ஹாண்டுரஸ் சிறையில் பயங்கர தீ விபத்து; 300 பேர் பலி

ஹாண்டுரஸ் நாட்டின் சிறை ஒன்றில் செவ்வாய்கிழமை (14.2.2012) ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் முன்நூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் தலைநகர் தெகுசிகல்பாவுக்கு வடக்கேயுள்ள கோமயாகுவா நகரில் 1850 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்த நாநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விபத்தை பயன்படுத்திக் கொண்டு…

காதலர் தினத்தில் இளம்காதலன் கொலை; பெண் வீட்டார் நடத்திய வக்கிர…

உலகம் முழுவதும் அன்பை பறிமாறும் இவ்வேளையில் இளம் காதலன், தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து அவனது உயிரை பறித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் உ.பி. மாநிலம் மீரட் நகர் அருகே இச்சம்பம் நடந்துள்ளது. கேத்வான் நகரை…

சிரியாவில் அனைத்துலக அமைதிப் படை: அரபு லீக் முடிவு; ரஷ்யா…

சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அந்நாட்டு தலைவர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் இராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா.-அரபு லீக் இணைந்த, அனைத்துலக அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது. சிரியாவில், கடந்த 11…

ஐரோப்பாவின் ஒசாமா பிணையில் விடுதலை!

பிரிட்டிஷ்-ல் சிறை வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதியான ஐரோப்பாவின் ஒசாமா கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான அபு கொத்தடா (வயது 51) ஐரோப்பாவின் ஒசாமா என அழைக்கப்படுகிறார். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக சிறையில் இருந்த அவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்து…

சிரியாவின் அரச எதிர்ப்பாளர்களுக்கு அல்-கைதா ஆதரவு

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைதா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். காணொளி செய்தி ஒன்றில் உரையாற்றியுள்ள அவர், சிரியாவில் உள்ள எதிர்த்தரப்பினர் மேற்கு நாடுகளிலோ அல்லது ஏனைய அரபு நாடுகளிலோ உதவிக்கு தங்கியிருக்கவில்லை என்று கூறியுள்ளார். சுதந்திரமான சிரியாவின்…

சிரியாவுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை; வெளியேறும் தூதர்கள்!

சிரியாவில் நடந்துவரும் வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு தலைவர் பஷர் அல் அஸ்ஸத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ கூறியுள்ளார். அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சு நடத்த தயார் என்றும் சிரியாவுக்கான விரிவுபடுத்தப்பட்ட அரபு லீக் கண்காணிப்புப் பணியில் தான் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் மீது காலணி வீச்சு!

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் மீது இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காலணி மற்றும் கற்களை வீசினர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு எட்டப்படமால் உள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் எல்லைப் பகுதியான காஸா பகுதிக்கு…

எகிப்து கால்பந்து போட்டியில் கலவரம்: 73 பேர் பலி

எகி்ப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலி்ல் சுமார் 73 பேர் பலியாயினர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்து நாட்டில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய இரு அணிகளுக்கும் பலத்த ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் சிட்டி ஆப்…

தாலிபன்களுடன் ஆப்கன் அரசு அமைதிப் பேச்சு

தாலிபன் தரப்பினர் ஆப்கானிய அரசைச் சேர்ந்தவர்களை அடுத்த சில வாரங்களில் சவுதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் முதற்தடவையாக நேரடியாக சந்திக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்கான் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் அது முக்கிய கட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து…

லிபிய ஆயுதக்குழுக்களின் அட்டகாசம் குறித்து ஐநா கவலை

லிபியாவில் செயற்படுகின்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஆயுதக்குழுக்கள் அங்கு அமைதியீனத்தை அதிகரிக்கச் Read More

“ஓட்டுப் போட பணம் கேட்டால் கன்னத்தில் அடி கொடுங்கள்”: ராமதாஸ்

"தேர்தல் செலவுக்கும், ஓட்டுப் போடவும் பணம் கேட்டால் அவர்களது கன்னத்தில் பளார் என அடி கொடுங்கள்,'' என்று ஓசூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ராமதாஸ்; "கடந்த 15 ஆண்டுக்கு முன் தனித்துப் போட்டியிட்டபோது,…

ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை

ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவமானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 34…

அதிரடித் தாக்குதல் நடத்தி பானி வாலிட்டை மீளக்கைப்பற்றிய கடாபி ஆதரவுப்…

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அவரது ஆதரவு படை அழிக்கப்பட்டு கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடாபி ஆதரவு படைகள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் லிபிய இடைக்கால…

நொடிக்கும் நிலையில் புகழ்பெற்ற கொடாக் நிறுவனம்!

அமெரிக்காவின் புகழ் பெற்ற புகைப்பட தயாரிப்பு நிறுவனமான கொடாக் நொடிக்கும் நிலையிலிருந்து சட்டரீதியான Read More

சிரியாவின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும்; ஒபாமா வலியுறுத்தல்

சிரியாவில் தொடரும் வன்முறைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் குடியரசுத் தலைவர் அசாத்தை எதிர்த்து, கடந்தாண்டு மார்ச் முதல், அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அரபு லீகின் பிரதிநிதிகள், சிரியாவில்…

விபத்துக்குள்ளான கப்பல் கடலுக்குள் மூழ்கிறது

இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல், கரைப் பகுதியில் இருந்து நழுவி கடலுக்குள் சென்று கொண்டிருப்பதால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், கப்பல் முழுவதும் மூழ்கிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் செல்ல வேண்டிய பாதையில்…

வெள்ளை மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகைக் குண்டு வீச்சு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நேற்று தீடிரென புகை கிளம்பியதால் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள் புகைக் குண்டு வீசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளை மாளிகை தற்போது பூட்டப்பட்டுள்ளது. மாளிகை வளாகத்தில்…

இந்திய மத்திய அரசை எதிர்த்து அந்நாட்டு இராணுவத் தளபதி வழக்கு

இந்திய மத்திய அரசை எதிர்த்து, அந்நாட்டு இராணுவத் தளபதி வி.கே.சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஒரு இராணுவத் தளபதி மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் இராணுவத் தளபதியாக உள்ள, வி.கே.சிங் பிறந்த தேதியில் சர்ச்சை…

ஜனநாயகம் மலர தேர்தலே சிறந்தது: பான் கி மூன்

தேர்தல் மூலம் தான் ஒருநாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என ஐ.நா. பொதுச்செயலர் கூறினார். எகிப்து, துனீசியா, லிபியா, போன்று நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. தற்போது ஏமன், சிரியாவில் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மேற்கு ஆசியாவின் ஐ.நா.வுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சார்பில், ஜனநாயக முறை…

கல்லெறி வாங்கிய விஜய்; கடலூரில் சம்பவம்!

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி கம்பியம்பேட்டையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த சுமார் 500 பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் நடிகர் விஜயிடம் இலவச…