தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது. நிர்வாகம் தங்களுக்கு மூன்று முதல் எட்டு மாதங்கள் வரை நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டியிருப்பதாக எஸ்டார் விஷன் எஸ்டிஎன் பிஎச்டி (Esstar Vision Sdn Bhd)…
கோவிட்-19: சிவப்பு மண்டலம் 11 ஆக அதிகரிப்பு
கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை நேற்று 11 ஆக உயர்ந்துள்ளது. ரெம்பாவில் சமீபத்திய பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு சிவப்பு மண்டலப் பகுதி அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் (MOH) தரவுகளின்படி, ரெம்பாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால்…
8 நாள் நாடாளுமன்ற அமர்வு வேண்டும்
மே 18, ஒரு நாள் மட்டுமே திட்டமிடப்பட்ட நாடாளுமன்றக் கூட்டம், எட்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அவசர முன்மொழிவைப் பெற்றுள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யூசோஃப் இன்று ஒரு அறிக்கையில், ஆரிஃப், பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினர் லீவ் வுய் கியோங்கிடமிருந்து ஒரு பரிந்துரையைப்…
சபாநாயகரை மாற்ற பெரும்பான்மை ஆதரவு இல்லையா?
பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஆரிஃப் யூசோப்பை நீக்க தேசிய கூட்டணி (பி.என்.) அரசாங்கம் ஏன் பரிந்துரை செய்யவில்லை என்று அரசியல் ஆர்வலர் அப்துல் மாலெக் ஹுசின் கேள்வி எழுப்பியுள்ளார். “சபாநாயகர் டான் ஸ்ரீ முகமட் அரிஃப் முகமட் யூசோஃப் இன்னும் பதவியில் நீடிக்கிறார்.…
கோவிட்-19: 68 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லாத மூன்றாம் நாள்
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோயினால் புதிய இறப்புகள் ஏதும் இல்லை என்றுள்ளார். இதுவரை மலேசியாவில் கோவிட்-19 நோயால் மொத்தம் 107 பேர் இறந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகள் யாரும் இறக்காத மூன்றாவது நாள் இன்று ஆகும். கடைசியாக இறந்தவர் ‘நோயாளி 2,380’ -…
பேரங்காடிகள் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்க வேண்டாம் – இஸ்மாயில்…
பல்பொருள் அங்காடிகள், பேரங்காடி நிர்வாகங்கள் தங்கள் சொந்த சட்டத்தை உருவாக்கக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறினார். தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் சட்டம் 342-ன் விதிகளுக்கு முரணான கட்டுப்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள்…
பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மான முயற்சிகள் தோல்வியடையலாம்
மே 18 ஆம் நாடாளுமன்ற அமர்வில், பிரதமர் முகிதீன் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் எதிர்க்கட்சியின் முயற்சிகளுக்கு சாத்தியமில்லாமல் போகலாம். நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்தின் போது அரசாங்க விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுதீன் ஹாசன்…
“உங்கள் இலக்கை நோக்கி மட்டும் செல்லுங்கள்” – இஸ்மாயில் சப்ரி
கெராக் மலேசியா விண்ணப்பத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள், அனுமதிக்கப்பட்ட பயணத்தின் போது மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. பரிந்துரைக்கப்பட்ட வழியை மட்டுமே அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். “காவல்துறைக்கு…
முகிதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்
பிரதமர் முகிதீன் யாசின் மீதான லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதிர் முகமதுவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோப் இன்று ஏற்றுக்கொண்டார். சட்டமன்றத்தின் விதிகளின் 27வது பிரிவின் கீழ் இந்த தீர்மானத்தை பெற்றுள்ளதாக ஆரிஃப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது, வரும் மே 18…
பி.கே.பி.: ஏன் இந்த பாராபட்சம்? தனித்து வாழும் தாய் கேள்வி
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.) மீறியதற்காக தனித்து வாழும் தாய் லீசா கிறிஸ்டினாவுக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்று நம்பியதற்காக முழு தண்டனையையும் எதிர்கொள்ள மனதளவில் அவர் தயாராக இருந்தார். இருப்பினும், காஜாங் சிறையில் மற்ற 37 கைதிகளுடன் உரையாடத் தொடங்கியபோது,…
கால அட்டவணையை புறக்கணிப்பவர்கள் திரும்பி அனுப்பப்படுவர் – காவல்துறை
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமது, மாநில எல்லை கடந்த பயணம் செய்யும் போது, பயணத்திட்டத்தைப் பின்பற்றத் தவறியவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள் என்றார். "மாநில எல்லைகளை கடக்க மறுப்பவர்கள் மற்றும் கால அட்டவணையை பின்பற்றாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.” "இணங்கத் தவறியவர்களுக்கு தொற்று நோய் தடுப்பு…
பொருளாதாரத்தின் பிற துறைகளைத் திறப்பதற்கு முன்பு பி.கே.பி.பி.-யை கண்காணிக்க வேண்டும்
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) விளைவுகளை முதலில் கண்காணித்த பிறகே மேலும் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்த விரும்புகிறது சுகாதார அமைச்சு. நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் ஒரு முடிவை எடுப்பார் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நம்புகிறார். "மே 4…
பெர்சத்து மீண்டும் பாக்காத்தானுடன் சேர விரும்பவில்லை – டாக்டர் ராட்ஸி…
பிப்ரவரி 23 அன்று பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர், பெர்சத்து மீண்டும் அக்கூட்டணியில் சேர விரும்பவில்லை என்று அதன் தலைமை தொடர்பு அதிகாரி டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு பெர்சத்து கட்சியின் சார்பாக பாக்காத்தான் மற்றும் வாரிசான் கூட்டு அறிக்கையில்…
டாக்டர் மகாதீர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமாக…
லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமது மீது நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடங்குவதற்கான செம்போர்னாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஃபி அப்டாலின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் ஆரிப் யூசோப். “செம்போர்னாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஃபி அப்தால் சமர்ப்பித்த கோரிக்கை மற்றும் அவரது விளக்கத்தின் விவரங்களை நான் ஆராய்ந்து…
கோவிட்-19: 39 புதிய பாதிப்புகள், பெரும்பாலும் பி.கே.பி.டி பகுதியில் பதிவாகியுள்ளன
39 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று நண்பகல் வரை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,467 ஆக உள்ளது. மொத்தத்தில், 38 பாதிப்புகள் உள்ளூர் பாதிப்புகள் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். "தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி) கீழ்…
டாக்டர் மகாதீர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் ஷாஃபி அப்டால்
டாக்டர் மகாதீர் முகமது மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியுள்ளார் சபா முதல்வர் முகமட் ஷாஃபி அப்டால். ஒருவர் பிரதமர் ஆக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். டாக்டர் மகாதீருக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை நிரூபிக்கும் நடவடிக்கை இது…
பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகிறார் டாக்டர் மகாதீர் –…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் முகிதீன் யாசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. "சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்துள்ளார்" என்று நம்பகமான ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. கருத்துக்காக மலேசியாகினி பாக்காத்தான் செயலகத்தை…
எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் நியமனம்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமை நியமித்துள்ளது. இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய அன்வார், இது குறித்து நாடாளுமனற சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப்பிற்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். "பாக்காத்தான் செயலாளர், சைஃபுதீன் நாசுஷன் இஸ்மாயில், ஏற்கனவே இம்முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளார், மேலும்…
அரண்மனையின் விசாக தின வாழ்த்து
விசாக தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசி, துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா, இன்று நாட்டின் அனைத்து பெளத்தர்களுக்கும் விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு பல்வேறு…
பயணிகள் நெரிசல், கே.டி.எம்.பி. மன்னிப்பு கோரியது
பயணிகளை ஏற்றிச் சென்ற இரயில், கூடல் இடைவெளி தேவைகளை கடைபிடிக்காமல், அதிக பயணிகளுடன் மிகவும் கூட்டமாக இருந்ததற்கு போக்குவரத்து அமைச்சும் கே.டி.எம் பெர்ஹாட்டும் (KTM Berhad) மன்னிப்பு கோரியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ஒரு கே.டி.எம். கம்யூட்டர் இரயிலில், பயணிகள் தோளோடு தோள் நிற்கும் வீடியோ ஒன்று சமூக…
அர்மாடா அம்னோவை நிராகரிக்கிறது, பாக்காத்தானுக்கு திரும்ப விரும்புகிறது
பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு (அர்மாடா), அம்னோவுடன் ஒத்துழைப்பை நிராகரிக்க முடிவு செய்துள்ளது, அதற்கு பதிலாக பாக்காத்தானுடன் மீண்டும் கூட்டு சேர விரும்பம் தெரிவித்துள்ளது. எக்ஸ்கோ உறுப்பினர்கள், மாநில இளைஞர் பிரிவு தலைவர்கள் மற்றும் பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவும் கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்தில் இந்த…
பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பெறப்படவில்லை
பிரதமர் முகிதீன் யாசின் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எந்தவொரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் இதுவரை நாடாளுமன்றம் பெறவில்லை என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) துணை அமைச்சர் எடின் சியாஸ்லி ஷித் தெரிவித்தார். "இதுவரை யாரும் இந்த தீர்மானத்தை சமர்ப்பிக்கவில்லை," என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.…
அம்னோ தேசிய கூட்டணியில் முறையாக இணையாது
அம்னோ கட்சி முறையாக தேசிய கூட்டணியில் (பி.என்) சேர வேண்டும் என்ற திட்டத்தை, அம்னோ உச்ச சபை (Majlis Tertinggi (MT) Umno) நிராகரித்துள்ளது என்று ஒரு ஆதாரம் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது. கட்சியின் நிலைப்பாடு மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், திங்களன்று நடைபெற்ற எம்டி (MT) கூட்டத்தில்…
கோவிட்-19: 45 புதிய பாதிப்புகள், 135 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், ஒரு…
கோவிட்-19 பாதிப்பில் இருந்து மேலும் 135 நோயாளிகள் மீண்டு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது, இன்றுவரை மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 4,702 பேருக்கு கொண்டு வந்துள்ளது. இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 73.15 சதவீதமாகும். இன்று நண்பகல் வரை மொத்தம் 45 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.…























