ஒரிசாவில் இத்தாலி சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டனர்

இந்தியாவின் கிழக்கே, ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இத்தாலி நாட்டவர்கள் இருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கந்தாமால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் இருவரே கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக அயல்பிரதேசமொன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கான முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்…

ஒபாமாவை கொல்ல ஒசாமா திட்டம் : பகீர் தகவல் அம்பலம்

அமெரிக்க மண்ணில் மிகப்பெரிய தற்கொலைப் படை தாக்குதல் நடத்த கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்ததாகவும், அதோடு மட்டுமல்லாது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவையும் கொல்ல சதித்தீட்டம் தீட்டியிருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க ஊடகங்களில் சிஎன்என் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பீட்டர்…

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த, நேட்டோ வானூர்தி கீழே விழுந்து நொறுங்கியதில், 15 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் சார்பில், துருக்கி நாட்டு வானூர்தி மனிதாபிமான உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. காபூலில், இந்த வானூர்தி தரையிறங்க முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்…

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் : சிறிய அளவில் உருவான சுனாமி

ஜப்பானில் நேற்று, 6.8 ரிக்டர் புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடலில் மிகச் சிறியளவில் சுனாமியும் உருவானது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கடந்தாண்டு மார்ச் 11-ம் தேதி ஜப்பானில், 9 ரிக்டர் புள்ளி அளவிலான பயங்கர நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியும் பேரழிவை ஏற்படுத்தின.…

அமெரிக்க சிப்பாய் சுட்டதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் வகைதொகையின்றி துப்பாக்கித் தாக்குதல் நடத்திய ஒரு அமெரிக்க சிப்பாய் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்றிருக்கிறார். அவர்களில் 9 பேர் குழந்தைகளாவர். ஞாயிறன்று காலையில் இந்தத் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தச் சிப்பாய் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைகளுக்கு முன்னதாக அவர்…

தமிழ்நாட்டில் கருத்தரங்கத்திலிருந்து விரட்டப்பட்ட சிங்களப் பேராசிரியை!

சிறீலங்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏதும் நடக்கவில்லை, அவ்வாறு குற்றம்சாட்டுவது சரியல்ல என்று தமிழ்நாட்டில் உரையாற்றிய கொழும்புப் பல்கலைக்கழக சிங்களப் பேராசிரியை ஒருவர் கருத்தரங்கு மண்டபத்தில் இருந்து விரப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில்…

சிரியாவில் இராணுவத் தலையீடு கூடாது என்கிறார் கோபி அனான்

சிரியாவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீடும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சிரியாவுக்கான ஐ.நா மற்றும் அரபு லீக்கின் சிறப்புத் தூதுவரான கோபி அனான் அவர்கள் எச்சரித்திருக்கிறார். இராணுவத்தை அங்கு பயன்படுத்துவது குறித்து எவரும் தீவிரமாக யோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டமாஸ்கசுக்கான தனது பயணத்திற்கான திட்டம் குறித்து…

கொள்ளையரை பிடிக்கச் சென்ற போலீஸ் மீது கொலை வழக்கு!

தமிழ்நாட்டின் திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் துப்பு துலக்கப் போய் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்" என மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு திரும்பினர். கடந்த பிப்ரவரி, 20-ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ்…

இந்தியாவில் 4 மாநிலங்களில் மண்ணைக் கவ்வியது காங்கிரஸ்

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் மண்ணைக் கவ்வியுள்ளது காங்கிரஸ். அரசியல் செல்வாக்கை இழந்து விட்டதாகக் கூறப்பட்ட முலாயம் சிங் யாதவ், உ.பி., மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். பெரும் ஊழல், ஆடம்பரங்களால் மக்கள் செல்வாக்கை இழந்த மாயாவதி, ஆட்சியைப்…

மொட்டையடித்து தெருவில் ஊர்வலம்; பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கிறிஸ்துவப் பெண் ஒருவர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்துள்ளது. லாகூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள சியால்கோட் மாவட்டத்தில், கோட் மீரட் கிராமத்தை சேர்ந்த 30 பேர், சீமா பீபி என்ற பெண்ணை, கடந்த…

16 சிசுக்களின் உடல்கள் நதிக்கரையில் புதைப்பு!

சீனாவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்று 16 சிசுக்களின் உடல்களை நதிக்கரையில் மருத்துவ கழிவு போல புதைத்தது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாண்டாங் மாகாணம் டேஷூ நகரில் ஆற்றை ஒட்டி குப்பை கூளமாக கிடந்த இடத்தில் அப்பகுதியினர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில்…

“ஈரானை யார் தாக்கினாலும் நாங்கள் எதிர்ப்போம்”: ரஷ்யா

ஈரான் மற்றும் சிரியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா இருநாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது தேவையற்ற செயல். ஈரான் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் நாங்கள்…

சிரியாவுக்கு மேலும் பல கடுமையான தடைகள்

சிரியா மீது நேற்று ஐரோப்பிய யூனியன் அமைப்பு மேலும் பல கடுமையான தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் மாகாணம் மற்றும் ஹோம்ஸ் நகர் மீது இராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. சிரியா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.…

கிறிஸ்தவராக மாறிய இஸ்லாமியருக்கு தூக்குத் தண்டனை!

ஈரானில் இஸ்லாம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தினை தழுவிக்கொண்டதுடன் போதகராகவும் மாறிய நபரொருவருக்கு அந்நாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூசெப் நதார்கனி (34) என்ற குறித்த நபர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார். இஸ்லாம் மதத்தினை அவமதித்தார் மற்றும் கிறிஸ்தவ மதத்தினை கைவிட மறுத்தார் போன்ற காரணங்களுக்காகவே அவருக்கு…

ஒசாமாவை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்கப் பதக்கம்?

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா பின் லாடன் ஒளிந்திருந்ததைக் காட்டிக் கொடுத்ததாக கூறப்படும் மருத்துவர் ஷகீல் அப்ரிடிக்கு, அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் அளித்து கௌரவிக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் டனா ரோரபேச்சர், அண்மையில் பலுசிஸ்தானுக்கு சுயாட்சி உரிமை…

பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் மேரி கோல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக்…

குரான் எரிப்பு: ஆப்கானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் துருப்பினர் ஒரு இராணுவ முகாமில் தவறுதலாக இஸ்லாமிய புனித நூல்களை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட…

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்…!

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி (வயது 85) சென்னையில் காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர் எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராசன், மகாநதி, விருமாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு…

வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே திருமணம்: சவுதியில் புது சட்டம்

சவுதி அரேபியாவில் “குடும்பம் நடத்துவது எப்படி” என்ற வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனிமேல் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற புதிய சட்டம் ஒன்று சவுதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது. இச்சட்டத்தை அனுமதிப்பதா, இல்லையா என சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சவுதி அரேபியாவில்…