பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புலம்பெயர் வாழ் மக்களின் பலமும், பலவீனமும்!
உலக விடயங்களில் பொது நலம், சுய நலம் போன்று பலம், பலவீனம் என்பதும் பலரினால் பலவிதங்களில் ஆராயப்பட்டுள்ளது. பொது நலத்தில் சுயநலமா? அல்லது சுயநலத்தில் பொதுநலமா? என்பது போல் பலம் பலவீனமாகிறதா? பலவீனம் பலம் ஆக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்று உலகில் பதில் கிடைத்ததாகவில்லை. இலங்கைத் தீவு வாழ் ஈழத்…
மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் எடுபிடியாக இருக்க முடியாது! விக்கினேஸ்வரன்
மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் எடுபிடியாக இருக்க முடியாது. இரு அரசாங்கங்கள் இடையிலும் புரிந்துணர்வு உண்டாக வேண்டும். புரிந்துணர்வு இல்லையாயின் நாம் சரியாக செயற்பட முடியாது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அதிகாரிகள் குழு ஒன்று இன்றைய தினம் யாழ். குடாநாட்டுக்கான…
புலம்பெயர் தமிழர்களை மீள அழைக்கும் இலங்கை!
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களை மீளவும் குடியேறுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், யுத்த காலத்தில் பல்லாயிரகணக்காக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருக்கின்றனர். இந்நிலையில் கடந்த…
கைது செய்வதிலும் பார்க்க சுடுவது இலகுவானது! இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை
அத்துமீறும் தமிழக மீனவர்களை கட்டுபடுத்த துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழியென அரசாங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண மீனவ சங்கத் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் அதனை…
மீள்குடியேற்ற செயலணிக்கு வடக்கு முதல்வர் ஆட்சேபனை
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்ய மத்திய அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணியை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 57ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது மத்திய அரசாங்க ம் வடகிழக்கு மாகாணங்களில் குறிப்பாக…
யுத்தம் இளைஞர், யுவதிகளின் சக்திகளை வீணடித்துள்ளது! கூட்டமைப்பு சாடல்
30 ஆண்டு கால கொடிய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த எமது இளைஞர், யுவதிகளின் சக்திகள் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அவர்களின் சக்திகள் வெளிகொண்டு வரப்பட வேண்டும். அதற்கு கிராம மட்டத்தில் விளையாட்டுக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றத்தில்…
ஏழு வருடங்கள் கடந்த போதிலும் ஆறாத உளக்காயங்களுடன் வன்னி மக்கள்!
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும் அது ஏற்படுத்திச் சென்ற வடுக்கள் பாதிக்கப்பட்டோர் உள்ளங்களிலுருந்து இன்னும் நீங்கி விடவில்லை. அன்றாடம் தமது வாழ்க்கைக் கோலங்களில் வலிகளைச் சுமந்தவாறே அவர்கள் வாழ்கின்றார்கள். தொன்றுதொட்டு கலாசார, பண்பாடுகளுடன் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்களை இழந்து, தமது உறவுகளை…
வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே வரிச் சலுகை வழங்கப்படும்
அளித்த வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்பட்டாலேயே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதுஇந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா உள்ளிட்ட பிரதிநிதிகள்பிரசல்ஸிற்கு விஜயம் செய்துள்ளனர். இதில், இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக…
ஒரு கூர்வாளின் நிழலில் எனக்குத் தெரிந்த தமிழினியை காணவில்லை! முன்னாள்…
ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…
மலேசிய உதவிப்பிரதமர் இலங்கைக்கு விஜயம்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மலேசிய உதவி பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi (டட்டுக் சேரி கலாநிதி அஹமட் ஹமிடி) நாளை இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளார். இரு நாட்டு நல்லுறவின் ஒருக்கட்டமாக அவரின் விஜயம் அமையவுள்ளதாக…
தலைவரை இழுத்து பேசிய விமல் வீரவன்ச!
பிரபாகரன் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லையாம்!! விமல் குமுறுகின்றார் சிங்கள மாணவர்களை தாக்கிய சம்பவத்தின் பின்னணியில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமிழ் அடிப்படைவாதிகள் மற்றும் இனவாதிகளுமே உள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் நடக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. உத்தேச அரசியலமைப்பு திருத்தமும்…
தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது : பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்
தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர்…
தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்
தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியில் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை- ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால…
வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிகள் ஏற்றுக் கொள்ளவார்களா ?
தமிழர் தரப்போடு முஸ்லிம் காங்கிரஸ் என்றுமே இணையாது ! இணையும் தேவை இல்லை! ஒரு கொள்கை இல்லாது ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன நமக்கு முழு அமைச்சு அரை அமைச்சு கிடைத்தால் சரி என்கின்ற கூட்டம்தான் முஸ்லிம் அரசியல் கூட்டம். ஹக்கீம் அணியை எடுத்துக் கொண்டால்…
மஹிந்த, மைத்திரி அரசு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களுக்கு செய்தது…
நாங்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் எது வித பலனும் இது வரை கிடைக்கவில்லை என கண்ணீர் மல்ல மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா குறிப்பிட்டுள்ளார். எனது மகனை கடத்திச் சென்றவர்கள் இவர்கள் தான் என அடையாளப்படுத்திய போதும் இது வரை…
சிங்கள மக்களிடத்தில் காணப்படும் அர்ப்பணிப்பு தமிழ் மக்களிடத்தில் இல்லை! யாழ்.…
நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் தேவைக்கு அதிகமாகவே அர்ப்பணிப்பு செய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் அர்ப்பணிப்பினையோ முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்…
வாழ்வாதார உதவி வேண்டாம் எமது பிள்ளைகளே வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டோரின்…
"வாழ்வாதார உதவிகள் எவையும் எமக்குத் தேவையில்லை. அதனை நாம் ஏற்கப்போவதில்லை. எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தினர். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் நேற்று சந்தித்து தமது பிரச்சினைகளைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்கான கலந்துரையாடலை ஏற்பாடு…
யுத்தக்குற்ற விசாரணைகளில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம் என மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. எனினும், இலங்கை அரசியல் தலைமைகள் சர்வதேச…
கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!!
இன்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது . இது தொடர்பாக தெரியவருவதாவது, வாகனத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கதிர்காமம் மலை பகுதியை சேர்ந்த வாகன சாரதிக்கு முந்தி செல்ல இடமளிக்கவில்லை எனக்…
வெளிநாட்டு நீதிபதிகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை!
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள பொறிமுறைக்கு வெளிநாட்டுநீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை. அதற்கு பதிலாக அரசாங்கம், தமது உள்ளுர் ரீதியில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைபொறுத்திருந்து அவதானிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு கிளையின் உதவிதலைமையாளர் போல் கோட்ப்ரே Godfray தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் காத்திரமில்லை என்ற நிலைமை ஏற்படும்போது…
புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை தொடர்பாக பேசவேண்டியுள்ளது! சம்பந்தன்
புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை தொடர்பாக மேலும் பேசவேண்டியுள்ளது என எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், முக்கியமாக இரண்டு விடயங்கள் குறித்து…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சண்டையாம்…! பின்புலம் என்ன?… நல்லிணக்கம்???
புலிகளை அழித்துவிட்டால் நாட்டில், அமைதி, சமாதானம், நல்லிணக்கம், இன ஒற்றுமைகள் வந்துவிடும் அல்லது அடைந்துவிட்டோம் என்பது பொய் என்பதை அடுத்தடுத்து நாட்டில் நிலவும் நிகழ்வுகள் திடமாக எடுத்துக்காட்டுகின்றன. இலங்கை மூவினங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனால் மூவினங்களிடத்திலும், மேலிடம் ஓரிடமாக இருப்பின் அவ்விடம் நிச்சையமாக அடக்கி ஆளும் சிந்தனையில்…
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா இதய சுத்தியுடன் உதவ வேண்டும்: நஸீர்…
இலங்கையில் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் அமெரிக்கா உதவ வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், நேற்று வியாழக்கிழமை கிழக்கு…
