின்  படமொன்று  வெளியிடப்பட்டு     “நான்  தோற்றால்   அன்வார்  இப்ராகிம்போல்   சிறை  செல்வேன்,  சிறையிலிருந்தவாறே   இறந்துபோகவும் …

ஏன் ‘குற்றவாளி’ அன்வாரை பிரதமர் நஜிப் சென்று பார்த்தார்?, கேட்கிறார்…

  மருத்துவமனையில் குணமடைந்து வரும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மை ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் மகாதிர் சந்திக்கச் சென்ற போது அவரை சிறைக் காவலர்கள் தடுத்து விட்டனர். அது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் நூருல் ஜஸ்லான், அன்வார் ஒரு 'குற்றவாளி' என்று…

நூருல் இசா : கர்பால் மகளின் கவலை நியாயமானது, அதனைச்…

துன் டாக்டர் மகாதீர் முகமட்டைப் பிரதமர் வேட்பாளராக நியமிக்க, பக்காத்தான் ஹராப்பான் செய்த முடிவுக்கு, அதிருப்தி தெரிவித்துள்ள கர்பால் சிங் மகளின் கூற்றுக்கு செவிசாய்க்க வேண்டும் என அன்வார் இப்ராஹிமின் மூத்த மகள், நூருல் இசா தெரிவித்துள்ளார். பிகேஆர் துணைத் தலைவருமான நூருல் இசா, சங்கீத் கோர் டியோ…

மாநில ஹரபான் கூட்டறிக்கையில் சிலாங்கூர் பிகேஆர் கையெழுத்திடவில்லை

பக்கத்தான்    ஹரபான்    இரண்டாவது   தேசிய   மாநாட்டின்  பிரகடனத்தை   ஏற்றுக்கொள்ளும்  கூட்டறிக்கையில்  சிலாங்கூர்  பிகேஆரின்  பெயரைக்  காணவில்லை. நேற்று   வெளியிடப்பட்ட    மாநில   அளவிலான   கூட்டறிக்கையில்  சிலாங்கூர்   அமனா   தலைவர்   இஸாம்  ஹஷிம்,  சிலாங்கூர்   டிஏபி   தலைவர்  டோனி  புவா,  சிலாங்கூர்   பெர்சத்து    தலைவர்   அப்துல்  ரஷிட்  அசாரி   ஆகிய  மூவர் …

நஜிப் பற்றிப் பதிவிட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து ஜைட் விடுதலை

ஒரு   வலைப்பதிவில்   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கால்   நாட்டுக்கு   அபாயம்    என்று   பதிவிட்டிருந்தார்  என்று  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  முன்னாள்   சட்ட   அமைச்சர்     ஜைட்   இப்ராகிமை   கோலாலும்பூர்  செஷன்ஸ்   நீதிமன்றம்  இன்று  விடுவித்தது. அவரை   விடுவித்த     நீதிபதி    ஜமான்   முகம்மட் நூர்   அரசுத்தரப்புப்  போதுமான   ஆதாரங்களைக்  காண்பிக்கத்  தவறிவிட்டது   என்று  …

அன்வார் ஒரு கைதி, சிறைச்சாலை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்- நூர் ஜஸ்லான்

சிறையில்   உள்ள   எதிரணித்   தலைவர்  அன்வார்  இப்ராகிமையோ   அல்லது  வேறு  எந்தவொரு  கைதியையோ    சென்று  காண  விரும்புவோர்   சிறைத்துறையின்  முன்   அனுமதியைப்  பெற வேண்டும்    என்று உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்   முகம்மட்  கூறினார். அதனால்தான்  நேற்று செராஸ்  மறுசீரமைவு  மருத்துவமனையில்     அன்வாரைக்  காண     முன்னாள்  பிரதமர்  …

இடதுசாரி கூட்டணி 99 விழுக்காட்டினருக்கான தேர்தல் அறிக்கையைச் சமர்ப்பித்தது

மலேசிய சோசலிசக் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி, ’99 விழுக்காட்டினருக்கான தேர்தல் அறிக்கை’-ஐ இன்று வெளியிட்டது. ஒரு வருடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 18 முக்கியப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் இலக்கோடு, 6 கூறுகள் கொண்ட அத்தேர்தல் அறிக்கையை, இவ்வாண்டு நடைபெறவுள்ள 14-வது பொதுத் தேர்தலுக்காக இடதுசாரி கூட்டணி…

அன்வாரை சந்திக்க விடாமல் சிறைக் காவலர்கள் மகாதிரை தடுத்து விட்டனர்

  செராஸ் மருத்துமனை மறுவாழ்வு மையத்தில் குணமடைந்து வரும் அன்வார் இப்ராகிமை பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் சந்திப்பதலிருந்து இன்று மாலை சிறைக் காவலர்களால் தடுக்கப்பட்டார். இதற்கான உத்தரவு உள்துறை அமைச்சிடமிருந்து வந்ததாக தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். "எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவரைச்…

பினாங்கு சுரங்கத் திட்டத்தை நிறுத்த நீதிமன்ற உத்தரவால் மட்டுமே முடியும்-…

பினாங்கில்  கர்னி  ட்ரைவிலிருந்து   பட்டர்வர்த்  வரைக்குமான  கடலடிச்  சுரங்கப்  பாதைத்  திட்டம்   திறந்த  நிலை  டெண்டர்  மூலம் வழங்கப்பட்ட   ஒரு  ‘செல்லத்தக்க  குத்தகை’  என்பதால்  திட்டப்படி   அது  மேற்கொள்ளப்படும்  என  பினாங்கு  முதலமைச்சர்   லிம்   குவான்  எங்  கூறினார். “நீதிமன்ற  உத்தரவு  பெற்றாலொழிய   அது   திட்டப்படி  தொடரும்”,  என்றவர் …