பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அஸ்கிரிய பீடத்தில் சங்கடமான நிலையை எதிர்கொண்ட விக்னேஸ்வரன் – ஏமாற்றத்துடன்…
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை தனியாகச் சந்திக்கச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சங்கடமான நிலையை எதிர்கொண்டு, அதிருப்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பும் நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் கண்டியில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரைத் தனியாகச் சந்தித்து மனம்விட்டுப் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்தச் சந்திப்புக்…
இலங்கை: காணாமல் போனோர் அலுவலகம் நடைமுறைக்கு வருகிறது
இலங்கையில் காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமையன்று நடைமுறைக்கு வருகின்றது. இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி (Gazette) அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டிருக்கின்றார். இது தொடர்பாக தேசிய நல்லிணக்க…
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை…
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட்…
தமிழ் மக்களை சிறிலங்கா அரசு நம்பவில்லை – விக்னேஸ்வரன்
வடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கருடனான சந்திப்பின் போது, வடக்கில் இராணுவத்தின் இருப்பை ஒரு அச்சுறுத்தல் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, கொழும்பு ஆங்கில…
சரத் பொன்சேகாவும் போர்க்குற்றச்சாட்டுகளும்- அனைத்துலக வல்லுனரின் பார்வை
சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டத்தால் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக – இவர் தூதுவராகக் கடமையாற்றிய பிரேசில்…
சிறிலங்கா காலவரம்பு நிர்ணயித்து துரிதமாகச் செயற்பட வேண்டும் – ஐ.நா…
காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இடம் வழங்க கிளிநொச்சி கோயில்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்துக்கு இடம் வழங்க முடியாது என்று கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் நிர்வாகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக 200 நாட்களுக்கு மேலாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு, குறித்த கோயில் நிர்வாகம் தன்னுடைய அறிவித்தல் கடிதத்தை வழங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அமைத்திருந்த பந்தல் அண்மையில்…
பிரபாகரனின் மகனைக் கொன்ற சிறிது நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ- ஜெயசூரியா…
சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா. தான் போர் நடைபெற்றவேளையில் வன்னி கூட்டுபடைத் தளத்தில் இருந்ததாகவும். தான் முள்ளிவாய்க்காலில் இருக்கவில்லை என்றும் நேரடியாக TV ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விடையம் யாவரும் அறிந்ததே. ஆனால் அதிர்வு இணையத்தால் பெறப்பட்டுள்ள…
தமிழ்மக்கள் அதிகாரப் பகிர்வையோ, தனிநாட்டையோ கோரவில்லையாம் – கமல் குணரத்ன…
வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரங்களையோ, நீதித்துறை அதிகாரங்களையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை என்று, போர்க்குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான எலிய அமைப்பின் தொடக்க விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைத்…
மகிந்தவைக் காரணம் காட்டி நழுவுகிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர்…
மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து…
தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 தமிழ் அரசியல் கைதிகள் மீதும் வழக்கு…
எந்தவித வழக்குகளும் பதியாமல் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 தமிழ் அரசியல் கைதிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே…
யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் இணக்கம்!
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்றை அமைப்பதற்கும், பொதுவான நினைவு நாளொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது. இது தொடர்பில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்த தனி நபர் பிரேரணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…
கண்டி மல்வத்த மகாநாயக்க தேரருடன் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு
வடமாகாண முதலைமச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று கண்டி மல்வத்த மகாநாயக்க திப்பொட்டுவாவே தேரரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தென்பகுதியில் பௌத்தர்களும் பௌத்த மகாநாயக்கர்களும் வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாண சபையையும் இனவாதிகள் என்ற நோக்கில் நோக்கப்படுகின்ற நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களான கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன்…
தமிழர்களின் சிந்தனையில் ஆயுத கலாசாரம்! – பொலிஸ்மா அதிபர்
கடந்த கால யுத்தம் காரணமாக ஆயுத கலாசாரத்திற்கு மத்தியில் வாழ்ந்த வடக்கு மக்களின் மனநிலையில், மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாசாரத்துடன் கலந்ததென குறிப்பிட்ட அவர், இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியமென மேலும்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் 200 நாட்கள் தாண்டியும்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை 200 நாட்களை நிறைவு செய்துள்ளது. யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை என்ன? இறுதி யுத்த நாட்களில் இராணுவத்திடம் தாம் ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது? என்கிற பல கேள்விகளோடு…
எழிலனுடன் அவரது மனைவி அனந்தி இருந்திருந்தால் எழிலன் எங்கே எனத்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி அனந்தியும் இருந்திருந்தால் எழிலன் எங்கேயிருக்கிறார் எனத் தெரிந்திருக்கும் என சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியும் போர்க்குற்றவாளியுமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்பொன்று(ITJP) பிரேசில்…
முதலமைச்சருக்கு எதிராக வழக்கு! – தமிழர் விடயத்தில் ஓர் முக்கிய…
வடமாகாண முதலமைச்சரின் சட்டமுரணான செயற்பாடுகளை தெளிவுபடுத்தி என்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால், 13 வது திருத்தச்சட்டம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் (புதன்கிழமை) டெனிஸ்வரன் விடுத்துள்ள ஊடக அமைச்சர் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.…
மட்டக்களப்பில் 6,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் உறவுகள்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 6,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எடுத்துரைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் செயற்பாட்டாளரான எஸ்.அரியமலர் இதனைக்…
20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதென்னும், அதில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால், அதன் பின்னர் பரிசீலிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. -puthinappalakai.net
தனது படை கண்ணியமாகச் செயற்பட்டது என்றால் அதனை நிரூபிக்க வேண்டிய…
தங்களது படை சரியான முறையிலே சர்வதேச நியமங்களைக் கடைப்பிடித்துத்தான் இந்தப் போரைச் செய்தது என்று நிரூபிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. இதற்கு முதற் சான்றாக அமையப் போவது ஜகத் ஜயசூரிய அவர்களின் வழக்கு என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்…
சுயநிர்ணய உரிமையும், இறைமையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் அடிப்படையானவை:…
“இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல்கோரிக்கை என்பதும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படியிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.“ என்று தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்…
20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு…
மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. சிறிலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, குழுநிலை…
இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட…
இலங்கை பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுகளுடான நினைவுப் பேருரையும், ‘இலட்சிய இதயங்களோடு’ என்னும் கருப்பொருளிலான நூல் வெளியீடும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். பொதுநூலக…
