முல்லை பெரியாறு பிரச்சனையில் அரசியல் செய்கிறது கேரளம்- தம்பிதுரை குற்றச்சாட்டு

கரூர்: கேரளாவில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி காரணமாக முல்லைப் பெரியார் அணையை ஒரு பிரச்சனையாக எடுத்து பேசி வருகின்றனர் என்று மக்களவை சபாநாயகர் மு. தம்பிதுரை தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு மேற்கொண்ட மக்களவை…

கேரளாவின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு

திருச்சி, முல்லைப்பெரியாறு அணையை திறந்ததால்தான் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அந்த மாநில அரசு கூறிய குற்றச்சாட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்து உள்ளார். திருச்சியை அடுத்த முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேலணை வெள்ளப்பெருக்கில் உடைந்தது. அங்கு சென்று நேற்று அந்த அணையை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி…

தமிழகத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 186 கிராமங்கள் பாதிப்பு அமைச்சர்…

சென்னையில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர்,…

‘வெள்ள சேதத்துக்கு தமிழகம் காரணம்’ கேரள அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி, கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது. மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால்,…

கேரள வெள்ளம்: ”மக்கள் இந்த சூழலை எதிர்கொண்ட விதம் வியக்க…

கேரளா மெல்ல மெல்ல தனது இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் கேரளாவில் நோய் தொற்றை எதிர்ப்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர். இதற்கு மத்தியில் வெளிநாடுகள் அளிக்கும்…

பல்லாண்டு வரலாற்றை சுமந்த முக்கொம்பு அணை.. உடைந்து நொறுங்கிய அவலம்!

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணை உடைந்துள்ளது. இந்த அணைக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்த அணை உடைந்தது அந்த பகுதி மக்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்தது.…

‘தமிழர்களை நாங்க தப்பா நினைச்சிருந்தோம், இப்போ உங்க மனசை புரிஞ்சுக்கிட்டோம்!’-…

"எல்லாருக்கும் வணக்கம், நான் பேசும் தமிழில் எதாவது பிழை இருந்தால் முதலில் மணித்துவிடுங்கள். என் பெயர் ஸ்ரீஜித், நான் கேரளாதான், பாலக்காடு என் ஊர். முன்னெல்லாம் கேரளாவில் தமிழ்நாட்டு மக்கள் என்று சொன்னாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள். அவர்களுக்கு படிப்பு குறைவு என்று நிறைய பேர் அவர்களை தவறாக…

தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம்

'இருக்கு... ஆனால், இல்லை!' ஒரு படத்தில் காமெடிக்காக சொல்லப்பட்ட டயலாக், தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையாகியிருக்கிறது. 60 வீடுகளோடு செல்வ செழிப்பாக இருந்த கிராமம் ஐந்து வருடத்துக்கு முன்னாடி காணாமல் போய்விட்டது. இப்போது ஊர் இருக்கிறது. குடியிருக்க மக்கள் இல்லை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் யூனியனில் இருக்கிறது…

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்

ஐதராபாத், ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் 10-ம் வகுப்பு மாணவியை ஆங்கில ஆசிரியர் ராம்பாபு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைந்த போது, கருவை கலைப்பதற்கான மத்திரைகளையும் கொடுத்துள்ளார். சிறுமிக்கு அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டதை…

8 வழிச்சாலை: நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது –…

சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய…

சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம்…

திருவனந்தபுரம், கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான பேரழிவை சந்தித்தது. 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த பேரழிவால் சுமார் 250-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இதில் சபரிமலைப் பகுதி அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப்…

லட்சக்கணக்கில் தமிழர்கள் போன் செய்கிறார்கள்.. உதவிகள் குவிகிறது.. கேரள எம்பி…

திருவனந்தபுரம்: கேரளா மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள் லட்சக்கணக்கில் தினமும் போன் செய்வதாக பாலக்காடு பகுதியை சேர்ந்த கேரளா எம்பி ராஜேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். கேரளாவில் மீட்பு அணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் இருந்து அங்கு உதவிகள் குவிந்து வருகிறது. கேரளாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக…

கேரளாவுக்கு ஏற்பட்டது அதிதீவிர இயற்கை பேரிடர்! அறிவித்தது மத்திய அரசு

மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. #keralafloodlosses #keralafloodlosses #keralanaturaldisaster கேரளாவுக்கு ஏற்பட்ட பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு புதுடெல்லி: கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை…

வெள்ளம் வடிந்தது: கேரளவாசிகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

கேரளாவின் ஒவ்வொரு குடிமகனையும் கண்ணீரில் ஆழ்த்திய மழை ஒரு வழியாக நின்றுவிட்டது. புதிதாக வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்பதுதான் வெள்ளத்தில் உயிரைக்காப்பாற்றிக் கொண்டவர்கள் தற்போது எதிர்கொள்ளவுள்ள புதிய சவால். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள்; சுமார் அரைமில்லியன் மக்கள் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள் என அரசே அறிவித்துள்ள நிலையில், கேரளாவில் நாம்…

ஓய்ந்தது மழை.. பெட்ரோல், டீசல் போட நீண்ண்ண்ண்…ட கியூவில் காத்திருக்கும்…

திருச்சூர்: திருச்சூரில் பெட்ரோல் டீசல் போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்து வந்த மழையால் அந்த மாநிலமே வெள்ளக்காடானது. இதையடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பத்தினம்திட்டா, செங்கனூர், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.…

2 நாளில் 2 லட்சம் பேர்.. களத்தில் இறங்கி காப்பாற்றிய…

திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை காப்பாற்றுவதில் அம்மாநில மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பல லட்சம் மக்களை இவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு இவர்களை கைவிட்டுவிட்டதாக பெரிய புகார்…

காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம்.. நள்ளிரவில் உடைந்த கொள்ளிடம் பாலம்

திருச்சி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. நேற்று இரவோடு இரவாக இந்த பாலம் உடைந்தது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு…

கேரளா: ‘அணையும் ஆபத்தும்’ – மனித தவறால்தான் பெருவெள்ளம் ஏற்பட்டதா?

கேரளாவில் பேரழிவு வெள்ளம் ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அந்த மாநிலம் தெனிந்திய மாநிலங்களிலேயே நீர் மேலாண்மையில் மோசமாக செயல்படுவதாக இந்திய அரசாங்க அறிக்கை ஒன்று எச்சரித்திருந்தது. இமயமலையை ஒட்டி இல்லாத மாநிலங்களில், கேரள மாநிலம், நீர் மேலாண்மையில் 12 வது இடத்தில் இருந்தது. அந்த மாநிலம் பெற்ற…

அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக…

சென்னையை சேர்ந்த 3 வயது சிறுமி சஞ்சனா மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்றதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். #Chennai #Sanjana சென்னையை சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில்…

கேரள கனமழை வெள்ளத்தால் ரூ.19 ஆயிரத்து 512 கோடி இழப்பு,…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம், ரூ.19 ஆயிரத்து 512 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கம் போல் பெய்யும் தென்மேற்கு பருவ…

ஆற்று நீர் கடலில் கலப்பது அவசியமானதே, ஏன்?

இந்த ஆண்டு காவிரியில் எதிர்பாராதவிதமாக பெருமளவில் தண்ணீர் பாயும் நிலையில், இந்த நீரைக் கடலில் கலக்கவிடக்கூடாது. தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் சேமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுகின்றன. ஆனால், ஆற்று நீர் கடலில் கலப்பது மிகவும் அவசியம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். இந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதியன்று…

காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் நேற்று முன்தினம் தமிழகத்தின் காவிரி கரையோர…

இன்று இரவு முதல் 3 லட்சம் கனஅடி நீர்;கொள்ளிடம் அணைக்கரை…

கொள்ளிடம் ஆற்றில் அதிகம் தண்ணீர் திறக்கப்பட்டிப்பதால் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் ஆளுமை தலைமை அலுவலகத்தை வைத்திருந்த ஆங்கிலேயர்கள்  கடலூர் மாவட்டத்திற்கு சாரட் வண்டி மற்றும் சீப்களில் சென்றுவரும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அனைகளுடன் கூடிய பாலத்தை கட்டினர். அந்த பாலமை சென்னையில் இருந்து…