மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
தேர்தல் எல்லை மறுசீரமைப்பு: பி.எஸ்.எம். சிலாங்கூரில் தனது தொகுதிகளை மாற்றியமைக்க…
அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் எல்லை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரில் போட்டியிடும் தனது முடிவை பி.எஸ்.எம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. “உலு லங்காட் நாடாளுமன்ற நாற்காலி குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்யவுள்ளோம், அங்கு போட்டியிடலாமா இல்லை காஜாங் சட்டமன்றத்திற்கு மாறலாமா என்பதை இன்றிரவு முடிவு செய்வோம்,”…
நஜிப்புக்கு இப்போது அவரது சொந்த இராணுவம் இருக்கிறது, மகாதிர் சாடினார்
பிரதமருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இராணுவப் படைகளின் தளபதி ராஜா முகமட் அபாண்டி ராஜா முகமட் நோர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து நஜிப்புக்கு இப்போது அவருக்குச் சொந்தமான இராணுவம் இருக்கிறது என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் சாடினார். இது ஒரு ஏமாற்றமளிக்கும் வளர்ச்சி, ஏனெனில்…
தேர்தல் போஸ்டர்களில் மகாதிரின் படம் இருக்கக்கூடாது, தேர்தல் ஆணையம் தடை…
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் போஸ்டர்களில் மகாதிரின் படங்கள் அக்கூட்டணியின் தலைவர் என்றோ அக்கூட்டணி தேர்வு செய்துள்ள பிரதமர் வேட்பாளர் என்றோ போடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தம்மிடம் இதைத் தெரிவித்ததாக டிஎபி அமைப்புக்குழு தலைவர் அந்தோனி லோக் கூறினார். ஒரு குறிப்பிட்ட…
பக்கத்தான் ஆட்சிக்கு வந்ததும் பொய்ச் செய்தி சட்டம் அகற்றப்படும், மகாதிர்…
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததும் பொய்ச் செய்தி சட்டத்தை அகற்றும். அத்துடன், வாக்குறுதியளித்துள்ளபடி இதர கொடூரச் சட்டங்களும் நீக்கப்படும். நாடாளுமன்ற மேளவையில் இன்னும் நிலுவையிலிருக்கும் பொய்ச் செய்தி தடை மசோதா 2018 மற்றும் கடந்த வாரம் அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் தேர்தல்…
உங்கள் கருத்து: இரும்புப் பெண்மணியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர் நஸ்ரியும்…
நஸ்ரி, அனுவாருக்கு ரபிடா கண்டனம் , பிரச்னைகளில் கவனம் செலுத்த அறிவுறுத்து ஆர்ஆர்: கண்ணாடி வீட்டில் இருப்போர் கல்லெறியக் கூடாது. சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசும் அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசாவும் முன்னாள் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் ரபிடா அசிசைக் குறைத்து மதிப்பிட்டு …
மலாய் டிஏபி தலைவர் ஜோகூர் மந்திரி புசார் வேட்பாளர்?
ஜோகூர் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர் என்று கூறப்படுவதை ஜோகூர் டிஏபி உதவி விளம்பரச் செயலாளர் ஷேக் ஒமார் அலி மறுதலித்தார். “ஜோகூரில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் (மந்திரி புசார் பதவிக்கு) என்னிலும் தகுதிவாய்ந்த, முத்த தலைவர்கள் உள்ளனர்”, என ஷேக் ஒமார் ஓர் அறிக்கையில் கூறினார்.…
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டத்தை ஆதரிப்பதா? பாஸ் கட்சிமீது அமனா…
பாஸ் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுக்கு ஆதரவு கொடுத்ததன்வழி அம்னோவுடன் ஒத்துழைப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படிச் செய்ததன்வழி அந்த இஸ்லாமிய கட்சி அம்னோ தலைவர்களின் தவறான செயல்களைத் “தற்காக்க” உதவுவதோடு மட்டுமின்றி பாஸ் தலைமையில் செயல்படும் அரசு மற்றும் அதன் தலைவர்களின் குறைபாடுகளை …
பொய்ச் செய்தி தடை மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது, 11 பாஸ் எம்பிகள்…
நாடாளுமன்றம் இன்று பொய்ச் செய்தி தடை மசோதா 2018 ஐ ஏற்றுக்கொண்டது. அதற்கு ஆதரவாக 123 வாக்களும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி தரப்பிலும் அதற்கு ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்றத்திலிருந்த 11 பாஸ் உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி…
செரண்டா தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டும்
செரண்டாவில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டுமென இவ்வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்றுவோம் என்ற குழுவின் தலைவர் தலைவர் ஜீவா இக்கோரிக்கையை விடுத்தார். கடந்த 2012 இல் முதலாவது அடிக்கல்…
மகாதிர்: ஹரப்பான் வெற்றிபெற 85 விழுக்காட்டினர் வாக்களிக்க வர வேண்டும்
வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க வந்தால் மட்டுமே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானால் வெற்றிபெற முடியும் என்கிறார் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். “85 விழுக்காட்டுக்குக் குறையாமல் வாக்களிக்க வ்ர வேண்டும்”, என முன்னாள் பிரதமர் இன்று பிற்பகல் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார். அது …
முக்ரிஸ்: டாக்டர் எம். முதியவர்தான், ஆனால் பெர்சத்து இளமை முகமாகத்தான்…
பெர்சத்து துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர், தம் தந்தையும் கட்சித் தலைவருமான டாக்டர் மகாதிர் முகம்மட் வயதானவராக இருக்கலாம் ஆனால், கட்சி வரும் பொதுத் தேர்தலில் அதன் இளைய உறுப்பினர்கள்மீதுதான் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார். ஃப்ரி மலேசியா டூடே-க்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பெர்சத்துக் கட்சியின் …
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுமீது நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கிறது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரண்டாவது நாளாக 2018 பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுமீதான விவாதத்தைத் தொடர்கிறார்கள். அச்சட்ட வரைவை இரண்டாவது வாசிப்புக்குக்காக பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அச்சட்ட வரைவுமீது குழு நிலையில் விவாதம் நடைபெறும்போது சில மாற்றங்கள் செய்யப்படும் …
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுக்கு எதிரான மகஜர்கள் அரசாங்கத்திடம் தாக்கல்
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தடுத்தும் கடைசி முயற்சியாக 11ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துகள் அடங்கிய இரண்டு மகஜர்கள் நேற்றிரவு பிரதமர்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசாங்கமே அச்சட்டவரைவைக் கைவிட்டாலொழிய அது இன்று பின்னேரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவது உறுதி. அவ்விரு மகஜர்களையும் கொண்டு வந்த அமைப்புகள் அலிரானும் யுனைடெட் கிங்டம் மற்றும் …
நஸ்ரி ‘நுனிபுல் மேய்கிறார்’, நான் மக்கள் பணம் ‘திருடப்படுவது’ பற்றி…
சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் ஒரு ‘மைஓபிக்’, ஆழமற்ற சிந்தனையாளர் என்று ரஃபீடா அஜிஸ் சாடினார். ஆங்கிலத்தில் 'மயோபிக்' என்ற வார்த்தைக்குக் 'கிட்டப்பார்வை கொண்டவர்' என்று அர்த்தம். மேலும், கற்பனையற்றவர், படைப்பாற்றல் இல்லாதவர், சவால் குறைந்தவர், தொலைநோக்கு குறைந்தவர், குறுகிய / மேலோட்டமான சிந்தனை…
முஹைடின் ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் இணைந்தார்
2013 பொதுத் தேர்தல் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, அப்போதையத் துணைப் பிரதமரான முஹைடின் யாசின், பொருள், சேவை வரியைக் (ஜி.எஸ்.டி) காட்டி, மக்களைப் பயமுறுத்துவதாக பல எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறை கூறினார். ஏப்ரல் 1, 2015 முதல் ஜி.எஸ்.டி செயல்படுத்தப்பட்டது. 14-வது பொதுத் தேர்தலுக்குத் தயாராகிவரும், பக்காத்தான்…
‘நாடாளுமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படலாம்’
அடுத்த வார இறுதியில், பிரதமர் நஜிப் துன் ரசாக் பிஎன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பிஎன் தொடர்பியல் உக்தி இயக்குநர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் இன்று தெரிவித்தார். “எங்கள் (பிஎன்) அனுபவத்தின் அடிப்படையில், பி.என். தேர்தல் அறிக்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே சமர்ப்பிக்கப்படும்.…
ஜிஎஸ்டிக்கு எதிரான பாடலுக்காக குவான் எங் விசாரிக்கப்பட்டார்
பொருள்கள் மற்றும் சேவைகள் வரிக்கு (ஜிஎஸ்டி) எதிரான பாடலை குழந்தைகளுடன் பாடியதற்காக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று அவரது அலுவலகத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். அவருடன் அவரது வழக்குரைஞர் ஆர்எஸ்என் ராயரும் இருந்தார். விசாரணைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங், போலீசாருக்கு நன்றி கூறினார்.…
இனி எந்தக் கூட்டணிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது-…
அறுபதாண்டுகளுக்கு முன்பு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கூட்டணியும் அதன் வழியே வந்த பிஎன்னும் 11 பொதுத் தேர்தல்களில் மூன்றில்- இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தன. 12வது பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முதல்முறையாக அது மூன்றில்- இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது, …
பிஎஸ்எம் ‘முற்றிலும் ஓரங்கட்டப்படுகிறதே’: சுங்கை சிப்புட் எம்பி வருத்தம்
பிஎஸ்எம் சுங்கை சிப்புட் எம்பி டி.ஜெயக்குமார், தம் கட்சி எதிரணிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப்பதாகக் கூறினார். ஆனால், அக்கூட்டணி தங்கள் கட்சியைப் பொருட்படுத்துவதில்லை என்றார். “2011 தொடங்கி அவர்களோடு ஒத்துழைக்கத் தயார் என்று கூறி வருகிறோம். அவர்கள் அதை மதிக்கவில்லை. அவர்கள் பக்கத்தான் ஹரப்பானை அமைத்தபோதும் தொகுதிப் …
அரச மலாய் ரெஜிமெண்டைக் கலைப்பது நடவாத செயல், பிரதமருக்கு பெட்ரியோட்…
எந்தவொரு அரசியல் கட்சியும் அரச மலாய் ரெஜிமெண்ட்டைக் கலைப்பது “கிட்டத்தட்ட முடியாத காரியம்” என்கிறது பெர்சத்துவான் பெட்ரியோட் கெபாங்சாஆன்(பெட்ரியோட்). நீண்ட வரலாற்றைக் கொண்ட அப்பட்டாளம் தொடர்ந்து இருப்பதற்கு அரசமைப்பு உத்தரவாதமளிக்கிறது. அப்படி இருக்க தரைப்படையின் மிகப் பழைய பிரிவான அரச மலாய் ரெஜிமெண்ட் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து …
ஹராப்பான் வெற்றி பெற்றால், தேர்தல் ஆணையம் ‘சுதந்திரமாக’ செயல்படும், அன்வார்…
14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிவிட்டால், தேர்தல் ஆணையம் ஓர் உண்மையான, சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்படும் என்று அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார். பிகேஆர் பொதுத் தலைவரான அவர், விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள ‘பொய்ச்செய்தி’ சட்டத்தையும் ஹராப்பான் அகற்றிவிடும் என்றும் உறுதியளித்தார். “முற்றிலும் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை…
‘பிஎன்-க்கு நன்றி தெரிவிப்பது கடினமல்ல, தராசில் குறியிடுங்கள்’
நகர்ப்புற நலன், வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் நோ ஓமர் பாரிசான் நேசனல் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பது கடினமான வேலை அல்ல என்று கூறியுள்ளார். இன்று, புத்ரா உலக வாணிப மையத்தில், அவ்வமைச்சின் கீழ் சுமார் 1,200 வீட்டுத் திட்ட உதவி பெறுநர்களிடம் பேசுகையில், அவர்களை நன்றியுடன்…
‘பாலோ’வின் ஹராப்பான் வேட்பாளர் ஷேக் ஓமார், டிஏபி அறிவித்தது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின் பாலோ சட்டமன்ற வேட்பாளராக, தனது விளம்பரப் பிரிவு துணைச் செயலாளர் ஷேக் ஓமார் அலியை டிஏபி அறிவித்தது. டிஏபி-இன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், ஜொகூர் பாலோவில், நேற்று மாலை டிஏபி தேர்தல் இயக்க அறையைத் தொடக்கி வைத்தபோது,…














