பாகிஸ்தானில் ஐ.எஸ்.: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பினருடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை இன்னும் இரு…

சீன நிலக்கரிச் சுரங்கத்தில் தீ விபத்து: 26 பேர் சாவு

சீனாவின் லியாவ்னிங் மாகாணத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்தப் பகுதியில் ஏற்பட்ட 1.6 ரிக்டர் அளவிலான, லேசான நில நடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தத் தீ விபத்து நேரிட்டது. மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், ஆபத்தான நிலையில்…

பாகிஸ்தானில் 4 போலியோ மருத்துவ பணியாளர்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கச் சென்ற 3 பெண்கள் உள்ளிட்ட 4 மருத்துவப் பணியாளர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்கள் வீடுகளிலிருந்து மருத்துவ மையம் ஒன்றுக்கு குவெட்டா நகர புறவழிச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சுடப்பட்டனர். போலியோ…

200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்ற அமெரிக்கா: அதிர்ச்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அமெரிக்க படைகள் கொலை செய்தது, அந்த அமைப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில்…

தற்கொலைபடை தாக்குதலில் 60 பேர் பலி: போகோஹரம் தீவிரவாதிகளின் சதி?

நைஜீரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடும் நடத்தும் போகோஹரம் தீவிரவாதிகள் பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மெய்டுகுரி (Maiduguri) மற்றும் அபூஜா (Abuja) என்ற இடங்களில் உள்ள சந்தைகளில் இரு…

ஆப்கன் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் பக்டிகா மாகாணத்திலுள்ள கைப்பந்து மைதானத்தில் விளையாட்டுப் போட்டியைக் காண்பதற்காக கூடியிருந்த கூட்டத்தினரிடையே, பயங்கரவாதி ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இது, கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில்…

அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது:…

உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறிவருகிறது எனவும் 2020ம் ஆண்டுக்குள் இந்நாடு 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கூறும் போது உலகின் பல நாடுகளில் அணு…

மீன் வாங்க சென்ற 48 வியாபாரிகளை சுட்டுக்கொன்ற போகோ ஹராம்…

நைஜீரியாவில் 48 மீன் வியாபாரிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். நைஜீரியாவில் அட்டூழியம் புரிந்துவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், வடகிழக்கு நைஜீரியா மற்றும் சாட் நாட்டு எல்லைப்பகுதியை வழிமறித்தனர். இவர்கள், அங்கிருக்கும் மீன்பிடி கிராமமான டோரான் பாகா பகுதிக்கு வியாபாரத்துக்காக மீன் வாங்கச் சென்ற 48 பேரை கடந்த…

விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணித்த இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசியாவின் புதிய அதிபர் ஜொக்கோ விடோடோ, தனது மகனின் பட்டமளிப்பு விழாவுக்காக சிங்கப்பூருக்குச் செல்வதற்கு விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணம் செய்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது சொந்தத் தேவைக்கான பயணம் என்பதால், தனது தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல், பொது விமானத்தில் பயணித்துள்ள இந்தோனேசியாவின் புதிய அதிபர் தனது…

பாகிஸ்தானில் ஹிந்துக் கோயிலுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பாகிஸ்தானிலுள்ள ஹிந்துக் கோயில் ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், சிலை ஒன்றும், புனித நூல்களும் எரிந்து நாசமாயின. அந்த நாட்டின் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்கு, அங்குள்ள ஹிந்து சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ்…

கென்யா: பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக் கொலை

கென்யாவில், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவர்கள் 28 பேரை, அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சோமாலியா எல்லையையொட்டி அமைந்துள்ள மண்டேரா நகரிலிருந்து 31 கி.மீ. தொலைவிலுள்ள சாலையில், தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தை பயங்கரவாதிகள்…

நைஜீரியா: பயங்கரவாதிகளால் 45 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் கிராமம் ஒன்றில் போகோ ஹராம் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். அந்த நாட்டின் போர்னோ மாகாணத்திலுள்ள அஸாயா குரா என்னும் கிராமத்தில் இந்தத் தாக்குதல் புதன்கிழமை நிகழ்த்தப்பட்டதாக அந்தப் பகுதியின் ஊராட்சித் தலைவர் ஷெட்டிமா லாவான்…

அமெரிக்காவை வீழ்த்த புதினின் மாபெறும் சதி

அமெரிக்காவின் டொலர் மதிப்பை குறைத்து அந்நாட்டை வீழ்த்த, ரஷ்ய ஜனாதிபதி புதின் பெருமளவில் தங்கத்தை வாங்கி குவிக்கிறார். உக்ரைனின் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் புதினை அமெரிக்கா கடுமையாக கண்டித்து வந்துள்ளது. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த நிலையில், அமெரிக்காவோ தனது நட்பு நாடான…

அணு ஆயுதச் சோதனை நடத்துவோம்: வட கொரியா மிரட்டல்: ஐ.நா.…

தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, மீண்டும் அணு ஆயுதச் சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் ஐ.நா.வில் புதன்கிழமை…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் ஆயுத கிடங்கு தகர்ப்பு: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் குண்டுகளை தயாரிக்க பயன்படுத்திய தொழிற்சாலை கட்டிடம் ஒன்றின் மீது கனடிய யுத்த விமானங்கள் குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளன. ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை மீது கனேடிய போர் விமானங்களுடன், ஏனைய கூட்டணி நாடுகளின் விமானங்களும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கனடாவின் CF-18 வகை…

விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை தயாரிக்கும் அமெரிக்கா

விமானம் தாங்கி கப்பல் போன்று வானில் சிறிய விமானங்களை சுமந்தபடி பறக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது. தற்போது பல நாடுகள் விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளன. நடுக்கடலில் கப்பலில் தரை இறங்கும் போர் விமானங்கள் அங்கிருந்து பறந்து சென்று குண்டு வீச்சு நடத்துகின்றன. அதே போன்று தற்போது…

விண்ணில் திரியும் ரஷ்யாவின் மர்ம விண்கலம்! அதிர்ச்சியல் உலக நாடுகள்

ரஷ்யா ரகசியமான முறையில் விண்கலன் போன்ற மர்ம எந்திரத்தை விண்ணில் செலுத்தியது அம்பலமாகியுள்ளது. கடந்த டந்த மே மாதம் இந்த இயந்திரம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்த  தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அது விண்ணில் பறப்பதை சில நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் கண்டு…

உறையும் உயிர்கள்: பரிதாப வாழ்க்கையில் உக்ரைன் மக்கள்

உக்ரைன் நாட்டில் கடுங்குளிர் நிலவுவதால் அந்நாட்டு மக்கள் நிலத்தடியில் வீடு அமைத்து குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளனர். உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டில் நிலவும் கடுமையான குளிரைத்தான் அங்குள்ள மக்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் உள்ளனர். இதனால் இங்கு…

ஜெரூசலத்தில் யூத வழிபாட்டிடத்தில் தாக்குதல்

ஜெரூசலத்தில் கடந்த பல வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் ஒன்றில், யூத வழிபாட்டிடம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஆகியவற்றுடன் நுழைந்த இரு பாலத்தீனர்கள், அங்கு வழிபாட்டாளர்கள் 4 பேரைக் கொன்றதுடன் மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூவர் இஸ்ரேலிய அமெரிக்க இரட்டை…

ரஷியாவுடன் போருக்குத் தயார் உக்ரைன்

ரஷியாவுடன் முழுமையான போருக்குத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறினார். உக்ரைனில், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போரிடுவதற்காக ரஷியாவிலிருந்து அணி அணியாக படைவீரர்கள் அனுப்பப்படுவதாக உக்ரைன் கடந்த வாரம் புகார் கூறியிருந்தது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ஜெர்மனியிலிருந்து வெளியாகும் "பில்ட்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில்…

போக்கோ ஹராமுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்த கோரிக்கை

இஸ்லாமியவாத தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமின் தாக்குதல்களில் இருந்து வடக்கு நைஜீரியாவில் வசிக்கும் மக்கள் தாமே தம்மை பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று அங்கு மிகவும் செல்வாக்குப் பெற்ற பாரம்பரிய தலைவர் கூறியுள்ளார். கானுவுக்கான எமிரான முஹமட் சனுசி நைஜீரிய மத்திய வங்கியின் ஆளுனராக இந்த வருட முற்பகுதி…

நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை எளிதில் தடுக்க முடியும்

ஆட்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க உலகளாவிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நீரில் மூழ்கி உயிர்விடுவதை பெருமளவில் தடுக்க முடியும் என்றாலும், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் நிரில் மூழ்கி உயிரிழக்கிறார்கள் என்றும் அவ்வகையான…

18 சிரியா ராணுவ வீரர்கள் தலைதுண்டித்து படுகொலை

பெய்ரூட், நவ. 17–ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு தங்களை எதிர்ப்பவர்கள் மற்றும் மலைவாழ் பழங்குடிகள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை கொன்று குவிக்கின்றனர். சிறுபான்மை இன  பெண்களை கடத்தி சென்று அடிமைகளாக விற்கின்றனர். மேலும் தங்களை எதிர்க்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட…