எதிர்கட்சியினரின் தொடர் போராட்டம் : தாய்லாந்தில் அவசர நிலை அமல்

பாங்காக்: தாய்லாந்தில், எதிர்கட்சியினரின் தொடர் போராட்டத்தால், அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக் ஷின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக், தற்போது, தாய்லாந்து பிரதமராக உள்ளார். இவரது ஆட்சி, தக் ஷின் ஷினவத்ராவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, எதிர்க்கட்சியினர், புகார் தெரிவித்துள்ளனர். சகோதரனின் கைப்பாவையாக உள்ள யிங்லக்,…

மனித வெடிகுண்டாக மாற்றபடும் சிறுமிகள்

ஆப்கானில் லக்‌ஷ்கார்கா நகரில் ஷ்போஸ்மாய் என்ற சிறுமி உள்ளூர் பொலிஸில் தஞ்சம் அடைந்து, தன்னை தாலிபான்கள் மனித வெடிகுண்டாக மாற்ற முயற்சிப்பதாக முறைப்பாடு செய்தார். ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு சோதனை சாவடியில் வெடிகுண்டு ஆடை அணிந்து சென்று அதை தகர்க்குமாறு அவளது தந்தையும் சகோதரனும் வற்புறுத்தியதாக அச்சிறுமி பொலிஸில்…

அதிக தகவல்களாலேயே வயதானவர்களின் மூளை மெதுவாக செயல்படுகிறது

அதிகமான தகவல்களை தெரிந்து வைத்திருப்பதன் காரணமாகவே வயதானவர்களின் மூளை மெதுவாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் உள்ள துபின்ஜென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் ராம்ஸ்கர் என்பவரின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். சேமிக்கப்படும் தகவல்கள் அதிகமாகும்போது, கணிப்பொறியின் செயல்பாடு தாமதமாவது போன்று வயதானவர்களின் மூளையும் மெதுவாகச் செயல்படுவதாக…

தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம்கள்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் 700 பேர் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இராணுவ புரட்சி ஏற்பட்டதில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது.…

ஹிந்துக்களை தாக்குபவர்களுக்கு வங்கதேச பிரதமர் எச்சரிக்கை

வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலையொட்டி நிகழ்ந்த தாக்குதலில் சத்கிரா மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்கள் அதிக அளவில் தாக்கப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின் அப்பகுதியை ஹசீனா திங்கள்கிழமை பார்வையிட்டார்.…

ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க…

ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விளாடிமிர் புடினுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் சோச்சி நகரத்தில் வருகிற பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்தாண்டு டிசம்பர்…

‘மதுவை விட அபாயகரமானது அல்ல கஞ்சா’: அதிபர் ஒபாமா

மதுவை விட அபாயகரமான போதைப் பொருளாக கஞ்சாவை (மரிவானா) தான் கருதவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் தனது பிள்ளைகள் அதனைப் புகைப்பதை ஊக்குவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, கஞ்சாவை சட்டபூர்வமாக்குவது பல சமூகப் பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாகும் என்று சிந்திப்பது தவறு…

சீனாவின் அதிநவீன ஏவுகணை! அதிர்ச்சியில் அமெரிக்கா

பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இப்போது அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பது ரஷ்யாவோ அல்லது வேறு எந்த ஐரோப்பிய நாடுகளோ அல்ல. உலகின் பெரிய அண்ணன் என தமக்கிருக்கும் அந்தஸ்துக்கு ஆபத்து வரும் என்றால் அது சீனா அமெரிக்கா ஏற்கனவே கணித்துவிட்டது. அமெரிக்காவின் இந்த அச்சத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் ஒரு…

மனிதர்களுக்கு வழிகாட்டும் சிம்பன்ஸிகள்

அடர்ந்த காட்டுக்குள் வழிதவறி சென்று விட்டால், சிம்பன்ஸிகள் வழியை கண்டுபிடித்து கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சிம்பன்ஸிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றம் குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, சிம்பன்ஸிகள் வழிதவறிய மனிதர்களுக்கு வழியைக் காட்டிக் கொடுக்குமா என்பது குறித்து ஆய்வு…

சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: 2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம்

சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து…

குழந்தை பெற்ற கன்னிகாஸ்திரீ

இத்தாலியில் கன்னிகாஸ்திரீ ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன. இத்தாலியின் மையப்பகுதி நகரான ரியெட்டியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எல் சால்வடோரைச் சேர்ந்த இந்த 32 வயது கன்னிகாஸ்திரீ,தான் கர்ப்பமாக இருப்பதாக தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறினார். தனக்கு வயிற்று வலி வந்திருப்பதாகக் கருதி அவர் கூறியபிறகு,…

உலகம் முழுதும் தினந்தோறும் 20 கோடி எஸ்எம்எஸ் கண்காணிக்கும் அமெரிக்க…

லண்டன்: உலகம் முழுதும் தினந்தோறும் 20 கோடி செல்போன் குறுந்தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு கண்காணி த்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி ஸ்னோடென் மீண்டும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென். இவர்…

காண்டாமிருக வேட்டை உரிமத்தை வென்றவருக்கு உயிர் அச்சுறுத்தல்

கறுப்பு- காண்டாமிருகம் ஒன்றை வேட்டையாடுவதற்கான அனுமதிப் பத்திரத்தை ஏலத்தில் வாங்கிய அமெரிக்கர் ஒருவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மூன்றரை லட்சம் டாலர்கள் கொடுத்து இந்த வேட்டை அனுமதிப் பத்திரத்தை ஏலவிற்பனையில் அவர் வாங்கியிருந்தார். இந்த ஆப்பிரிக்க கறுப்பு- காண்டாமிருகம் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நமீபியாவில்…

ஆப்கானிஸ்தான் விவகாரம்: இந்தியா, சீனா, ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பெய்ஜிங் நகரில் வியாழக்கிழமை இந்தியா,சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக தலிபான் மற்றும் அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் அமெரிக்கப் படைகள் வாபஸ்…

ஆட்சியைப் பிடிப்போம், இஸ்லாமியச் சட்டம் அமல், தாலிபான்கள் சூளுரை

ஆப்கானிஸ்தானில் தாங்கள் மிக விரைவில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று தாலிபான்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது தங்களது அணுகுமுறை கடுமையாக இருக்கும் என்றும், அதில் எந்தத் தளர்வும் இருக்காது, தண்டனைகளும் அவ்வகையிலேயே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியச் சட்டம் நிரந்தரமானது, அது அமல்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என,…

காதலர் தினம் கொண்டாடுகிறார் போப் ஆண்டவர்

உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14ம் திகதியை காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். வாலன்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார், காதலர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இவரது நினைவாக பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்த தினம்…

பழிக்கு பழி! கொலை செய்துவிட்டு மாமிசத்தை சுவைத்த கொடூரம்

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், வாலிபரை கொன்று சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் நடந்த மதக்கலவரத்தில், 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலைநகர் பெங்குயில் நடந்த கலவரத்தில் நபர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, மனைவியின் தங்கை மற்றும் குழந்தை…

போராட்டத்திற்கு பயந்து தப்பிச் சென்ற 200 பேர் கடலில் மூழ்கி…

தெற்கு சூடானில் போராட்டத்திற்கு பயந்து தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் முன்னாள் துணைப் பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பிற ஆப்ரிக்க…

குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வைத்தியருக்கு மரணதண்டனை

சீனாவில் கடத்தல்காரர்களுக்கு குழந்தைகளைத் விற்பனை செய்த பெண் வைத்தியருக்கு ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கடத்தி, விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த வைத்தியர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு பிறக்கும் குழந்தைகள் கடுமையாக சுகவீனமுற்றுள்ளதாக பெற்றோருடம் தெரிவித்து, குழந்தைகளை அவர் திருடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷீயாங் சூசியா…

நாத்திகர் என்பதால் அகதித் தஞ்சம்

நான் ஒரு நாத்திகனாகிவிட்டேன், நாடு திரும்பினால் கொல்லப்படுவேன் என்று அச்சம் தெரிவித்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டன் அகதித் தஞ்சம் அளித்துள்ளது. ஆப்கனில் நாளாந்த வாழ்க்கையில் மதம் மிக அதிக அளவில் கலந்துள்ளது என்றும், இந்த நபரால் தனது நாத்திக நம்பிக்கைகளை முற்றாக மறைத்து வாழ முடியாது…

அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்

மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய பிரத்யேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்திருக்கிறது. பந்த்தேரா என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு…

அணுசக்தி ஒப்பந்த எதிரொலி: ஈரானுக்கு 420 கோடி டாலர் நிதி:…

ஆறு மாதங்களுக்கு எவ்வித அணு சக்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஈரானுக்கு, 420 கோடி டாலர் நிதி விடுவிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், ""அணு சக்தி விவகாரத்தால், பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த ஈரானுக்கு 420…

விஷம் கொடுத்து மாவீரர் அலெக்ஸாண்டர் கொலை? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மங்கள் தற்போது அம்பலமாகி உள்ளது. கிரேக்க நாட்டில் 356 கி.மூ வில் மாவீர புதல்வராய் தோன்றியவர் அலெக்ஸாண்டர், இவர் மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் அழைக்கப்பட்டார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளை குவித்தவராக இன்றளவும் போற்றப்படுகிறார். தன் 32 வயது வரை…