‘ஷியா- சன்னி மோதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்’: இரான்

ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் இடையிலான மோதல் போக்கு உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 'எல்லாத் தரப்பினரும் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து மதக்குழு வாதத்துக்கு எதிரான சிரியாவின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்'என்றும் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸாரிப் பிபிசியிடம் கூறினார்.…

பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள்! கிளம்பியது சர்ச்சை

அவுஸ்திரேலியாவில் பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பியர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய…

உலக அதிசயமான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் நிறுத்தப்பட்டது

உலக அதிசயங்களுள் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 210 கோடி ரூபாய் செலவில் நிமிர்த்தப்பட்டுள்ளது. இத்தாலியின் பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே, 8 மாடிகள் கொண்ட இந்த கோபுரக் கட்டடத்தைக் கட்டத் துவங்கினர். கி.பி 1173ம் ஆண்டில் கட்டுமானப்பணி தொடங்கியது. இதை சாதாரணக் கட்டடம்…

உளவு நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்

உலக நாடுகளை உளவு பார்க்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீர்மானம் ஒன்று ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டது. ஜேர்மன் மற்றும் பிரேசில் நாடுகள் இந்த தீர்மானத்தை வழங்கின. தீர்மானத்தை அறிமுகப்படுத்தும் போது பேசிய பிரேசில் தூதர் ஆண்டானியோ டி அகுவேர்(Antonio De Aguiar), தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதனின்…

பல பெண்களுடன் உடலுறவு கொண்டமையால் பலம் இழந்த மைக் டைசன்

இந்த பூமியில் யாருக்குமே அடங்காத - மகா மோசமான கெட்ட மனிதன் என்று 'நல்ல பெயர்' எடுத்தவர் முன்னாள் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (47). குத்துச் சண்டை உலகின் ஜாம்பவானாக வலம்வந்த பலரை வீழ்த்தி உலக சாம்பியனாக புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற டைசன்,…

ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு

ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியிலுள்ள மாய்னா என்ற கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா தெரிவித்ததாவது, மாய்னா கிராமத்தில்,…

பாகிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்துவோம்: தலிபான் எச்சரிக்கை

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் இயக்கத் தலைவரான ஹக்கிமுல்லா மசூத் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியத் தீவிரவாதியும், அமைதிப் பேச்சுவார்த்தையை எதிர்த்தவருமான முல்லா பசுலுல்லாவைத் தங்களின் புதிய தலைவராக தலிபான்கள் இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. இன்று அவர் விடுத்த அறிக்கையில் பாகிஸ்தான் மீது தொடர் தாக்குதல்களை நடத்த…

பாகிஸ்தானின் தலிபானின் புதிய தலைவர்

பாகிஸ்தானின் தலிபான்கள் தமது புதிய தலைவராக முல்லா ஃபசுல்லா அவர்களை தெரிவு செய்துள்ளனர். பள்ளிக்கூட மாணவி மலாலா யூசுப்பை சுட்டவர்கள் இவரது போராளிகள்தான். கடந்த வெள்ளியன்று அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் ஹக்கிமுல்லா மெஃசுட் அவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின்…

சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு – வெளிநாட்டுத்…

சௌதி அரேபியாவில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ள சௌதி அரசு கொடுத்திருந்த கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், அங்கு சுமார் 30,000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலிஸ் சோதனைக்கு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், பல உணவு விடுதிகள், சலவைக்கடைகள்,…

அமெரிக்கா விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய தொழில்நுட்பம்

ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்துள்ளது. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்களின் மூலம் அமெரிக்கா அழித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாகி வருவதால், பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. எனினும் பாகிஸ்தானின் பேச்சை…

நட்பு நாடையும் உளவு பார்த்ததா அமெரிக்கா? அதிர்ச்சியில் ஜப்பான்

ஜேர்மன், பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஜப்பானையும் அமெரிக்கா உளவு பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 35 நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்த தகவலை எட்வர்டு ஸ்னோடென் வெளியிட்டார். குறிப்பாக ஜேர்மன், பிரான்ஸ், பிரேசில் நாடுகளை உளவு பார்த்ததால் உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில்…

‘போகோ ஹராம்’ பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜீரியாவில் 40 பேர் பலி

நைஜீரியாவில் கடந்த ஒருவாரத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். "போகோ ஹராம்' என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாமா நகரில் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதுகுறித்து அந்தப் பகுதியின் அரசு அதிகாரி பாபா சேகு…

வங்கதேசத்தில் 167 படையினருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் 2009 இல் இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் பலியாகக் காரணமான கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டதற்காக அந்த நாட்டு பொதுமக்கள் நீதிமன்றம் ஒன்று குறைந்தபட்சம் 167 படையினருக்காவது மரண தண்டனை விதித்துள்ளது. இதுதவிர 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும், 251 பேருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்…

பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்?

அமெரிக்கா மிச்சிகனை சேர்ந்த ஒருவர், “பில்-லேடனின் இருப்பிடம் பற்றிய உளவுத் தகவலை முதலில் கொடுத்தது நான்தான். பின்-லேடனின் தலைக்கு கொடுப்பதாக சொல்லப்பட்ட சன்மான தொகை 25 மில்லியன் டாலரை எனக்கு தர வேண்டும்” என அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவரது இந்த உரிமை கோரலில்…

அமெரிக்க இராணுவ கொடூரங்களுக்கு துணைபோன மருத்துவர்கள்

அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், பயங்கரவாத சந்தேகநபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.…

பாகிஸ்தான் தலிபான்களின் இடைக்கால தலைவனாக அஸ்மத்துல்லா ஷஹீன் தேர்வு

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டான். அவனுடன் அப்துல்லா, தாரிக் மெஹ்சூத் மற்றும் ஹக்கீமுல்லா மெஹ்சூத்தின் மெய்காப்பாளன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். தங்கள் தலைவனை கொன்றதால் கடும் ஆத்திரமடைந்துள்ள தலிபான் இயக்கம், இதற்கு…

பிரிட்டன் முஸ்லிம் தலைவர், அமெரிக்கருக்கு மரண தண்டனை

போர்க்குற்ற வழக்கில் பிரிட்டன் முஸ்லிம் தலைவர் மற்றும் அமெரிக்கருக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. கடந்த 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தில் விடுதலைப் போர் நடைபெற்றது. இப்போரின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது டாக்காவில் உள்ள சர்வதேச குற்றத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது.…

ஹிட்லரின் கௌரவ குடிமகன் அந்தஸ்து பறிப்பு

ஜேர்மனியின் முன்னாள் ஆட்சியாளர் அடோல்ஃப் ஹிட்லருக்கு, 78 ஆண்டுகளுக்கு முன்னர் அளிக்கப்பட்ட கௌரவ குடிமகன் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் உயிரிழந்ததன் பின்னர், அவருக்கான கௌரவ அந்தஸ்தும் காலாவதியாகிவிட்டது என்பதால், இப்போது அதனை மீளப்பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் சிலர் முன்னர் வாதிட்டிருந்தனர். எனினும், கோஸ்லார் நகரசபையில்…

தாலிபன் தலைவர் கொலை: பாகிஸ்தான் கோபத்துடன் கருத்து

பாகிஸ்தானிய தாலிபன் இயக்கத் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அரசு கடுங்கோபத்துடன் கருத்து வெளியிட்டுள்ளது. தாலிபன் இயக்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஹக்கிமுல்லா மெஹ்சூதின் மரணம் அழித்துவிட்டதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறியுள்ளார். வடக்கு…

அமெரிக்காவின் ரகசியத்தை அம்பலப்படுத்திய ஸ்னோடெனுக்கு இணையதளத்தில் வேலை

அமெரிக்கா மற்ற நாடுகளை உளவுப் பார்க்கும் ரகசியத்தை கசிய விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடென். உயிருக்கு பயந்து அவர் மற்ற நாடுகளில் புகலிடம் தேடி அலைந்து இறுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் தற்காலிக அனுமதி பெற்று அந்நாட்டின் உள்ளே நுழைந்தார். தற்போது மூன்று மாதங்கள் கழிந்த…

பாகிஸ்தான் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார்

பாகிஸ்தான் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டுள்ளார். வடக்கு வாசிரிஸ்தான் பகுதியில் உள்ள மெஹ்சூத்தின் வீட்டின் மீதும் காரின் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முன்னதாக, இந்தத் தாக்குதல்களில் ஹக்கிமுல்லா மெஹ்சூதின் சகோதரர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக பிபிசிக்கு தகவல் கிடைத்தது. அதில் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா…

ரசாயன ஆயுத உற்பத்தி சாதனங்களை அழிக்கும் சிரியா

ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் சாதனங்களை சிரியா முற்றிலுமாக அழித்துள்ளதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு, தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த அமைப்பு, ரசாயன ஆயுத உற்பத்தி சாதனங்களை அழிப்பதற்காக சிரியாவுக்கு வெள்ளிக்கிழமை வரை கெடு விதித்திருந்தது. இந்நிலையில், அதற்கு…

நைஜரில் பாலைவனத்தில் தண்ணீரின்றி 87 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜர், உலகில் உள்ள வறுமையான நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பட்டினியால் வாடி வருகின்றனர். வறுமையின் கொடுமை தாங்காத அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் அகடெஸ் நகரிலிருந்து கடந்த மார்சு முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு…