அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
AMK: பாக்காத்தானில் மீண்டும் ஒன்றிணைவதற்கான பெர்சத்துவின் யோசனை ஏற்புடையது அல்ல
பக்காத்தான் ஹராப்பான், ஜோகூரின் பெர்சத்துவை மீண்டும் ஏற்க தயாராக உள்ளது என்று அமானா துணைத் தலைவர் சலாஹுதீன் அயூப் கூறிய அறிக்கையை பி.கே.ஆர். இளைஞர் குழு (ஏ.எம்.கே.) கண்டித்துள்ளது. பெர்சத்துவை மீண்டும் பாக்காத்தான் ஹராப்பான் உறுப்பினராக இணைக்க வேண்டும் என்ற கருத்தை ஏ.எம்.கே. உறுதியாக நிராகரிக்கிறது என்று ஏ.எம்.கே.…
மஸ்ஜித் இந்தியாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை
300க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் இன்று கோலாலம்பூரில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு (பி.கே.பி.டி) கீழ் உட்பட்டுள்ள மஸ்ஜித் இந்தியாவில் பல பகுதிகளில் சோதனை நடத்தினர். முறையான ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு இச்சோதனை நடந்துள்ளது என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார். குடிவரவுத்துறை, காவல்துறை, மலேசிய…
ஒரு மேசைக்கு 4 பேர் மட்டுமே – உணவகங்களில் ‘புதிய…
மே 4 ஆம் தேதி தொடங்கி, நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் நான்கு பேருக்கு மேல் இல்லாத வகையில் சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் பெயர், மைக்கேட் எண், தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் மற்றும் உடல் வெப்பநிலையை…
69 புதிய பாதிப்புகள், 1 இறப்பு, 39 பேர் குணமடைந்துள்ளனர்
மேலும் 69 நோயாளிகள் கோவிட்-19க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,071 ஆகும். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், 12 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 57 உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றுள்ளார். சமீபத்திய இறப்பு, மொத்த இறப்புகளின்…
ERL மே 4 முதல் சேவையைத் தொடங்குகிறது
நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) விதிமுறைகளின் கீழ் பெரும்பாலான வணிகங்களை மீண்டும் திறக்க முடியும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு (ஈ.ஆர்.எல்)/Express Rail Link Sdn Bhd (ERL), மே 4 முதல் வரையறுக்கப்பட்ட சேவை அட்டவணையை அறிமுகப்படுத்தும். KLIA…
நோம்புப் பெருநாள் விடுமுறை காலத்தில் ‘பாலேக் கம்போங்’ அனுமதிக்கப்படாது
நோம்புப் பெருநாள் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று சிறப்பு செய்தியில் அறிவித்தார். மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி) அமல்படுத்தியதைத் தொடர்ந்து, ஊர்களில் அல்லது வேறு இடங்களில் இருந்து வீடு…
பிரதமர்: திங்கள் முதல் வெளியே மெதுவோட்டம் ஓடலாம், பூப்பந்து விளையாடலாம்
இந்த திங்கட்கிழமை தொடங்கி, மக்கள் மீண்டும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கலாம் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்தார். ஆனால், அந்நடவடிக்கைகள் உடல் தொடர்பு மற்றும் பொதுக்கூட்டங்களில் ஈடுபடாத அளவு இருக்க வேண்டும் என்றார். இந்த அனுமதியில் மெதுவோட்டம் (ஜாகிங்), சைக்கிளோட்டம், கோல்ஃப் மற்றும் 10 பேருக்கு…
கிட்டத்தட்ட அனைத்து பொருளாதார துறைகளும் மே 4 முதல் திறக்கப்படும்
பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் மே 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று சிறப்பு செய்தியில் அறிவித்தார். "உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரவு மற்றும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பின்பற்றி, கடுமையான சுகாதார செயற்பாட்டை அமல்படுத்துவதன் மூலம்…
மனைவி, மாமனாரை கொன்றபின் தானும் தற்கொலை செய்து கொண்ட நபர்
40 வயது நபர் ஒருவர் நேற்று பாங்கியில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவி மற்றும் மாமனாரை குத்தி கொலை செய்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் தம்பதியர் எதிர்நோக்கியப் பணப்பிரச்சினைகள் தொடர்பான குடும்ப தகராறில் இருந்து வந்தது என்றுள்ளனர். இந்த நபர் மோதலில் தனது 40…
நாடாளுமன்றம் 2 வாரங்களுக்கு அமர வேண்டும் என்கிறது பாக்காத்தான்
ஏப்ரல் 29 முதல் பொருளாதாரத்தின் பல துறைகள் முழுமையாக இயங்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தொடர்ந்து, நாடாளுமன்றத்தையும் குறைந்தது இரண்டு வாரங்களாவது அமர அனுமதிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கேட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், பாராளுமன்றம் நீண்ட நாட்கள் அமர அனுமதிக்க, விதிகளில் சில…
40 ஆண்டுகள் பழமையான மலாக்கா ரமாடா தங்கும்விடுதி மூடப்படுகிறது
கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான மலாக்கா ரமாடா ஹோட்டல் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, ஏப்ரல் 28 தேதியிட்ட கடிதத்தில், ரமாடா தங்கும்விடுதியின் இயக்குனர் கையெழுத்திட்டு, தேசிய தங்கும்விடுதி தொழிலாளர்கள், பார்கள் மற்றும் உணவகங்களின் சங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தின்படி, அத்தங்கும்விடுதி அடுத்த…
பாலியல் கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை காவல்துறை பாதுகாக்காது
இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் ஒரு காவல் அதிகாரிக்கு எதிரான வழக்குகள், மலேசிய காவல்துறை ஒருபோதும் அதன் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் குற்றவியல் நடத்தையை பாதுகாக்காது என்பதை நிரூபிக்கிறது. இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்ட பின்னர், அந்த இன்ஸ்ப்¦க்டர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியை…
‘குடிமக்கள் அல்லாதவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்’ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
நாட்டில் குடிமக்கள் அல்லாதவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குழு வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை அனைத்து மலேசியர்களின் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் என்பதை அது வலியுறுத்தியது. "குடிமக்கள் அல்லாதவர்களின் நலம் சரியாக கவனிக்கப்படுவதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும்" என்று அக்குழு…
MCO-வை மீறிய அரசியல் பிரதிநிதிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்து ஆதரிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் உயர் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒரு வழக்கறிஞரான மனோகரன், குற்றங்களுக்கு அபராதம்…
கோவிட்-19: மலேசியாவில் கிருமியின் பிறழ்வுகள் தென்படுகின்றன
நாட்டில் கோவிட்-19 கிருமியின் பிறழ்வுகளை (mutation) சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது என்றும், அவற்றின் மிக வேகமான பரவல் குறித்தும் எச்சரித்துள்ளது. அவர்கள் கண்டறிந்த பிறழ்வுகளில் ஒன்று ‘பாதிப்பு 26’ என்றும், இது இதுவரை 120 பேரை பாதித்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின்…
கத்தாரின் AS$50 மில்லியன் நன்கொடை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக…
மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு கட்டாரில் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை ஒருபோதும் பக்காத்தான் ஹராப்பானுக்கு அளிக்கப்படவில்லை என்று முன்னாள் துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த நிதி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டது. இது தொடர்பாக,…
நடமாட்டக் கட்டுப்பாடில் இன்னும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – இஸ்மாயில்…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காவது கட்டத்தில் மேலும் சில தளர்வுகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார். இருப்பினும் அந்த தளர்வுகள் பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை. முன்னதாக, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடர்பான ஊடக மாநாட்டில் பேசிய…
கோவிட்-19: புதிய இறப்புகள் இல்லை, 94 பாதிப்புகள், 68.75% குணமடைந்துள்ளனர்
மலேசியாவில், 94 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5,945 ஆக உள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட 72 இறக்குமதி பாதிப்புகளும், 22 உள்ளூர் நோய்த்தொற்றுகளும் அடங்கும்…
‘அஸ்மின் ஒரு துரோகி, ஆனால் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு ஏதும்…
கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், தனது முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மீது எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். 1998-இல், அன்வார் மற்றும் அஸ்மின் இணைந்து அக்கட்சியை உருவாக்கினார்கள். இருப்பினும், பின்னர் அவர்களின் உறவு துண்டிக்கப்பட்டு, கட்சி பிளவுபட்டது.…
‘பொய்யான செய்திகளை பரப்ப வில்லை’ – புசியா
கடந்த 9 ஏப்ரல் அன்று, பொதுமக்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் முகநூலில் ஒரு அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டை இன்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார் பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் புசியா சல்லே. குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான 61 வயதான புசியா, தண்டனைச் சட்டத்தின் பிரிவு…
இனி இரண்டு குடும்ப உறுப்பினர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காம் கட்டம் இன்று தொடங்கியுள்ளது. உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைக்கு பொருள்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள், இனி மற்றொரு குடும்ப உறுப்பினரையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விதி, இன்று முதல் அடுத்த மே 12 வரை…
AS$50 மில்லியன் ரோஹிங்கியா நிதியை தனிப்பட்ட கணக்கில் வைக்கவில்லை –…
மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், கத்தார் அபிவிருத்தி நிதியிலிருந்து (Qatar Development Fund) பெற்ற 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் தனிப்பட்ட கணக்கில் வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். "கத்தார் அபிவிருத்தி நிதியிலிருந்து, நிதி பெற்று…
கோவிட்-19: புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று
கோவிட்-19க்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய், பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தனது குழந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு பதிவு செய்தது. இருப்பினும், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கர்ப்ப காலத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதா அல்லது வேறு வழியில்…
























