10% இடஒதுக்கீட்டுக்கு 8 லட்சம் வருமான வரம்பு: எங்கிருந்து வந்தது?…

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்று தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா வாக்கெடுப்புக்கு வரும் போது, அதன் அடிப்படை என்ன? அதற்கான ஆய்வுகள் என்ன? - என்றெல்லாம் பார்க்காமல்,…

சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு: நிலமும், சுத்த வீரனின் ரத்தமும்

ஜல்லிக்கட்டு சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்டது. சிந்துவெளியில் காளை முத்திரை பொறிக்கப்பட்ட சின்னங்கள் கிடைக்கிறதென்றால், அதற்கு முன்பே காளையை மையப்படுத்திய விளையாட்டு இருந்துள்ளது என்றுதான் பொருள் என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன். எழுத்தாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான சு.வெங்கடேசன் ஜல்லிக்கட்டின் பண்பாட்டு வரலாறு குறித்து பிபிசியுடன்…

வறண்ட ஏரிகள் – கழிவு நீரிலிருந்து குடிநீர் – புதுமையான…

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது குடிநீர் வாரியம். இந்த நிலையில், கழிவுநீரை மிகத் தூய்மையாகச் சுத்திகரித்து விநியோகிப்பது ஒரு தீர்வாக அமையக்கூடும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு…

புதுக்கோட்டையில் அடங்க மறுத்த காளைகளை அடக்கிய காளையர்கள்

தமிழ்நாட்டில் அரசின் அனுமதி பெற்று நடைபெறுகின்ற 2019ம் ஆண்டின் முதல் ஜல்லிகட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்து வந்த 453 காளைகளை 100ற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட…

”நமது நாடு தமிழ்நாடா?, இந்தியாவா?”: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ்…

சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, "இந்த அவையிலே இன்றைய தினம்…

உலகத்தமிழ் மின்நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி

தமிழை கற்கவும், கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தேவையான ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் புத்தகங்கள் முதல் தற்கால புத்தகங்கள் வரை சேகரித்து வைத்துள்ள 85 வயது முதியவர் தமிழப்பன் "உலகத்தமிழ் மின் நூலகம்" என்ற பெயரில் ஒரு மின் நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டை…

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை : சிக்கிமில் துவக்கம்

காங்டாக் : சிக்கிமில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார். காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.. கடந்த ஆண்டின் சட்டசபை குளிர்காலக் கூட்டத்…

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது

எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த தமிழக மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (12) இரவு முதல் இன்று (13) காலை வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த…

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று: வீட்டிலேயே தொழில் செய்து அசத்தும் பெண்கள்

ஜனவரி 2019 தொடக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடைசெய்துள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் துணி,காகிதம் மற்றும் சணல் பைகளை தீவிரமாக தயாரித்துவருகின்றனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தடைசெய்யும் இந்த முயற்சியால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு…

திருச்சபைகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் – உள்ளிருந்தே எழும் எதிர்ப்பு…

கன்னியாஸ்திரி மற்றும் ஒரு தேவாலய மதகுருவுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை மற்றும் விளக்க கடிதம் பல கேள்விகளை எழுப்புகிறது. தன்னை 2014 - 2016 இடையிலான காலக்கட்டத்தில் 13 முறை பாலியல்ரீதியாக தாக்கினார் என கன்னியாஸ்திரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஜலந்தரை சேர்ந்த பிஷப் ஃப்ரான்கோ முலக்கல் கைது…

மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பம்..…

டெல்லி: மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக மத்திய அரசு அதற்கு அனுமதிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவை, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையை நியமித்துள்ளது. வக்கீல்கள், சரவணன், ஆனந்த், சந்திரசேகர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஆலோசனைக்குழு அமைப்பு : மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவும்…

ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு?… ரூ.100 கோடியில் அதிரடி வளர்ச்சி…

தூத்துக்குடி:100 கோடி ரூபாய் மதிப்பிலான 6 மேம்பாட்டு திட்டங்களை தூத்துக்குடி வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்தது. அதற்கான விழா, ஸ்டெர்லைட் ஆலை எதிர்புறம் உள்ள ஸ்டெர்லைட் பணியாளர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்புஏற்படுவதாக கூறி, தமிழக அரசு அந்த ஆலையை மூடியது. அதை…

ராம் ரஹீம் சாமியார் பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளி என…

பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித்ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவருக்கான தண்டனை வரும்…

வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்

திருவனந்தபுரம் : ஜனவரி 2 ம் தேதியன்று கள்ளத்தனமாக சபரிமலை சென்ற 2 பெண்களும் தற்போது தொடர் எதிர்ப்பு காரணமாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து (40), கனகதுர்கா (39) என்ற 2 பெண்கள் ஜன.,2 அன்று கள்ளத்தனமாக சபரிமலைக்கு சென்றனர்.…

யானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்.. பலியாவதற்கு முன் 2…

சேலம்: நள்ளிரவு... நடுக்காடு.. உயிர் போகும் நேரத்திலும் குழந்தைகளை தூக்கி புதரில் வீசி யானையிடமிருந்து காப்பாற்றிய ஐயப்ப பக்தரின் செயல் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலைக்கு இது மாலை போடும் சீசன் என்பதால் பலரும் விரதமிருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அதுபோல கடந்த 7ம்…

பயங்கரவாதிகளால் மக்களுக்கு பாதிப்பு: ராணுவ தளபதி

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது: காஷ்மீர் சூழ்நிலையை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அங்கு ராணுவம் மென்மையான மற்றும் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். பயங்கரவாதிகளால், மக்கள்…

தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் – நீதிபதிகள் எச்சரிக்கை

தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கடந்த ஒரு வருடமாக சிறப்பு அமர்வில் விசாரித்து வருகின்றார்கள். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட…

ஷா ஃபைசல்: தொடரும் காஷ்மீர் கொலைகளை காரணம் காட்டி காஷ்மீர்…

காஷ்மீரில் கேட்பாரின்றி தொடரும் கொலைகளையும், மத்திய அரசின் பாராமுகத்தையும் கண்டித்து பதவி விலகுவதாகக் கூறியுள்ளார், 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஷா ஃபைசல் என்னும் அதிகாரி. இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், 200 மில்லியன் இந்திய…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே மாதம் 22-ந்…

சபரிமலைக்கு பெண்களை வரவழைக்க பினராயி திட்டம்?

சபரிமலை: மகர விளக்குக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், மேலும் சில பெண்களை சபரிமலையில் தரிசனம் செய்ய வைக்க, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன் திட்டமிட்டுள்ளதாக, தகவல் பரவியுள்ளது. இதை தடுக்க, கூடுதல் பக்தர்கள் வந்து, பம்பை முதல் சன்னிதானம் வரை தங்கியுள்ளனர்.…

காணாமல் போன ஹரிணி பாப்பா கிடைத்துவிட்டாள்!

காஞ்சிபுரம்: ஹரிணி பாப்பாவை கடத்தியதாக பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நண்பருக்கு குழந்தை இல்லை என்பதால் ஹரிணியை கடத்தி சென்று விலைக்கு விற்றுவிட்டதாகவும் பிரகாஷ் போலீசில் தெரிவித்துள்ளார். உத்திரமேரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - காளியம்மா. இவர்களின் 2 வயது மகள் ஹரிணி…

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அமர்வு

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அமர்வை நியமித்து உச்சநீதிமன்றம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அமர்வு இந்த வழக்கை ஜனவரி 10-ம்…