‘தமிழ் மக்களுக்குப் பாதகமான தீர்வை ஏற்கமாட்டோம்!- யாழில் சம்பந்தன்

தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில்உறுதியுடன் இருக்கவேண்டும்' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அமரர் தர்மலிங்கத்தின்…

யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா…

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைமுறை குறித்து, இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் இணைந்து முடிவெடுக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார். தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் முடிவில், வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய மூன் இக் கருத்தைத்…

மலேசியாவில் மகிந்தவிற்கு நேர்ந்த கதி தெரியுமா : தமிழர்கள் அவர்…

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே மலேசிய மண்ணில் காலடி எடுத்து வைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று இன்று புத்ரா வணிக மையத்தில் திரண்ட மலேசியத் தமிழர்கள் பலர் வலியுறுத்தினர். மலேசியாவில் வாழும் பல நூறு உணர்ச்சி மிக்க தமிழர்கள் திரண்டு எழுந்து கோஷங்களை…

பான் கீ மூன் இன்று யாழ். விஜயம்! ஆளுநர், முதலமைச்சரையும்…

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்கிறார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் இவர் அங்கு சந்திக்கின்றார். நண்பகல்…

தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில்…

20154ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கினாலும் தமிழர்கள் விடயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஆட்சியில் நடந்த அதே நீதி நிர்வாகங்களே இந்த ஆட்சியிலும் நடைபெற்றுவருகின்றது. சிங்கள அரசிற்கு எதிராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை நல்லிணக்கம் என்ற போர்வையில் பங்காளியாக…

ஆதிவாசிகளும் போதை பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள்

ஆதிவாசிகளும் போதை பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில தெரிவித்துள்ளார். இதன்காரணமாக ஆதிவாசிகளின் கலாச்சாரம் சீரழிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் சமூகப் பிரச்சினைத் தோன்றியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளின் தம்பான கிராமத்திற்குள் வரும் வெளியாட்கள் தமது பிரதேச மக்களை போதைபொருள் பாவனைக்கு அடிமையாக்குவதுடன், போதை பொருள் விற்பனைக்கும் தூண்டுவதாகவும்…

பான் கி மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் கவனயீர்ப்பு…

பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள் என ஐ.நா செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பொது மக்கள் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவித்தார். போர் நடைபெற்ற போது, தமிழ் மக்களை…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெளிச்சம் கொடுக்குமா பான் கீ மூனின்…

தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், தங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே வடக்கு - கிழக்கு தமிழர் புதிய ஆட்சி மலர்வதற்கு பிரதான காரணமாக இருந்தனர். மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் தமிழர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு சென்ற நிலையில் தான் இந்த…

இன்று இலங்கை வரும் பான் கீ மூன் வடக்கு முதல்வரை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று புதன்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 2ம் திகதி வரை தங்கியிருந்து பல்வேறு தரப்பினர்களைச் சந்திக்கவுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

தமிழ் பாடசாலை உருவாகுவதை இனவாதத்துடன் பார்க்காதீர்கள்! அரசாங்கம் கோரிக்கை

வத்தளை - ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை தாம் பாராட்டுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிகல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், இதற்கு அப்பிரதேசத்தில் உள்ள…

யாழ் மண்ணின் காலத்தால் அழியாத இந்துப் பாரம்பரியம்

யா ழ். தமிழர்களுக்குரிய இனத்துவ அடையாளமாக நல்லூர்க் கந்தன் ஆலயம் விளங்குகின்றது. இலங்கையின் வட பகுதித் தமிழ் மக்கள் உலகின் எப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நல்லூர்க் கந்தனை தங்களது குலதெய்வமாகவே என்றும் போற்றி வழிபடுகின்றனர். இலங்கையின் வரலாற்றை நோக்குவோமானால், நல்லூர்க் கந்தன் ஆலயம் மிகவும் தொன்மை மிக்கதாக விளங்குகின்றது.…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு – மாபெரும்…

'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு' என்ற கருப்பொருளுடன் மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி உள்ளது. குறித்த ஊர்வலம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடங்கி ஐ.நா அலுவலகம் வரை செல்ல உள்ளது. மேலும், குறித்த ஊர்வலம் சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்குமான கற்றைகள் நிறுவகத்தின் ஒழுங்கமைப்பில்…

அடிப்படை வசதியின்றி தவிக்கும் இலங்கை அகதிகள்!

இந்தியாவின் காட்டுமன்னார் கோவில் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர் என தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்…

30 வருடங்களின் பின் புத்துயிர் பெறும் ஆனையிறவு

1937ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது 1990ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் 2004ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்த நிலையில், முப்பது ஆண்டுகளின் பின்னர் இன்று மீண்டும் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை…

போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் முப்படையினருக்கும் என்ன…

போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் இங்கு என்ன வேலை? என ஆவேசத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன். மறைந்த இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 89 ஆவது பிறந்த நாள் நினைவுப்பேருரையும், நூல் வெளீயீடும்…

காணாமல் போன தமிழர்கள் கதி என்ன?? சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை

உலகின் பல நாடுகளில் பேரினவாத அரசுகளாலும், அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் படுகொலைகள் நடைபெற்ற காலங்களில் காணாமல் போன தமிழர்கள் கதி என்ன? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உலகின் பல நாடுகளில் பேரினவாத அரசுகளாலும், அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் படுகொலைகள் நடைபெற்ற காலங்களில்…

நீதியான விசாரணையை வலியுறுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் மற்றும் முன்னாள் போராளிகள் உயிரிழப்பு குறித்து பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 Downing street, London,…

யாழில் தலைதூக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்

கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற யாழ் குடாநாட்டிலே இன்றைய களநிலவரங்கள் திசைமாறிய சமுதாயத்தின் அடையாளமாக உருவெடுத்துக் கொண்டு இருக்கின்றது. போருக்குப் பின்னரான வாழ்வியல் என்பது பல சமூக சவால்களைக் கொண்டதாக அமைந்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அந்தச் சவால்களின் முகங்கொடுப்பு என்பது எமது அடுத்த தலைமுறையை நிலைப்படுத்துவதாக…

வடக்கில் புதிதாக காணிகளை அபகரிக்க இராணுவம் திட்டம்?

தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக்கூறி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் அன்றாடம் எழுந்த வண்ணமே உள்ளன. அந்த மக்களிடம் இலங்கை அரசும் தமிழ் அரசியல் தலைவர்களும் காணிகள் விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர். இங்கு நல்லாட்சி அரசு திட்ட மிட்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு…

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனடிப்படையில், சிறு சிறு குற்றங்களுக்காகவும்,…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!

வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. இலங்கையில் மத வழிபாடுகளை மேற்கொள்ளவதற்கான உரிமையை மீறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலிருந்து புத்தர் சிலைகளை அகற்ற முயற்சிக்கப்படுகின்றது. இது குறித்து கவனம்…

பிரபாகரனை கண்டுபிடிக்க வேண்டும் என முறைப்பாடு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என முறைப்பாடு செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முறைப்பாட்டை செய்வதற்கு முன்னதாக இது குறித்து பிரபாகரனின் உறவினர்களிடம் பேச உள்ளதாக வட மாகாணசபையின்…

விக்னேஸ்வரனின் ஆதரவு இல்லாமல் நன்மையில்லை…! தமிழ்த் தலைமைகளும் மறந்தனவோ?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது அரசாங்கம் அதிருப்தி கொண்டிருக்கின்றது. அவர் மீது ஏன் இவ்வளவுக்கு அரசாங்கமும், வடக்கு ஆளுநரும் கொதிப்பில் இருக்கின்றார்கள் என்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே கிடைத்திருக்கின்றது. அரசாங்கம் வடக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதரவு கொடுப்பதில்லை. அல்லது அதில் கலந்து கொள்ள முயற்சிப்பதில்லை…