மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
டிரம்ப் – கிம் இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு!
இன்று (27 ) வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் அன் ஆகியோருக்கிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஹனோயிலுள்ள மெற்ரோபோல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 2600 பேர் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.…
டிரம்ப் – கிம் உச்சி மாநாடு: வியட்நாம் வந்தடைந்தார் கிம்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வட கொரியாலிருந்து, சீனா வழியாக ரயிலில் சென்ற அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங்-உன் வியட்நாமை வந்தடைந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் கூடுமான அளவு தொடர்வண்டியிலேயே பயணிக்கிறார். தென் கொரியா, சீனா செல்லும் போதும் தொடர் வண்டியிலேயே சென்றார்.…
வடகொரியா பற்றி டிரம்ப்: அணு ஆயுதத்தை கைவிட்டால் வடகொரியா சக்திமிக்க…
வட கொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் பொருளாதாரத்தில் சக்தி மிக்க உலக நாடுகளில் ஒன்றாக மாறும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இது குறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த டிரம்ப் வேறெந்த நாட்டையும் விட அதிவேகமாக வளரும் வாய்ப்பு வடகொரியாவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வடகொரியா இன்னமும்…
வங்கதேசத்தில் விமானத்தை கடத்த முயன்ற நபர் சுட்டுக்கொலை
வங்கதேசத்தில் இருந்து துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட பயணி, வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிட்டாகாங்கில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பின் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக அந்த பயணி எச்சரித்தப்பின் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டார்.…
ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான்…
புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது. புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் மீது எந்த நடவடிக்கை எடுக்காததுடன், இந்தியா மீதான தாக்குதல்களுக்கு தூண்டுகோலாக இருக்கும்…
வங்கதேசத்தில் நடுவானில் விமானத்தை கடத்த முயற்சி; அவசரமாக தரையிறக்கம்
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. வங்கதேசத்தில் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகள் இருந்த அந்த பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியது. BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த…
வெனிசுவேலா நெருக்கடி: வெளியேறிய 30 லட்சம் பேர்,உச்சத்தில் போராட்டம் –…
கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் உதவிப் பொருட்களை வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தடுத்து நிறுத்தியதால் அந்நாட்டின் எல்லைப்புற நகரங்களில் கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உதவிப் பொருட்களை பெற வந்த மற்றும் கொடுக்க வந்த மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டையையும்,…
வெனிசுவேலா நெருக்கடி: எல்லையில் கலவரம், அணி மாறும் காவல் படையினர்
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலாவுக்குள் உதவிப்பொருட்களை கொண்டு வரும் நோக்கில், வெனிசுவேலா - கொலம்பியா எல்லையில் இருந்த ராணுவ வீரர்கள் சிலர் காவல் சோதனைச் சாவடிகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என கொலம்பியாவின் குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. கொலம்பியாவுக்கு வேலை தேடிச் செல்ல முயன்ற வெனிசுவேலா மக்கள் சிலரை எல்லையைக்…
அணுஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை; டிரம்ப்!
அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் வருகிற 27, 28 தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில்…
ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண்ணுக்கெதிராக டிரம்ப்பின் அதிரடி உத்தரவு!
அமெரிக்காவின் அலபாமா பகுதியில் இருந்து சென்று ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த பெண் மீண்டும் நாடு திரும்ப முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த ஹோடா முத்தானா(24) , சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைய விரும்பினார். இதற்காக துருக்கியில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு செல்வதாக…
புல்வாமா தாக்குதல் கொடூரமானது- அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு…
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்!
நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினருக்கும் ராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட சண்டையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2…
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திருநங்கை; எந்த நாட்டில் தெரியுமா?
தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக, முதல் திருநங்கை வேட்பாளர் களமிறங்கி உள்ளார். தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி,…
நைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் – மத…
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில், 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் உடல்கள் உள்பட, 66 பேரின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளததை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 'குற்றப்பின்னணி உடையவர்களால்' கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல் அதிகாரிகள், கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்களையோ, கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதையோ இதுவரை உறுதிசெய்யவில்லை.…
சுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்…
கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பேரணியை நடத்தினர். சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றதாக கருதப்படும் இந்த பேரணியின்போது, கேட்டலன் கொடியை ஏந்திக்கொண்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 12 பிரிவினைவாத தலைவர்களுக்கு ஆதரவான முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். ஸ்பெனிலிருந்து…
வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு? என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை?
ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழைத்துக் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இராக் எல்லையில் உள்ள சிரியாவின் பக்கத்தில், ஐஎஸ் அமைப்பின்…
வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி- குவைடோவை ஆதரித்து புளோரிடாவில் உரையாற்றுகிறார் டிரம்ப்!
வெனிசுலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்காலிக அதிபராக அறிவித்துள்ள குவைடோவை ஆதரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற உள்ளார். எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற…
ஐ.எஸ் அமைப்பில் சேர 15 வயதில் தப்பிய சிறுமி; பிரிட்டன்…
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர், அந்த அமைப்பில் சேர்ந்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அதேவேளையில் மீண்டும் தான் பிரிட்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இராக்கில்…
ஜனாதிபதி தேர்தல் – டிரம்பை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தேடும்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிக்க ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க 5 பெண்கள் வாய்ப்பு தேடுகிறார்கள். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும்…
அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதலில் 70 பேர் பலி!
சிரியா நாட்டின் டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின்…
நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை
ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் 'பிளாக் பேந்தர்' பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது. இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில், கறுப்பு நிற…
சுற்றுச்சூழல் பாதிப்பு: மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு அழிவு
இந்தப் புவியை நோக்கி வரும் சுற்றுச்சூழல் ஆபத்தின் தீவிரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் பார்க்கத் தவறிவிட்டதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பொது கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனமான ஐபிபிஆர்-இன் அறிக்கை, மனிதர்களின் தாக்கம், சமூதாயத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் அளவுக்கு ஆபத்தில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இதற்குப் பலவிதமான காரணங்களை அடுக்கிறார்கள்…
மனிதர்கள் சொல்லாமல் தானே தாக்குதல் நடத்தவல்ல சீன விமானம்- 3ம்…
மனிதர்கள் கட்டளை பிறப்பிக்காமல் ஆபத்தை தானே உணர்ந்து தாக்குதலை நடத்த வல்ல ஆளில்லா விமானத்தை சேவையில் இணைத்துள்ளது சீன ராணுவம். இது 3ம் உலகப் போரை ஆரம்பிக்க வல்லது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த 4ம் தலை முறை ஆளில்லா விமானம், பல மணி நேரம் வானில்…
























