பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு..
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். கடந்த 60 நாட்களாக ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி…
ஹாங்காங்கில் தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியை கைது செய்ய சீன அரசு…
பன்னாட்டு வைர நகை வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர்களும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி…
போராட்டக்களமாக மாறிய அண்ணாசாலை: போக்குவரத்து கடும் பாதிப்பு
சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த போராட்டங்களால் அண்ணாசாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் மறியல் போராட்டமும், இன்னும் பல அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தி…
‘கர்நாடகத்துக்கு மின்சாரம்’ – நெய்வேலியில் அனல் மின்நிலையம் முற்றுகை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என்ற கோஷத்துடன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நெய்வேலி அனல்மின் நிலையத்தை இன்று (செவ்வாய்கிழமை) முற்றுகையிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றன. ரயில் மறியல்,…
நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து…
நெல்லை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பாளையங்கோட்டை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்தவர் 40 வயதான செல்வம். கூலி தொழிலாளியாக பணியாற்றும் இவர் சில நேரங்களில் டிரைவர் வேலையையும் செய்து வந்தார். ஆனால் செல்வம் தினமும் மது…
காவிரி வாரியம் அமையாது.. உச்சநீதிமன்றமே கூறிவிட்டது.. கர்நாடக தரப்பு வழக்கறிஞர்…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகும் சீனியர் வழக்கறிஞர்களில் ஒருவரான மோகன் காதர்க்கி கூறியுள்ளார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள்…
காவிரி – வரைவு செயல் திட்டத்தை மே 3-க்குள் வகுக்க…
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் நீதிபதிகள் கூறினர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசுக்கு…
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்படவில்லை – சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தகவல்..
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
‘ரெயில்களை நடுவழியில் மறித்து போராட்டம்’
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரயில்களை நடுவழியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. அந்த நாளிதழ், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை…
காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது – சீமான்!
நாகூர் : காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது.…
கர்நாடகத்திற்குள் தமிழக வாகனங்கள் செல்லாது!
கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு இடையில் காவிரி விவகாரம் தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை கர்நாடக மாநிலத்திற்கு வாகனத்தை இயக்க மாட்டோம் என தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் நந்து தெரிவித்துள்ளார். -60secondsnow.com
குமரியில் 1,000 வள்ளங்களுடன் கடல் முற்றுகை: சரக்குப் பெட்டக முனைய…
சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு கடல் பகுதியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடல் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்திற்கும், மணக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று…
சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் வாழ்த்து… ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை…
சென்னை: காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சதீஷின் சாதனையை பாராட்டும் விதமாக அரசு சார்பில் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்று…
காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரி ஆற்றில் மணலில் புதைந்து,…
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு விவசாய சங்கத்தினர், கல்லூரி மாணவர்களும், போராட் டத்தில் குதித்துள்ளனர். காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தொிவிக்கும் விதமாக தமிழகம்…
பிட்காயின் வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும் விற்கவும் தடை விதித்தது இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் வங்கி. பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. கிரிப்டோ கரன்சி…
ஒரு துணைவேந்தராக இருக்கக் கூட தமிழர்களுக்கு தகுதி இல்லையா.. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த போது அவரை நேரில் அழைத்து விளக்கம் அளித்த ஆளுநர் அதே வேகத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தவரை நியமித்திருப்பது அதிர வைத்துள்ளது. தமிழகத்தில் நேரடியாக அதிகாரத்தை பிடிக்க முடியாத பாஜக ஆளுநரை…
மாநில உரிமைகளுக்காக போராடும் தமிழகமும், ஆந்திராவும்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் விளையாட்டு விளையாடுவதாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாங்கள் கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில், தமிழகமும் ஆந்திராவும்…
“அமைதியாக இருங்கள்! தமிழகத்துக்கு அறிவுரை அளித்த உச்சநீதிமன்றம்”
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வேறொரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதியிடம் தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா, ஏன் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகின்றன என்று கேள்வி…
அண்ணா பல்கலை., துணைவேந்தர்- ஒரு தமிழருக்குக் கூடவா தகுதி இல்லை?…
சென்னை : கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா என்கிற பேராசிரியரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எடுத்திருக்கும் முடிவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா என்பவரை புதிய துணை வேந்தராக நியமிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளியான…
காவிரி: மத்திய அரசு அலுவலங்களுக்கு திரும்பும் திசையெங்கும் பூட்டு… வலுக்கும்…
ராமேஸ்வரம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம்…
அதிமுக, திமுக, பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து மத்திய அரசுக்கு…
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தியது. இதில் 5 இடங்களில் சுங்கச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த…
வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? போராட்டங்கள்தான் தீர்வா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை சுற்றித்தான் கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. பெரிய கட்சிகளும், இயக்கங்களும் ரயில் மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம் என்று போராடி வருகிறது என்றால், சாமானிய மனிதர்கள் இந்தியா தமிழ் நாட்டிற்கு துரோகமிழைத்துவிட்டது (IndiaBetraysTamilNadu) என்ற…
ஐபிஎல் எதிர்ப்பு, என்எல்சி முற்றுகை, மத்திய அரசு அலுவலங்களுக்கு பூட்டு-தமிழ்…
சென்னை: தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வேல்முருகன் தமிழகத்தில் ஐபிஎல்போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் சார்பில்…























