விஷ ஊசி விவகாரம்! மறுக்கும் இலங்கை இராணுவம்

விஷ ஊசி விவகாரம் முற்றிலும் பொய்யானது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளமை தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம் பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே…

வடக்கில் தற்போது அமைக்கப்பட்டு வரும் விகாரைகளுக்கு என்ன பதில்? சி.சிறீதரன்…

வடக்கில் அமைக்கப்பட்ட விகாரைகளை அகற்ற முடியாது எனக் கூறும் அமைச்சர் தற்போது அமைக்கப்பட்டுவரும் விகாரைகளைத் நிறுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு - கொக்கிளாய் கருணாட்டுகேணி பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு இப்போது விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.…

எங்களுடைய போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை : வடக்கு முதல்வர் உணர்ச்சிப் பேச்சு

ஆயுதம் ஏந்திப் போராடினோம். ஆனால், தற்போது அந்தப் போராட்டம் மெளனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்களுடைய போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை. நாங்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவையிருக்கிறது. எங்களுடைய தனித்துவமான மனித வளத்தை நாங்கள் பாவிக்க வேண்டும். எங்களுடைய அறிவைப் பாவிக்க வேண்டும். எங்கள் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை வேறொரு வகையில்…

யாழில் மாபெரும் பேரணி! அனைவரையும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள்

தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம், கலாசாரம், மொழி என்பவற்றை அழித்தல், குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் போன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் ஒட்டு மொத்தமாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் முடிவின்றி மீண்டும் மீண்டும் நிகழும்போது அவற்றிக்கு எதிராக சந்ததி சந்ததியாகப் போராடிக் கொண்டிருக்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலைக்கு எமது மக்கள் தள்ளப்படுகின்றனர் என…

நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் நிலையான…

மதுரையில் முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கம் 04 நிகழ்வு கடந்த பத்தொன்பதாம் திகதி மாலை நான்கு மணியளவில் மதுரை பில்லர் மையத்தில் நடை பெற்றது. சங்கம் 04 அமைப்பின் தலைவர் அருட்திரு.ஜெகத்கஸ்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,…

புலம்பெயர் மக்களின் முதலீடுகள் வடக்கில் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவும்:…

வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால், பொருளாதார நெருக்கடியினைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முதலீடுகள் அரசியல் தீர்விற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு, பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும்…

காணாமல் போனோருக்கான அலுவலகம் நிறுவுவது குறித்து மீள சிந்திக்குமாறு கோரிக்கை!

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் நிறுவுவது குறித்து மீள சிந்திக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படைவீரர் அமைப்பு ஒன்றினால், அமெரிக்காவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை இலங்கையில் அறிமுகம் செய்வது குறித்து மீளவும் சிந்திக்குமாறு, தேசிய படைவீரர் ஒன்றியத்தின் அழைப்பாளர் ரியர் அட்மிரால் சரத்…

சர்வதேச நீதி வேண்டி கிளிநொச்சியில் திரண்டது மக்கள் பேரலை!

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒன்றிணைந்த 200க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகமாகிய அறிவகத்தில்…

வடக்கு மீதான அமெரிக்காவின் திடீர் கரிசனையின் மர்மம்

கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. ஒன்று அமெரிக்க தூதுவர் அத்துல் கெசாப் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியமை. இரண்டாவது அமெரிக்க விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானத்தில் வந்த அமெரிக்கப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ஐந்து நாள் மருத்துவ முகாம்…

யாழில் அமெரிக்க சீ.ஐ.ஏ!! புலிகளிற்கு ஏற்றிய ஊசியே அப்துல் கலாமிற்கும்??…

தற்போதைய அரசியலில், முன்னாள் போராளிகளுக்கான விஷ ஊசி விவகாரம், தென்னிலங்கை அரசியலிலும், கூட்டு எதிர்க்கட்சியிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மைத்திரி ரணில் கூட்டணியில் சிக்கல்கள் போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் சிரேஷ்ட சட்டவாளரும் மூத்த அரசியல் ஆய்வாளருமான எம்.எம். நிலாம்டீன் தெளிவு படுத்தியுள்ளார். மேலும், இலங்கைக்கு…

விஷ ஊசி விவகாரம்! போராளிகளைச் சோதிக்கும் திட்டத்தில் மாற்றம்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மாற்றம் மேற்கொண்டுள்ளது. வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முன்னர் தீர்மானிக்கப்பட்டது. எனினும், தற்போது அதனை விடுத்து அனைத்துப் போராளிகளையும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும்,…

விஷ ஊசி விவகாரம்! பரிசோதனைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சர்…

யாழில் ரவுடிக் கும்பல்களை அடக்க தமிழ் பேசும் பொலிஸார் களத்தில்…

யாழில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ் பேசும் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்குவேலியில் ரவுடிக் கும்பல் ஒன்றின் வாள் வெட்டினால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். குடும்பஸ்தர் தனது வீட்டுக்கு முன்னால் நின்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய…

காணாமல் போனோர் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகமவின் பரிந்துரை ஏற்கப்படுமா?

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மெக்ஸவெல் பரணகமவின் தலைமையிலான குழுவினர், தமது இறுதியறிக்கையில் உள்ளக பொறிமுறைக்கான இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். சிறப்பு நீதிமன்றம் மற்றும் உண்மையை கண்டறியும் குழு என்பனவே அவையாகும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தக்குழுக்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான…

ப(பி)ச்சைத் தமிழன்….! முன்னாள் போராளிகளின் அவலத்தின் பின்னால்..!

இந்த பிரபஞ்சத்தில் ஆசியாவின் முத்தாக அடையாளம் காணப்பட்ட அந்தத் தீவில் தான் அவர் அவதரித்தார். இல்லை உருவெடுத்தார். இல்லை இல்லை உருவானார்.. இன்னும் இல்லை உருவாக்கப்பட்டார்..! இவ்வாறான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதினாலும், அவரின் பிறப்பை எப்படி வர்ணிக்க முடியும். அவர் இப்படித் தான் ஆவார் என்று தாயும்…

இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா? ஜனாதிபதியின் இரகசியத்தின் உள்நோக்கம்!

கடந்த கால ஆட்சியில் இடம் பெற்ற திருட்டுகளையும் ஊழல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததைப்போல் பாதுகாக்கப்பட்ட இரசியங்களை வெளியிடுட்டு எதிர்ப்பவர்களை வீதியில் அலைய விடுவேன் எனஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பகிரங்கமாக கூறிய கருத்தே தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. இங்கு ஜனாதிபதி என்ன இரகசியத்தை வெளியிடப்போகின்றார் என்பது அனைவராலும்…

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு – மனோவிடம் இருந்து அவசர கடிதம்! விசஊசி…

விஷ ஊசி விவகாரத்தால் உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விவரங்களை வழங்கினால், மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், விக்னேஸ்வரனுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலில் மேலும்…

விஷ ஊசி விவகாரம்! தமிழர்களை கைவிட்டதா அமெரிக்கா?

விஷ ஊசி விவகாரம் தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பின்வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. முன்னாள் போராளிகள் 14 பேர் வரை விஷ ஊசி பரிசோதனைக்கு வடக்கு முதலமைச்சரின் செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பரிசோதனை செய்வதற்குரிய உபகரணங்கள் இல்லை என…

புலிகள் வசம் இருந்த 6 ஆயிரம் படையினரை காணவில்லை?

விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 6 ஆயிரம் படையினர் காணாமல் போயுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த 6 ஆயிரம் படையினருக்கு என்ன நடந்தது, என்ன செய்தார்கள் என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சிங்களவர்கள், தமிழர்கள்,…

விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசு சதி!

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு விச ஊசிகள் ஏற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் மரணமடைந்தது தெரிந்ததே. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தினை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை கொண்டுவந்து சோதனை என்ற பெயரில் சில பரிசோதனைகளை நடத்தி விச ஊசிகள் போடவில்லை என்று என்று…

விடுதலைப்போராட்டத்தில் நேர்மையாக நடந்துகொண்ட விடுதலைப்புலிகள்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடுவில் இடம்பெற்று வரும் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலனியில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள் மற்றும் உறவுகளை இழந்தவர்கள் இந்த விடயத்தினை கூறியுள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தக்குற்றம் குறித்து தற்போதைய…

இரட்டை பிரஜாவுரிமையும் அதன் பின்னாலுள்ள சதியும்! புலம்பெயர்ந்தவர்களுக்கான உளவியல் போர்!!

இலங்கையில் நீண்ட காலம் நிலவிய கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. யுத்தம், குண்டுவெடிப்பு, ஷெல் வீச்சு, உயிரிழப்புகளின் கணிப்பீடுகள் என்ற சொற்பிரயோகங்கள் மாறி, நல்லிணக்கம், சமாதானம் என்ற வார்த்தைகள் உயிர் பெற்றுள்ளன. இரத்தம் தோய்ந்த நிலங்களில் வசந்தங்கள் வீசுவதாக மாயை. பிணக்குவியல்களின் மீது கொண்டாட்டாங்கள்,…

கிழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கிய விடுதலைப்புலிகள்!

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்குள் குழப்பத்தை மூட்டிவிட்டனர் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம் முபீன் தெரிவித்தார். இடம்பெயர்ந்து அசையாச் சொத்துக்களை இழந்த ஏறாவூர் பொதுமக்களுடனான சந்திப்பு இன்று ஏறாவூர் மக்காமடி பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய…