பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கொத்தணி குண்டு பயன்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு குறைவு!…
இறுதிப் போரின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடாத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் சர்வதேச சமூகம் நட்புறவு பாராட்டி வருவதாகவும் இதனால் விசாரணைகளுக்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும்…
வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டால், முஸ்லிம் ஒருவரை முதல்வராக ஏற்க…
படித்த பக்குவமான முஸ்லிம் ஒருவரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராகவிருக்கின்றோம். எமது பெரும்பான்மை பாதுகாக்கப்படுவதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துவதாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்…
பொறுப்புக்கூறல் விடயத்தில் உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும்:ஐக்கிய நாடுகள் சபை!
பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்னின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் இடையில் உடன்பாடுகள் இருக்கின்றன.…
75 நாட்கள் அல்ல 75 நொடிகள் கூட இந்திய மீனவர்களுக்கு…
இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் வடபகுதி மீனவர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை…
மனித உரிமைகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படுமா? த.தே.கூ, நிஷாவுடன் கலந்துரையாடல்
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷாபிஷ்வால் மற்றும் உதவிச் செயலாளர்டொம் மெலினாவ்ஸ்கி ஆகியோருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இக்கலந்துரையாடல் நிகழ்வு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றது. இதில், இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இடம்பெற்றுவருகின்ற பல…
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர்…
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். அதைவிடுத்து வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கவே கச்சதீவை மீட்போம் என்ற விடயத்தை ஜெயலலிதா முன்வைக்கின்றார் என்றும்…
தொடரும் கலாச்சார இனவழிப்பு, தமிழர் தாயகத்தில் புதிதாய் முளைத்தெழும் பௌத்த…
கடந்த காலங்களில் தமிழர் தாயகம் தொடர்பான பல காத்திரமான ஆய்வு தொகுப்புகளை பிரசுரித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கழக 32ம் கூட்டத் தொடரில் கையளிக்கவென புதியதொரு ஆவணத்தை தயாரித்திருந்தனர். 2009ம் ஆண்டின் பின் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பின் பன்முகப்படுத்தப்பட்ட விளைவுகளையும் குறிப்பாக சிறிதும்…
சர்வதேச விசாரணைப் பனிப்போர்! அமைச்சரவையில் இன்று வாதம்!
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் உள்ளடக்கம் குறித்து அரச உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில்…
இறுதி யுத்ததில் இடம்பெற்றது என்ன? சிங்களவர்களும் அறிந்துகொள்ளட்டும்
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தென் இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கதின் தலைவர் ரவீந்திர முதலிகே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…
யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை! இரா.சம்பந்தன்
போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு…
உண்மை கண்டறியும் ஆணைக்குழு – குற்றவாளிகளை தப்பிக்க விடும் உத்தியா?
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதில்அரசாங்கம் உறுதியுடன் இருப்பதா வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் கொழும்பில்நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை அவர் தனது கருத்தின் ஊடக வலியுறுத்த…
இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்
இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் தொழில்களை இடைநிறுத்தும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று(09) வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது முடிவெடுக்கப்பட்டதாக…
யுத்தத்தால் நொந்து போயிருக்கும் எம்மை சிலர் குழப்ப முனைகிறார்கள்! சி.வி.…
வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா ஓமந்தைப் பகுதியில் அமைப்பதற்கு உடனடியாக காணியை கையளிக்க முடியுமென வடமாகாண காணி ஆணையாளர் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு 2010 ஆம் ஆண்டிலேயே மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட…
யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை மழுங்கடிக்கும் கஞ்சா
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா மீட்புக்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடுவதனூடாக, யாழ். மாவட்டத்தின் மீதான வெளிச்சமூகத்தின் பார்வை மாற்றமடைந்து எமது சமூக கலாசாரம் மழுங்கடிக்கப்படுகிறது' என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டத்தில்…
வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை சர்ச்சை! மங்களவுக்கு எதிராக போர் கொடி
ஜனாதிபதியின் கருத்துக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பின் தினேஸ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். பாராளுமன்ற வாளகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்தன…
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு எதிராக வழக்கு?
ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர இலலங்கைப் புத்திஜீவிகள் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர். மனித உரிமைப் பிரகடனங்களை மீறி இலங்கைக்கு எதிராக பரிந்துரைகளை முன்வைத்துள்ளார் என சயிட் அல் ஹூசெய்ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே சயிட் அல்…
இறுதிப்போரில் கொத்துக்குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை! சாட்சியளிக்க நான் தயார்! சரத்…
இறுதிப்போரின்போது இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இறுதிக்கட்டச் சமரின்போது இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரத்துடன் சர்வதேச ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தேசிய…
உண்மை கண்டறியும் ஆணைக்குழு அமைக்க எதிர்ப்பு
இலங்கையில், இறுதிக்கட்ட போரின் பொது இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு உண்மை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சிகளின் அமைப்பு சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இலங்கை ராணுவத்தினரை பழிவாங்குவதற்காகவே இந்த ஆணைக்குழுவை அமைக்க…
இன்னும் தொடரும் அவல வாழ்வு!
அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இன்னும் பல தோட்டங்கள் அபிவிருத்தி காணாத நிலையிலேயே காணப்படுகின்றன. நானுஓயா, வங்கிஓயா தோட்டம் இதற்கு நல்லதொரு உதாரணம்.இத்தோட்டத்தில் 95 குடும்பங்களைச் சேர்ந்த 575 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட லயன்களில் மக்கள்…
இளஞ்செழியன் தீர்ப்பிற்கு ஹுசைனின் அறிக்கையில் முக்கிய இடம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ம் திகதி கிளிநொச்சி…
சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கை தீவிரம்!
போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சுஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளது. "வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில் 21 ஆயிரத்து 663 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.…
தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும்.அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும்…
அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்! கூட்டமைப்பு கோரிக்கை
நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று…
