தமிழரசுக் கட்சியை விமர்சிப்பவர்கள் முதலில் தங்களைத் திரும்பிப் பாருங்கள். தமிழன்

தமிழரசுக் கட்சியை இல்லாமல் ஒழிக்கவென்று பரந்த அளவில் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதன் மூலம் ஏனைய கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். இந்த நம்பிக்கையானது எதிர்வரும் தேர்தலில் தெரியவரும் என்று ஒவ்வொரு தேர்தல்களிலும் நம்பி மண் கவ்வியது தான் மிச்சம்.…

தொடர்ந்து போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இடைக்கால அறிக்கை –…

அரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே  எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை…

தியாக தீபம் திலீபனுக்கு நினைவுச் சுடர் ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர்..

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் எனவும்  தியாக தீபம் திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் அம்பாறை – கல்முனையில் இன்று…

சிறிலங்கா அதிபரிடம் விரைவான முன்னேற்றங்களை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை…

சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்று வருவதாகவும், முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக சிறிலங்காவுக்கு வருமாறும், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை ஐ.நா…

தமிழ் மக்களின் சுயமரியாதை புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பன புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர்…

புதிய அரசியலமைப்பு, 13வது திருத்தச் சட்டத்தை விடவும் மேம்பட்டதாக இருந்தால்…

“தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் புதிய அரசியலமைப்பானது, நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13வது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால், அதை வரவேற்போம்” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அரசியலமைப்பு…

பிரிக்கப்படாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை சகல…

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை சகல கட்சிகளும், குழுக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சகலரும் இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரித்து பலம் வாய்ந்த இலங்கை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அரசியலமைப்பு…

இடைக்கால அறிக்கை குறித்த நிலைப்பாட்டை விவாதத்தின் போது அறிவிப்போம் –…

அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, அரசியலமைப்பு சபையில் விவாதிக்கப்படும் போது வெளிப்படுத்தப்படும் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பின்னர், உரையாற்றிய போதே அவர்…

போர்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரைப் பாதுகாப்போம் – திலக் மாரப்பன உறுதி

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று அண்மையில் பிரேசிலில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இல்லை என்று சிறிலங்காவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். “ஜெனரல் ஜயசூரியவுக்கு…

சிறிலங்காவில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் –…

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார். அமைதிக்கான அனைத்துலக நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் 21ஆம் நாளை,…

சரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா விசேட…

ஈழத் தமிழர்களது சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது என ஐ.நாவின் விசேட பிரதிநிதி பேராசிரியர் அல்பிரட் சயஸ் தெரிவித்தார். பிரான்ஸ் தமிழர் மனித உரிமையத்தின் ஒருங்கிணைப்பில் உலக அணி (Global Allianes) என்ற அமைப்பினால் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் இதை குறிப்பிட்டார். இந்த கூட்டம் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்…

மாவீரர் துயிலும் இல்லங்களைப் பராமரிப்பதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில்…

யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று திங்கட்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில், இணைத் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை…

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- சிறிலங்கா…

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு அரசியலமைப்பின் சில பிரிவுகளுக்கு முரணாக இருப்பதாகவும், இதனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று…

போரில் தவறு செய்யாத படையினர் தண்டனைக்கு அஞ்ச வேண்டியதில்லை –…

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”காணாமல் போனோர் பணியகம் தனியே வடக்கு, கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள…

ஐ.நாவில் சிறிலங்கா அதிபரின் உரைக்கு எதிராக போராட்டம் நடத்த ஏற்பாடு

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. “சிறிலங்கா…

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்!

“ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் (Mental fetter)” -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 கடந்த கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின்…

ஈழத்து தமிழ் அறிஞர்க்கு தமிழகத்தில் உயர் கௌரவம்.

ஈழத்தின் புகழ்பூத்த இசைப்பேராசான் டாக்டர் நா.வி.மு நவரத்தினம், மற்றும் சர்வதேச விவசாய ஆய்வின் விஞ்ஞானியும் தற்போது பிரான்ஸ் கனடா நாடுகளில் வாழ்ந்து வருபவருமான முது முனைவர் கந்தையா தேவமனோகரன் ஆகிய இருவரையும் சென்னைப் பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கமும் இணைந்து சென்னையில் கௌரவித்துள்ளது. சென்னையை…

தமிழ் மக்களிடம் சமய ரீதியான வேற்றுமைகள் கூடாது: டி.எம்.சுவாமிநாதன்

தமிழ் மக்கள் மத்தியில் சமய ரீதியான வேற்றுமைகள் இருக்கக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலமே பல்வேறு முன்னேற்றங்களை அடைய முடியும் என்று இந்துமத அலுவல்கள், இந்து கலாசாரம் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை சைவ மாநாடு நேற்று…

20வது திருத்தச் சட்டத்தை தவற விட்டால் விமோசனம் கிடையாது: மனோ…

20வது திருத்தச் சட்டத்தை தவற விட்டால் விமோசனம் கிடைக்காது. எனவே, கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு திடன் கொண்டவர்களாக முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டு, இலங்கை சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் கொண்ட நாடாக…

சிறிலங்காவில் மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் – அமெரிக்க…

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட்  சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நிதிஉதவியை 92 வீதத்தினால் குறைக்கும், டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டத்தை நிராகரித்து, அமெரிக்க செனட் சபையின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான உப குழு…

தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின், 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின. இராசையா பார்த்திபன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், 15ஆம் நாள் நல்லூர் கந்தன் ஆலய…

சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது:…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருக்கும் வரையில், மாற்றுத்தலைமை பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் அரசியலில் தற்போது மாற்றுத்தலைமைக்கான வெற்றிடம் காணப்படுகின்றதா? என்று ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாவது, “மாற்றுத்தலைக்கான…

சிறிலங்காவுக்கு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் – மனித உரிமைகள்…

2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தின்  இலக்குகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா விடயத்தில், பல்வேறு நல்லிணக்கப் பணியகங்களை அமைப்பதும், முன்னேற்றங்கள் பற்றிப் பேசுவதும், 2015…