மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பசீர் புத்தே, கிளாந்தானில் உள்ள மஸ்ஜித் கோங் சாபாவிற்கு (Masjid Gong Chapa) பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட பயணத்தின் போது, அவருடன் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர்…
அரசியல் காரணங்களுக்காக தலைமையாசிரியர் மாற்றப்பட்டார், டிஏபி குற்றச்சாட்டு
மாநில அரசாங்கத்தின் உதவியை வழங்க வந்த முதல்வர் லிம் குவான் எங்-ஐ, பள்ளியில் அனுமதித்ததற்காக, பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவரை, இடமாற்றம் செய்த மாவட்டக் கல்வி இலாகாவை டிஏபி இன்று குற்றம் சாட்டியது. செப்ராங் பிறை மாநகர சபை உறுப்பினர், சதீஸ் முனியாண்டி, தலைமையாசிரியர் அந்நிகழ்ச்சியில் கலந்து…
பெர்சத்துவின் சிறப்புப் பொதுக்கூட்டத்தை ரோஸ் அங்கீகரிக்கவில்லை
நவம்பர் 2 இல் நடைபெற்றது பெர்சத்துவின் சிறப்புப் பொதுக்கூட்டம் என்று அக்கட்சி கூறிக்கொண்ட போதிலும், மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) அதை "உச்சமன்றத்தின் கூட்டம்" என்று வர்ணித்துள்ளார். "நவம்பர் 2, 2016 இல் சிறப்புப் பொதுக்கூட்டத்தை நடத்தியதாக பெர்சத்து கூறுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் அது ஒரு உச்சமன்ற…
சிலாங்கூர் அரசு இலவச ஆணுறை கொடுத்ததா?
சமூக ஊடகங்கள் சிலாங்கூர் அரசு இளைஞர்களுக்கு இலவசமாக கருத்தடை ஆணுறைகளைக் கொடுத்ததாக கூறிக்கொள்கின்றன. சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் "போஸ்டர்கள்" அவதூறாவை என்று சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபிஎய் கூறியதாக அவரை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் ஓன்லைன் செய்தி கூறுகிறது.…
வி.கே. லிங்கத்தைப் பிடிக்க எம்எல்எ, ஜோ லோ வைப் பிடிக்க…
நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்ததற்காக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வி.கே. லிங்கத்தை நாட்டிற்கு கொண்டு வர சட்டத்துறை தலைவர் முகமெட் அபாண்டி அலி கிரிமினல் விவகாரங்கள் பரஸ்பர உதவி சட்டம் 2002(MLA)இன் கீழ் நடவடிக்கை எடுத்தால், அது அவருக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.…
வங்கி அனுமதியின்றி, காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு அபராதம், சிறை…
வங்கியின் ஒப்புதல் இன்றி, மூன்றாம் தரப்பினருக்குக் கார்களைக் குத்தகைக்கு விடும் உரிமையாளர்கள் மீது, அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சர் ஷாஹிட் ஹமிடி கூறினார். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, மூன்றாம் நபருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது, ‘வாடகை கொள்முதல் சட்டம் 1967’-ஐ மீறுவதும்…
அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் இருமுறை செலுத்தப்பட மாட்டாது
அரசாங்க ஊழியர்களுக்கு மாதம் ஒரு முறை சம்பளம் வழங்குவதை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும், எனப் பொதுச் சேவை தலைமை இயக்குநர் ஷைனால் ரஹிம் செமான் தெரிவித்தார். எதிர்காலத்தில் மாதம் இரண்டு முறை ஊதியம் வழங்க, முன்னோடி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று, செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான…
நஜிப் : ஹராப்பான் இளைஞர்களுக்கு 1எம்டிபி – ஐபிஐசி-யில் எந்தத்…
1எம்டிபி - சர்வதேசப் பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனம் (ஐபிஐசி) ஆகியவற்றிற்கு இடையேயான மத்தியஸ்த தீர்வு நடவடிக்கை தொடர்பில், நஜிப், 1எம்டிபி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, பக்காத்தான் ஹராப்பானின் 10 தலைவர்கள் முன்னெடுத்திருக்கும் சட்ட நடவடிக்கையில், அவர்களின் தலையீட்டு உரிமை குறித்து, நஜிப் இன்று கேள்வி எழுப்பினார். மனுதாரர், இலண்டனில்…
அமைச்சர்: டுரியான் ஆண்களுக்கு நல்லது
டுரியானில் பாலுணர்வுக்கு வலுவூட்டும் சத்துகள் இருப்பதால், அவை குறித்து மிக அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விவசாயம் மற்றும் விவசாயத் தொழில் சார்ந்த அமைச்சர் அஹமட் ஷாபிரி சீக் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பழத்தினால் ஆண்களுக்குக் கிடைக்கூடிய பயன்கள் பற்றி தமது நண்பர் ஒருவர் கூறிக்கொண்டதை…
சோசலிசம் 2017 – இடதுசாரி அரசியல் இன்றைக்கு ஏற்புடையது!
எதிர்வரும் நவம்பர் 19, 2017, ஞாயிற்றுக்கிழமை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), சோசலிசம் 2017 நிகழ்ச்சியை, ‘இடதுசாரி அரசியல் இன்றைக்கு ஏற்புடையது!’ என்றக் கருப்பொருளோடு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து 13-வது ஆண்டாக, பி.எஸ்.எம். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு சமகால விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.…
எண்ணெய் விலை உயர்ந்தது, பிரிம் தொகை உயர வாய்ப்புள்ளது
பெட்ரோலியத்தின் விலை உயர்ந்ததன் காரணமாக, அரசாங்கம் ‘1 மலேசியா மக்கள் உதவிநிதி’யை (பிரிம்) அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று, 2-ஆம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார். பீப்பாய்க்கு 1 அமெரிக்க டாலர் அதிகரித்திருப்பதன் வழி, அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட் அதிகம் சம்பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.…
டாக்டர் எம் : அது ரஃபிசியின் யோசனை, சொத்து அறிவிக்க…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது சொத்துக்களை அறிவிக்கத் தயாராக இருப்பதாக துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார். "ஆமாம், நான் என் சொத்துக்களை அறிவிக்க முடியும், ஆனால் நான் வேட்பாளரா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது," என்று இன்று, நாடாளுமன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில்…
மகாதிர்: நானும்கூட குப்பையைக் கிளற முடியும்
இரண்டு-அம்னோ தொடர்புடைய நாளேடுகள் மகாதிருடைய பேத்தியின் ஊதாரித்தனமான வாழ்க்கையை படமிட்டு காட்டியதைத் தொடர்ந்து, தாமும் அவர்கள்மீது சேற்றை வாரி இறைக்க முடியும் என்று அவரது வைரிகளுக்கு மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார் அரசியல் இது எப்போதுமே ஒரு வியூகமாக இருக்கும் என்று கூறிய அவர், இதன் ஒட்டுமொத்த நோக்கம்…
பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கிறது
இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் உயர்ந்து ரிம2.38 க்கு விற்கப்படும். ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு 6 சென் உயர்கிறது. ஒரு லீட்டரின் விலை ரிம2.66. டீசல் விலை 5 சென் உயர்கிறது. ஒரு லீட்டர் விலை ரிம2.20. கடந்த…
தேர்தலில் போட்டியிடவிருக்கும் 30 ஹரப்பான் வேட்பாளர்கள் சொத்துக்களை அறிவிப்பர்
தேர்தலில் போட்டியிடவிருக்கும் வருங்கால ஹரப்பான் வேட்பாளர்களில் 30 பேர், இப்போது பதவியிலிருக்கும் சிலர் உட்பட, தங்களுடைய சொத்துக்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் ரபிஸி ரமலியால் உருவாக்கப்பட்ட இன்வோக் மலேசியா என்ற அமைப்பால் உதவப்பட்ட தனிப்பட்டவர்களில் சிலராவர். அந்த…
வேலைக்கு 2,002 நாள்கள், மட்டம் போட்ட அரசு ஊழியர்களே பணி…
கடந்த 7 வருடங்களாக, கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்க சிக்கல்களில், ஆக முகான்மையானது வேலைக்கு மட்டம் போடுதல் ஆகும். 2010 முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை, அமைச்சகத்தால் கையாளப்பட்ட பல்வேறு பிரிவுகளிலான 3,450 வழக்குகளில், 1,912 வழக்குகள் (55.4%), வேலைக்கு மட்டம் போடுதல், என்று பெர்னாமா வெளியிட்ட செய்தியினைக்…
துணை அமைச்சர் : 1எம்டிபி விசாரணை விவகாரத்தில், தயவுசெய்து பொறுமையாக…
பிரதமர் துறையின் துணை அமைச்சர் ரசாலி இப்ராஹிம், 1எம்டிபி-இன் தொடர்ச்சியான விசாரணையில் பொறுமையுடன் இருக்குமாறு வலியுறுத்தினார். அதோடு, தனது விவாதத்தின் போது சீனச் சொல்லையும் அவர் பயன்படுத்தினார். "சீனர்கள் ‘மன் மன்’ (மெதுவாக, மெதுவாக) என்பார்கள். "எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் விசாரணையை முடிக்கும் வரை நாம் காத்திருப்போம், ‘இன்ஷா…
அரசியல் ஆய்வாளர்கள் : இளைஞர்கள் பி.எஸ்.எம். கட்சியில் சேரவே விரும்புகிறார்கள்
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள், தற்போது மலேசிய சோசலிசக் கட்சியில் (பி.எஸ்.எம்.) இணைவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது குறித்து கருத்துரைக்கையில், “தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை அவ்வாறு இருக்கிறது, இளைஞர்கள் பிரதான அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விலகி, தனித்துவமான, ஒரு மாற்று சிந்தனை கொண்ட அரசியல் கட்சியில் இணைய…
டிஎபி எம்பி சுகாதார அமைச்சுக்கு ரிம20 பில்லியன் கூடுதல் நிதி…
டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு சுகாதார அமைச்சுக்கு ரிம20 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரும் முன்மொழிதலை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொது மருத்துமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், ஓர் அரசாங்க மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு…
குறைபாடுள்ள பஹசா மலேசியா?, அபராதம் ரிம1,000!
பஹசா மலேசியாவை சரியாகப் பயன்படுத்தத் தவறினால், ஓன்லைன் விளம்பரங்களில்கூட, விரைவில் ரிம1,000 வரையிலான அபராதம் கட்ட வேண்டிவரும், இதற்காக தேசியமொழிச் சட்டம் 1963 மற்றும் கல்விச் சட்டம் 1996 ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால். தேவான் பஹசா மற்றும் புஸ்தகாவால் (டிபிபி) அமல்படுத்தப்படும் இந்த…
வி.கே. லிங்கத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை, பெடரல் நீதிமன்றம்…
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பெடரல் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு மூத்த வழக்குரைஞர் வி.கே. லிங்கத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிபதிகளில் ஒருவர் ஒப்புதல் ஏதும் இன்றி தன்னுடையது போலவே, பிறருடைய கருத்துகளை, மொழியை, எண்ணங்களை தன்னுடையது போல் கையாளுதலில் சம்பந்தப்பட்டிருந்தார்…
பட்ஜெட் 2018 இரண்டாவது வாசிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது
பட்ஜெட் 2018 இன் இரண்டாவது வாசிப்பு 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 107 உறுப்பினர்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்; 11 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இரண்டாவது வாசிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அது குழு அளவிலான விவாதத்திற்கு செல்கிறது.. வாக்களிப்பைத் தவிர்த்துவிட்ட 11…
செராஸ் முதல்தரமான நிலம் ‘அம்னோ குரோனிக்கு’ விற்கப்பட்டது என்பதை அரசாங்கம்…
ஒரு 13 ஹெக்டேக்கர் துண்டு நிலம் ஓர் "அம்னோ நெருங்கிய நண்பருக்கு" விற்கப்பட்டது என்று குற்றச்சாட்டை கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் லோக பாலமோகன் ஜகநாதன் மறுத்துள்ளார். அந்தத் துண்டு நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் சந்தை மதிப்பிற்கு குறைவான விலைக்கு விற்றதின் காரணம் என்ன என்று…
பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தொடர்கின்றன
பினாங்கில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடைகள் ரொக்கமாகவும் பொருள்களாகவும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று ரிம1.04 மில்லியனை பல நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட போது கூறினார். சிலாங்கூர் அரசிடமிருந்து ரிம1 மில்லியன் மற்றும் ஜோகூர் காற்பந்து மன்றத்திடமிருந்து…
























