பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு 252 கோடி ரூபாவினால் குறைப்பு
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வடக்கு மாகாணசபைக்கு,…
இடைக்கால அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது – சிறிலங்கா அதிபரிடம்…
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமல் வீரவன்ச தலைமையிலான…
கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்?
எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசியலமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத்…
ஐ.நா நிபுணர்களின் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா
ஐ.நா சிறப்பு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று சிறிலங்கா வந்துள்ளார். இவரது…
வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் – வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்று காலை 09:30 மணியளவில்,…
இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி?
யாழ்ப்பாணத் தெருக்களில் இருந்து துப்பாக்கி குண்டுகளின் சத்தமும் வெடி குண்டுகளின் சத்தமும் ஓய்ந்து இன்னும் நீண்ட காலம் ஆகிவிடவில்லை. கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் வெற்றிகொண்ட 2009-ஆம் ஆண்டுதான் அந்தச் சத்தங்கள் யாவும் ஓய்ந்தன. குண்டு வெடிப்புகளும், மனிதர்கள் காணாமல் போவதும்…
ஈழத்தின் புதுகுடியிருப்பில் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் புதுகுடியிருப்பு அலுவலகத்தில் இன்று பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வை கைவேலி பெண்கள் அமைப்பின் தலைவர் எம்.பி. இராயேஸ்வரி தலைமை தாங்கி நடத்தியிருந்தார். இதன்போது எழுச்சிப் போரில் உயிர் நீத்த பெண் மாவீரர்களின் நினைவாக சுடர் ஏற்றி…
மகாநாயக்கர்கள் தவறான புரிதல்களைக் களைய வேண்டும் – விக்னேஸ்வரன் செவ்வி
சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார். அண்மையில் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த திரு.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ள…
போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்க முயற்சி – மேஜர் ஜெனரல் அமல்…
போர்க்குற்றங்கள் தொடர்பாக வன்னி களமனையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைப் பொறுப்புக்கூற வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வுகாண சிறிலங்கா இராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகம் ஒன்று விளக்கமளித்த போதே…
தமிழ் அரசியல் கைதிகள் மூவர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 15வது…
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று திங்கட்கிழமை 15வது நாளாகவும் தொடர்கின்றது. அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், இன்றையதினம் அநுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் அவர்கள், கலந்து கொள்ள மாட்டார்கள்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும், வவுனியாவிலும் கவனயீர்ப்பு…
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இன்று முற்பகல் 10.00 மணி முதல், யாழ். நகரிலுள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
புதிய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’க்குப் பதில் ‘ஐக்கிய’ இடம்பெற வேண்டும் –…
புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர்,…
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை கவலைக்கிடம்
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர் கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றக்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வேண்டும் – அனந்தி…
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
ஒன்றுபட்ட சிறிலங்காவின் இறைமையின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா…
ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 8 ஆவது கருத்தரங்கின் முடிவில், சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய குழுவினர், சிறிலங்கா சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினரைச்…
அரசியல் தீர்வைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விடமாட்டோம்: மாவை…
“அரசியல் தீர்வினைக் காணுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவற விட மாட்டோம். அதுபோல, கொள்கைகளிலிருந்தும் விலக மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மாவை சேனாதிராஜா…
துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை…
நாட்டிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்கள், துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைகள் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு ஸ்ரீலங்கா முஸ்லிம்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் – பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்டுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்வும், தங்களுக்கு கிடைக்கவில்லை…
இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம்-மனோ…
இந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை சம்பந்தமாக நேற்று முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…
வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து சிங்கள மக்கள் அச்சம் கொள்ள…
அரசியலமைப்பின் ஊடாக பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் ஆசிய- பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்டுடன், நேற்று கொழும்பில்…
போர்க்குற்றச்சாட்டு: ஐ.நாவுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார்! – இலங்கை இராணுவத்…
“இலங்கைப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்தார். கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர்…
இனப்பிரச்சினைக்கு 70 வருடங்களாக தீர்வு காண முடியவில்லை: ரணில்
நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் பொருளாதார சுபீட்சத்தையும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் அடைய முடியாமல் போனதே எமது பாராளுமன்ற முறைமையிலும் ஜனநாயகத்திலும் உள்ள குறைபாடாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் சுபீட்சத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு முதலில் பிரதான தேசிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு அரசியல்…
அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – பீரிசிடம் சம்பந்தன்…
அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தவறானது…

















