மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும் –…
கொரோனா வைரஸ் பரவலை சூரிய ஒளியும், வெப்பமும், ஈரப்பதமும் குறைக்கும் என்று அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன்: உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.…
அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர்…
கொரோனா பாதிப்புக்கு இடையே மேலும் ஒரு சோக நிகழ்வாக அமெரிக்க மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டது. இதில் 7 பேர் பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒனலாஸ்கா நகரம் புயலில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை காட்டும் படம். வாஷிங்டன்: கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்,…
மொசாம்பிக்கில் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுத்த 52 பேர் கொன்று…
மொசாம்பிக் மொசாம்பிக்கில் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுப்பு தெரிவித்த 52 பேரின் தலையை பயங்கரவாதிகள் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாபுடோ: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.ஸ். பயங்கரவாதிகளின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை…
50 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 292 பேர் பலியாகினர். இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது. நியூயார்க்: உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும்…
வைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்: உலக சுகாதார அமைப்பு…
ஜெனீவா:'கொரோனா வைரஸ் பாதிப்பு, குறைந்துள்ளதாக கருத வேண்டாம். தற்போது, முதல் கட்டத்தில் தான் இருக்கிறோம். இந்த வைரஸ் பாதிப்பு, நீண்ட காலம் இருக்கும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.' கொரோனா வைரஸ் விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு முறையாக செயல்படவில்லை; சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது' என, அமெரிக்க…
உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு – யுனெஸ்கோ…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்களை மூடியதால் உலக அளவில் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது. பாரீஸ்: ஐ.நா. கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கல்விக்கான உதவி தலைமை இயக்குனர் ஸ்டெபானியா கியானினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்…
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சாதனை – ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக…
நூர் என்ற செயற்கைகோள் ஈரான், 4 முறை தோல்விக்கு பிறகு ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் இதனை சாதித்துள்ளது. டெஹ்ரான்: ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நாள்முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனிடையே…
கொரோனா வைரசால் உலகமே பாதிப்பு – சீனாவுக்கு எதிராக அமெரிக்கா…
கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உண்மையை மறைத்ததாகவும், உலகளவில் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துவிட்டதாகவும் சீனா மீது அமெரிக்கா வழக்கு போட்டுள்ளது. வாஷிங்டன்:சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ்…
கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் வேண்டாம்
நியூயார்க் : 'கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் காட்ட வேண்டாம்; இது, கொரோனா வைரஸ், மீண்டும் முழு வீச்சில் பரவுவதற்கு வழி வகுத்து விடும்' என, சர்வதேச நாடுகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின், மேற்கு பசிபிக்…
ஸ்பெயின் நாட்டில் 27-ந்தேதி முதல் ஊரடங்கில் இருந்து சிறுவர்-சிறுமிகளுக்கு விதிவிலக்கு
ஸ்பெயின் நாட்டில் வருகிற 27-ந்தேதி முதல் சிறுவர்-சிறுமிகளுக்கு ஊரடங்கில் இருந்து தினமும் அரை மணிநேரம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பெற்றோருடன் அவர்கள் வெளியே சென்று வரலாம். மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த மாதம் 14-ந்தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…
கொரோனா தடுப்பூசி தயார் நாளை முதல் மனிதர்கள் மீதான சோதனை…
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மனிதர்கள் மீதான சோதனை நாளை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது. லண்டன்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் மனித சோதனை வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. கடந்த…
கொரோனா – உலகளவில் தற்போதைய நிலவரம்
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்படி உலகளவில் கொரோனா தொற்றால் 25 லட்சத்து 64 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அமெரிக்காவில் மட்டும் 8 லட்சத்து 25 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 445…
நைஜீரியாவில் கிராமங்கள் மீது கொள்ளை கும்பல் தாக்குதல்; 47 பேர்…
நைஜீரியா நாட்டில் கிராமங்கள் மீது கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். கனோ, நைஜீரியா நாட்டின் வடக்கே கட்சினா என்ற பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த பகுதிகளில் மக்கள் பலர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தத்சென்மா, தன்மூசா மற்றும் சபானா…
கனடா துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பலரை…
உயிர்த்தியாகம் செய்த பெண் போலீஸ் அதிகாரி ஹெய்தி ஸ்டீவன்சன் கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது. இந்த சம்பவத்தில் பலரை காப்பாற்றிய பெண் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். ஒட்டாவா: கனடா நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம…
ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் நிலவரம் என்ன?
ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் நிலவரம் என்ன? ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, அந்நாட்டின் சிட்னி நகரில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அந்நகரில் உள்ள மூன்று கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த கடற்கரைகளில் நீர்ச்சறுக்கு விளையாடுபவர்களையும், உடற்பயிற்சி செய்பவர்களையும் பார்க்க முடிகிறது. அந்நாட்டின் மூன்று பெரிய…
அமெரிக்கா: பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியுள்ளது
உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,65,000ஐ தாண்டியுள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியுள்ளது. இது உலக அளவில்…
சீனா வேண்டுமென்றே கொரோனாவை பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க…
சீனா வேண்டுமென்றே கொரோனாவை பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டன், உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக…
கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு
அண்டோனியோ குட்டரஸ் கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். நியூயார்க்: கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மலேரியா காய்ச்சலை…
சிங்கப்பூர்: பிழைக்க போன இடத்தில் கொரோனாவுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்
சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டுகளை பெற்று வந்த சிங்கப்பூர், கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. கடந்த சில நாட்களாக அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களிடையே அதிக அளவில்…
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் சர்வதேச விசாரணை?- டிரம்புக்கு…
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் சர்வதேச அளவில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு, அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்.பி.க்கள் குழு…
கொடிய கிருமியை வென்றது எப்படி?: விளக்குகிறார் தைவான் அதிபர் சாய்…
தைபே: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான தைவானில், தன் கோர முகத்தை காட்டவில்லை. பல்லாயிரம் கி.மீ., துாரத்தில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், கொத்துக் கொத்தாக உயிர் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தைவானில்இதுவரை, 400…
கோவிட்-19: உலக அளவில் தற்போதைய நிலவரம் என்ன?
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, உலகம் முழுவதும் 185 நாடுகளில் கொரோனா வைரஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,43,512ஆக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1,54,215 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டிலுமே அமெரிக்கா தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்டதாக…
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் – தென்கொரியாவில் ஆளும்…
தென்கொரியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அந்த நாட்டின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றது. சியோல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ள நிலையில், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியா நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலை…























