பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
தமிழீழபெண்களை கொடுமை படுத்தும் நுண்கடன்-வவுனியாவில் ஆர்பாட்டம்
நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வடதமிழீழம் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம்இ வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம்இபசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச…
பொய்யான விடயங்களை அருட்தந்தை பதவிகளில் இருப்போர் பரப்பிவருவது சாதாரணமான விடயம்தான்;…
எப்போது முரண்பாடுகள் வந்தாலும் தமிழ் தேசியத்தின் பெயரால் விட்டுக்கொடுங்கள் என்று ஏன் எல்லோரும் இந்துக்களுக்கு மட்டும் உபதேசம் செய்கின்றீர்கள்? என இந்து சம்மேளன தலைவர் டி.அருண்காந்த் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். திருக்கேதீஸ்வர வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில்…
பிரபாகரன் எப்படி தலைவராக உருவானார்; ஜனாதிபதி மைத்திரி சொன்ன உண்மைத்தகவல்!
நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எம்மால் முடிந்ததை செய்வோம் : அமெரிக்காவின்…
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசுடன் பேசி எம்மால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தையும் செய்வோம் என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர் அமெரிக்கன் கோணரில் யூடிப் கலையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கு கொண்டார். இந்நிகழ்வினை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய…
மன்னார் மனிதப் புதைகுழியின் காலத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியல் ஆய்வு
இலங்கையிலுள்ள மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையின் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642ஆம் ஆண்டு காலப்…
இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் சட்ட விரோதமாக குடியேற முயற்சி: 30 பேர்…
போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவ்வாறு செல்லும் பலர் இலங்கையில் கைது செய்யப்படுவது மட்டுமன்றி, இலங்கை கடல் எல்லையை தாண்டி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றடைந்த பலரும் நாடு கடத்தப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில், சட்ட விரோதமான முறையில்…
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர் – காணிகள் விடுவிப்பு குறித்து வெளியிட்ட…
வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர், வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளையும்…
பிரபாகரன் உருவாகுவதற்கு காரணம் இதுவே ! மனம் திறந்த மைத்திரி
தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு…
இந்து – கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகளுக்கு இடம்…
இலங்கையில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்ளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளார் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்காரப் பலகை அண்மையில் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
முழு உண்மையையும் மறைத்து வெளியான மன்னார் மறை மாவட்ட குரு…
மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய அலங்கார வளைவு தொடர்பாக தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவ படுத்தும் அறிக்கை என கூறி முழு உண்மையையும் மறைத்து ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுதே என்ற அறிவுகூட இல்லாமல் பிராடு அறிக்கை…
நந்திக் கொடியுடன் செம்மணியில் சிவலிங்கம்! சைவ மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்!!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிவலிங்கம் ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் உள்ள யாழ். வளைவுக்கு அதாவது ஏ9 விதிக்கு அருகாமையில் குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றில் சுமார் ஐந்து அடிகள் மண்ணை உயர்த்தி பெரிய சிவலிங்கமொன்று வைக்கப்பட்டு நந்திக்கொடியொன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த…
ஈழத்தில் புத்தனின் படையெடுப்பிற்கு எதிராய் தோன்றும் சுயம்புலிங்கங்கள்! அதியம்! அவசியம்!!
இன்று காலையில் இருந்து இப்படம் பேஸ்புக்கில் பல்வேறு தரப்பினரால் பல்வேறு தலைப்புக்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகிறது அனேகமாய் அவை இச்சம்பவத்தை கேலிசெய்யும் வகையில்தான் அமைந்திருக்கின்றன. சிவலிங்கம் சுயமாய் தோன்றியதா இல்லையா என்பதை விட அங்கு அது தோன்றியதில் அல்லது வைக்கப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது? இதையேன் ஈழத்திருநாட்டின் புதல்வர்கள்…
இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் முன்வரைவு…
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகளால் எதிர்வரும் 20ஆம் திகதியன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. இதற்க்கான தீர்மான முன்வரைவு “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்…
ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா?
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின்…
கேப்பாப்புலவு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு வரை பேரணி!
கேப்பாப்புலவு இராணுவ முகாம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டம் இன்று 727வது நாளாக தொடர்கிறது. கேப்பாப்புலவு இராணுவ முகாமின் நுழைவாயிலிற்கு அருகில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்று புது வடிவம் பெற்றதாக கேப்பாப்புலவில் இருந்து வாகனப்…
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் முன்னாள் போராளிகள் பங்கெடுப்பு!
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிற்கு சென்று கலந்து கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற பங்காளிக்கட்சியாக செயற்படும், ஜனநாயக போராளிகள் கட்சியே இந்த யோசனையை…
கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று (25) ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்…
வடக்கு ஆளுநரின் வழி, எவ்வழி?
வவுனியா நகரில் எழுந்தருளி, கருணை மழை பொழியும் கந்தசுவாமி கோவிலின் புதிய சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம், அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடை சூழ, அமைதியாக, பக்திமயமாக வெள்ளோட்டம் நடைபெற்றது. “எங்கட நிலமெல்லாம் எங்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன; எங்கட இடமெல்லாம் சிங்கள மயமாகின்றன; சொந்த நாட்டிலேயே பல்லாண்டு காலம், நடைப்பிணங்களாக…
காணாமல்போனோருக்கு நீதி கோரி வட தமிழீழம் நாளை முற்றாக முடங்கும்
பூரண ஹர்த்தாலுக்கு சகல தரப்பினரும் முழு ஆதரவு; கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை திங்கட்கிழமை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இடம்பெறாது என்பதுடன்,…
ஸ்ரீலங்கா இராணுவத்தால் தற்போதும் ஈழத்தமிழர்களுக்கு சித்திரவைகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சர்வதேச…
சித்திரவதைத் தொடர்பில் ‘சகிப்புத்தன்மை முற்றிலுமின்மை’ எனும் கொள்கை குறித்து ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படையினரால் தொடர்ச்சியாக தமிழர்கள் சித்திரவைதக்கு உள்ளாவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சித்திரவதையில் இருந்து…
இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு…
இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான விசுவநாதன் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.…
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை ஆரம்பம் ! அசௌகரியத்தில் மக்கள்
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களையடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கொக்குவில்,இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று காங்கேசன்துறை, பலாலி, மானிப்பாய், பிறவுண் மற்றும் பருத்தித்துறை வீதிகளிலும் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு…