இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீட்டை உயர்த்தியது மூடிஸ் நிறுவனம்

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ், கடத்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் இறையாண்மை பத்திரத் தரமதிப்பீட்டை அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டியுள்ள இந்நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் அவை பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளது.…

இந்துக்கள் பெரும்பான்மை குறைந்தால் நாடு அவ்வளவுதான்.. மத்திய அமைச்சர் பரபர!

போபால்: இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரைதான் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்கள்…

விவசாயிகளின் குரலுக்கு வலுசேருங்கள்… நடிகர் கமல் வேண்டுகோள்

சென்னை: விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சில தினங்களாக களத்துக்கே சென்று மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள கமல், கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு…

போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது ஜம்மு…

ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி.வெய்ட் செய்தியார்களிடம் கூறியதாவது: போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது.  இந்த வருடம் போதைபொருள் கடத்தல் சட்டப்பிரிவின் கீழ்  667 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 542 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான்…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு … விசாரணைக்கு உத்தரவிட்டது…

ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை விரித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் படகுகளை நோக்கி இந்தியக் கடலோர காவல்…

மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர்…

சென்னை, பிரதமர் மோடிக்கு  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 13-ம் தேதி கடலோர காவல்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பாதுகாப்புத்துறைக்கு அறிவுரை வழங்க…

தனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய தில் இந்தியர்..…

டெல்லி: இந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டார். மேலும் அவர் ராஜாவாக இருக்க போகும் அந்த நாட்டிற்கு என்று கொடி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த இடம் சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் இருக்கும் நிலம் ஆகும்.…

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலரின் பரிதாப நிலை? வெளிச்சத்திற்கு வந்த…

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நாளைடைவில் உலகமே திரும்பி பார்க்க வைக்கும்…

டிசம்பர் மாத இறுதிக்குள் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படும்…

சென்னை, குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 119 பள்ளிகளில் இருந்து 230 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்பாற்றலை ஓவியங்களாக வரைந்தனர். அதில் சிறந்த…

செம்மரம் வெட்ட ஆந்திராவுக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம்.. தமிழர்களுக்கு ஆந்திர…

திருப்பதி: ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தினால் அதைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என அம்மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தராவ் மிரட்டல் விடுத்துள்ளார். ஆந்திராவில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழர்களை கூலிக்கு அமர்த்தும் கொள்ளை…

தமிழகத்தில் மீனவர்களாக பிறந்ததைவிட வேறு என்ன தவறு செய்தார்கள் இவர்கள்?

ராமேஸ்வரம் : மீனவர்களாகப் பிறந்ததைவிட வேறு என்ன தவறு செய்தார்கள். அண்டை நாடு தான் சுட்டு வாழ்வாதாரத்தை அழிக்கிறது என்றால் இந்திய கடலோரக் காவல் படையும் அதையே செய்வது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் என்று மாதத்தில் குறைந்தபட்சம் 5 செய்திகளையாவது நாம்…

இந்தி பேச வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு…

ராமேஸ்வரம்: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது இந்திய கடற்படை. இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில்…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு- ஒருவர்…

ராமேஸ்வரத்தில் இருந்து சில நாட்டிகல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை கடலில் விரித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் படகுகளை நோக்கி கடற்படையினர் வேகமாக சென்றுள்ளனர். இதையடுத்து அச்சமடைந்த மீனவர்கள் வலைகளைப் போட்டுவிட்டு அவசரமாக கரைக்கு திரும்ப முயற்சித்தனர். அப்படி திரும்ப முயன்ற மீனவர்கள் மீது ரப்பர் குண்டுகளைப்…

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர்…

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். விஜயவாடாவை அடுத்த இப்ராஹிம் பட்டணம் பகுதியில் கிருஷ்ணா நதியில் சுற்றுலாப் பயணிகள் 38 பேர் தனியாருக்குச் சொந்தமான படகில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகு அதிக பாரம் தாங்காமல் ஆற்றில்…

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 55 பேர்…

கராச்சி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சென்று விடுவதால் அந்த நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் நேற்று  வரையிலான 4 நாட்களில் பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள்…

ஜி.எஸ்.டி வரி குறைப்பு: மத்திய அரசு பின் வாங்குகிறதா? தவறைத்…

வரும் நவம்பர் 15 முதல் 200க்கும் அதிகமான பொருட்களின் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும் என்று வெள்ளியன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23-வது கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அவற்றில் 178 பொருட்கள் ஜி.எஸ்.டியின் அதிகபட்ச வரி விகிதமான…

கோவில் திருப்பணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த…

பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலப்பழஞ்சூர் கிராமத்தில் சிதலமடைந்த நிலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழமலைநாதர் கோவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் அன்னிய படையெடுப்பின் போது இந்த கோவில் தகர்க்கப்பட்டது. அப்போது படையெடுப்புக்கு முன் பழஞ்சூர் பகுதி மக்கள் பூமியில் பெரிய…

இந்தியாவை 300 வருடங்களாக ஆண்ட முகலாய பேரரசரின் கடைசி வாரிசு…

கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தை நினைவுக் கூற தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட…

”நச்சுப் புகையால் டெல்லியில் இருக்கும் அனைவருக்கும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம்…

டெல்லியில் நச்சுப்புகைமூட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குகிறார் டெல்லியில் பணிபுரியும் மருத்துவர் சுந்தர் ராஜன். கேள்வி - மாசுபாடு அதிகரிக்கும்போது, முகமூடி அணிந்து கொள்வது நல்லதா? இந்த முகமூடிகள் மிக சிறய…

இந்தியாவுடன் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் சீனா தகவல்

பெய்ஜிங், இருநாட்டு எல்லை விவகாரம் தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறார். இதுவரையில் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையே 19 முறை பேச்சுவார்த்தை நடைபெற்று…

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு உதவுவதை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை – இந்தியா

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை விவகாரத்தில் பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என இந்தியா தெளிவாக கூறிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் முழு உதவியையும் பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட சாதகமான வாய்ப்புகள் உள்ளதாக பாகிஸ்தான் தரப்பு தகவல்கள்…

சிறிய அறிவிப்பு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறியாத…

‘சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்’ என்ற ரேஞ்சுக்கு பல பில்ட்டப்புகளைக் கொடுத்து பிரதமர் மோடியால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி இரவு திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றி, நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000…

இசைக்காக இந்த கவுரவம்.. யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த…

சென்னை: யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் நெட்வொர்க்கில் சென்னை சேர்க்கப்பட்டு இருக்கிறது. உலகின் முக்கியமான நகரங்களுக்கும் மட்டும் அளிக்கப்படும் இந்த மரியாதை இப்போது சென்னைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நகரங்களை சிறப்பு மரியாதை கொடுத்து யுனெஸ்கோ பாராட்டுவது வழக்கம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பழமையான நகரங்களை…