தொகுதி ஒதுக்கீடு:சர்ச்சையை நிறுத்த டிஏபி அறைகூவல்

பிகேஆரைப் போலவே டிஏபியும், பக்காத்தான் ரக்யாட்டின் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பில் கருத்துவேறுபாடுகளைப் பொதுவில் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டிருகிறது. ஜூலை 19-இல், பக்காத்தான் தலைவர்கள் செய்த முடிவை கட்சியில் அனைவரும் மதிக்க வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் டான் கொக் வாய்…

ஜோகூரில் பக்காத்தான் தொகுதி ஒதுக்கீட்டில் தேக்கநிலை

ஜோகூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு மீது பிகேஆருக்கும் டிஏபிக்குமிடையில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுகள் தேக்கநிலையை அடைந்திருப்பதுபோல் தெரிகிறது. பிகேஆர், தான் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறி சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுக்கிறது என்று டிஏபி கூறியது. “பிகேஆர் அதிகப்படியான தொகுதிகளைக் கோருவதால் பிரச்னை எழுந்துள்ளது”, என…

ராமசாமி கருத்தரங்கைப் புறக்கணித்தார்; நஜிப்புடன் வாதிட விரும்புகிறார்

இந்தியர் விவகாரங்கள் மீதான ஒரு கருத்தரங்கை நடத்தும் திட்டத்தை பினாங்கு துணை முதல்வர் II பி.ராமசாமி கண்டனம் செய்துள்ளார். அது, சமூகத் தலைவர்களைத் தங்களுக்குள் மோதவைத்து வேடிக்கை பார்க்கும் ஒரு முயற்சி என்றவர் வருணித்தார். மலேசிய இந்திய வணிகர் சங்கம்(மீபா) ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் அக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.…

நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: டிஏபி குமுறல்

பிஎன், அது வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதாக சீன நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்திக்குப் பிரதமர் பதிலுரைக்க வேண்டும் என்று டிஏபி எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறப்பு ஒதுக்கீடு என்ற வகையில் இவ்வாண்டு ரிம 513,957,100 ஒதுக்கப்பட்டுள்ளதாக புக்கிட் பெண்டேரா எம்பி லியு…

எங்கே போகிறது மலேசியா?, லிம் கிட் சியாங்

ஆகஸ்ட் 31-இல் மெர்டேகா தினம் இவ்வளவு அமைதியாக, அண்மைய ஆண்டுகளில், கொண்டாடப்பட்டதில்லை. இதற்குக் காரணம் கடந்த சில மாதங்களில் மட்டுமல்லாமல் கடந்த சில நாள்களிலும்கூட ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் நிகழ்வுகள் இடைவிடாமல் நடந்து கொண்டிருப்பதுதான். மலேசியர்கள் நேற்று மலேசிய கொடிகளை ஏற்றி வைத்திருந்தார்கள். ஆனாலும் எல்லாருடைய மனத்திலும் ஒரு கேள்வி…

பினாங்கு வாக்காளர் பட்டியலில் மேலும் “தவறுகள்”

பினாங்கு டிஎபி ஒரே மாதிரியான அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட பல வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளது. அவர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என அது அஞ்சுகிறது. 90 வயதுக்கும் மேற்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருந்தும் அவர்களுடைய பெயர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதையும் அந்தக் கட்சி கண்டு பிடித்துள்ளது. பத்து…

பிகேஆர்: டிஎபி “அம்னோவைப் போன்று தலைக்கனம்” கொண்டிருக்கக் கூடாது

டிஎபி சார்பில் மலாய் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு உதவியாக தனது தோழமைக் கட்சியான பிகேஆர்-டமிருந்து அதிகமான இடங்களை டிஎபி கோரியுள்ளது. அதனை பினாங்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி ஹஷிம் கண்டித்துள்ளார். 13வது பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படாலும் என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ள வேளையில் டிஎபி மலாய் தலைவர்…

பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும், மலாய் டிஏபி தலைவர்

பினாங்கு டிஏபி தலைவர் ஒருவர் டிஏபியில் உள்ள மலாய் வேட்பாளர்களுக்காக பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். பினாங்கில் குறைந்தது ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையுமாவது பிகேஆர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று  டிஏபி மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி முகம்மட் நூர் வேண்டிக்கொண்டார்.…

இந்தியர்களின் பங்குகளை கூட்டரசு அரசாங்கம் வாங்கலாமே, சார்ல்ஸ்

மலேசியாவில் உள்ள பல இந்தியர்கள் பண தட்டுப்பட்டாலும் வறுமையாலும் வாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி கூறியிருப்பதிலிருந்து தெளிவாகக் தெரிகின்றது. இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அமானா சஹாம் 1  மலேசியா பங்குகளில், 69 கோடியே 59 லட்சம் பங்குகள் இன்னும் விற்கப் படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.…

கெராக்கானும் மசீசவும் முதல்வர் பதவியைத் தாரைவார்த்துக் கொடுக்கும்

அம்னோ, பினாங்கு முதலமைச்சர் பதவிக்குக் கோரிக்கை விடுத்தால் கெராக்கானும் மசீசவும் அதை வெள்ளித்தட்டில் வைத்துத் தூக்கிக் கொடுத்துவிடும் என்று டிஏபி குத்தலாகக் கூறியுள்ளது. அம்னோவின் நோக்கம் தெளிவானது என்று கூறிய டிஏபி இளைஞர் உதவித் தலைவர் இங் வை ஏய்க், என்னதான் கூறி மறுத்தாலும் முதல்வர் பதவிமீது அம்னோவுக்கு…

ச்சாஆவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கருணை நிதி வழங்கவேண்டும்

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். இவ்வாண்டு தொடக்கத்தில், ஜொகூர் மாநிலத்தில் தெனாங் இடைத்தேர்தலின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெக்கோ பகுதிவாழ் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜனநாயக செயல்கட்சி பிரமுகர்கள் சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று அவர்களைக் கண்டனர். அப்போது மக்களில் பலர், வெள்ளம் வடிந்ததும் தங்களுக்குக் கிடைக்க…