இந்திய பத்திரிகையாளர்களை வெளியேற்றும் பாகிஸ்தான்

இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனிகேஷ் அலெக்ஸ் பிலிபஸ், மற்றும் மீரா மேனான் ஆகிய இருவரும் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு, பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி, 200…

துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 201 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி உள்ள சோமா நகரில் , இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீ தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர். நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து 'ஷிப்ட்' மாறும் போது…

நைஜீரியா: ‘கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும்’ புதிய வீடியோ

நைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான போக்கோ ஹராம் வெளியிட்டுள்ளது. நான்கு வாரங்களுக்கு முன் கடத்தப்பட்டிருந்த பள்ளிக்கூட மாணவிகள் இவர்கள் என்று நம்பப்படுகிறது. பள்ளிக்கூடத்திலிருந்து காணாமல்போன பெண் பிள்ளைகள் இவர்கள் என்றும், தடுத்துவைக்கப்பட்டுள்ள போக்கோ ஹராம் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டால்தான்…

யுக்ரெய்ன்: கிழக்கில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அதிபர் நிராகரித்துள்ளார்

யுக்ரெய்னின் கிழக்கிலே சில பகுதிகளில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் நடத்தியுள்ள உத்தியோகபூர்வமற்ற கருத்து வாக்கெடுப்பினை 'போலித்தனம்' என்று கூறி யுக்ரெய்ன் இடைக்கால அதிபர் ஒலெக்ஸாந்தர் துர்ச்சினொவ் நிராகரித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு சட்டப்படி செல்லாது என்று அவர் கூறினார். ஆனால் ரஷ்யாவோ, இந்த கருத்து வாக்கெடுப்பின் முடிவு மதிக்கப்பட வேண்டும்…

கடலுக்கு அடியில் கிளியோபாட்ராவின் அரண்மனை

கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன் புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த அரண்மனை புதைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட் தூண்களும், அரிய பொருட்களும் இதில் அடக்கம். கிளியோபாட்ராவின் மகனின் சிலையும், கடவுள்களின்…

ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 40 பேர் பலி

லிபியா கடற்பகுதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காப்பாற்றப்பட்டுள்னர். லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லிபியாவின்…

சுரங்கத்தில் வாடிய தொழிலாளி: 17 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட அதிசயம்

சீனாவில் சுரங்கம் ஒன்றில் சிக்கிய தொழிலாளி சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டில், இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டதால்…

பாகிஸ்தானில் போலியோ தலைத்தூக்குவதன் காரணங்கள்

பத்து ஆண்டுகளுக்கு முன் போலியோ நோயை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடக்கூடிய நிலையிலிருந்தது பாகிஸ்தான். ஆனால் போலியோ தடுப்பு என்பது முஸ்லிம்களை மலடாக்கும் சதிவேலை என்று பரப்பப்பட்ட அச்சம், தாலிபான்களின் எழுச்சி, போலியோ தடுப்பு ஊழியர்கள் சுடப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றின் காரணமாக தற்போது உலகிலே போலியோ வேகமாக அதிகரித்துவரும்…

ரஷியாவுடன் இணைக்கும் முயற்சி: உக்ரைன் கிழக்குப் பகுதியில் 11ஆம் தேதி…

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள். உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்த பிரிவினைவாதிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி ரஷிய…

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய சிறுமிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புக்…

நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறப்புக்குழு துவங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான்கெர்ரி கூறும் போது நைஜீரியாவில் கடந்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்பு குழு நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும்…

சீன விமானப்படைக்கு உதவும் குரங்குகள் பட்டாளம்

விமான தளத்தை பாதுகாப்பதற்காக சீனா விமானப்படை குரங்குகள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கவனித்து கொள்ள குரங்குகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சீனா விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குரங்குகள் அருகில் உள்ள மரங்களில் உள்ள கூடுகளை அழிக்க கற்று வருகின்றன. விமான நிலையத்தில்…

பாக்.: மதநிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்காக வாதடிய வழக்குரைஞர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் மத நிந்தனைக் குற்ற்ச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிவந்த முன்னணி வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்நாட்டின் மனித உரிமைக் குழுக்கள் கண்டித்துள்ளன. ரஷீத் ரஹ்மான் என்ற அந்த சட்டத்தரணி புதன்கிழமை இரவு முல்தான் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டிருந்தார்.…

அதிகாரத் துஷ்பிரயோகம்: தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு

தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்லுக் ஷினாவத் அவர்கள் பதவி விலக அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, புதிய பிரதமராக நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் நியமிக்கப்பட்டுள்ளார். இங்லுக் ஷினாவத் பதவியிலிருந்த போது, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார் என அரசியல் சாசன நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு…

உலக நகரங்களில் மக்களின் உடல நலத்தை கெடுக்கும் அளவுக்கு காற்று…

உலக நகரங்கள் பலவற்றில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார கழகம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஆசிய நகரங்களில் மிகவும் மோசம் என்று சொல்லும் அளவில் காற்று மாசடைந்துள்ளது. உலகெங்கிலுமாக 91 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து அறுநூறு நகரங்களில் காற்றின் தரத்தை ஆராய்ந்து…

மத சட்டத்தை மீறிய பெண்: 8 பேர் கொண்ட கும்பலால்…

இந்தோனேஷியாவில் முறையற்ற வகையில் 40 வயது திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்ததற்காக அந்தப்பெண் 5பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சவுக்கடி வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான அசேவின் பண்டா அசே நகரில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விதவை. இவர் 40 வயது நபர்…

கோகோ கோலா பானங்களில் சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்க முடிவு

  கோக்கோ கோலாவின் சில பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய தாவர எண்ணெயை நீக்க முடிவு   உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும்…

கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் செக்ஸ் அடிமைகளாக விற்பனை

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்தி போராடி வருகிறது. போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரியில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் விடுதிக்கு சென்று தீவிரவாதிகள்  காவலர்களுடன்…

மீண்டும் தலைதூக்கும் போலியோவை ஒழிக்க சர்வதேச முயற்சிகள்

உலகில் போலியோ இல்லாத நாடுகள் என்று ஒரு காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடுகளில் மீண்டும் அந்த நோய்-வைரஸ் பரவிவருவதாக சான்றுகள் உள்ள நிலையில், போலியோவை ஒழிப்பதற்கான புதிய வழிகாட்டல் விதிமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் இன்று திங்கட்கிழமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முடத்தை ஏற்படுத்தக்கூடிய, பெரும்பாலும் சிறார்களை தாக்கக்கூடிய போலியோ…

புதினுக்கு நோபல் பரிசு: ஒபாமா கிண்டல்

"ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்' என அமெரிக்க அதிபர் ஒபாமா கிண்டலாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில், செய்தியாளர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில், பிறரையும், தன்னையும் கிண்டல் செய்து அந்நாட்டு அதிபர் உரையாற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், 2014-ஆம் ஆண்டுக்கான இந்த…

ஆப்கன் மண்சரிவில் பலியானோருக்காக தேசிய துக்கதினம்

ஆப்கானிஸ்தானில் பெரும் மண்சரிவு ஒன்றில் கடந்த வெள்ளியன்று கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஒரு நாள் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. குடியிருப்புகளின் மீது மலைப்பகுதியொன்று சரிந்துவிழுந்ததில் பாறைகள் மற்றும் சேற்றுமண் மேடுகளால் புதையுண்டுபோன குறைந்தது 2000 பேர் தொடர்பில் நம்பிக்கை இழந்துவிட்டதாக வடகிழக்கு மாநிலமான பதாக்ஷானின் ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.…

கணவர்களின் விந்தணுவை கடத்தி குழந்தை பெறும் பெண்கள்

இஸ்ரேல் நாட்டில் சிறையில் இருக்கும் கணவர்களின் விந்தணுவை கடத்தி குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்ரீஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பகை இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கைது…

சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை

கிழக்கு யுக்ரெய்னில் 8 நாட்களுக்கு முன்னதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 7 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் சென்ற 5 யுக்ரெய்னியர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் இந்த கண்காணிப்பாளர்களை தமது விருந்தினர்கள் என்று விபரித்துள்ள ஸ்லாவியான்ஸ்க் நகரில் உள்ள ரஷ்ய ஆதரவு…

யுக்ரேன் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

கிழக்கு யுக்ரேனில் ஸ்லவியான்ஸ்க் நகரில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருவதாக யுக்ரேனின் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ஆர்ஸென் அவாகோவ் கூறியுள்ளார். அரச படைகள் நகரிலுள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் இன்னும் மூன்று சோதனைச் சாவடிகளை…